‘’கங்கை நதியில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலம், காக்கை, நாய்கள் உண்கிற அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன்பேரில், ஃபேக்ட்செக் செய்யும்படி, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வாசகர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்திலேயே இது ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் சார்பாக, getty images இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைப்பதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில், நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது 2015ம் ஆண்டில் வெளியான செய்தி என்று அறிய முடிகிறது.

Getty Images தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் புகைப்பட லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

GettyImages Link

இதன்படி, 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், கங்கை நதியில் 100 சடலங்கள் ஒதுங்கியிருப்பதை கண்டுபிடித்து, அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இதனை Getty Images இணையதளத்தில் 2014 என்று கேப்ஷனில், தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம், புகைப்படம் பதிவேற்றப்பட்ட தேதி 2015 ஜனவரி 14 என கூறப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் மட்டுமல்ல, இதனுடன் சேர்ந்த மற்ற சில மீட்புப் பணிகள் நடைபெறும் புகைப்படங்களும் Getty Images இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன.

இதில், குறிப்பிட்ட பகுதி எது என்று அடையாளமிட்டுக் காட்டியுள்ளோம். இதே இடத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகக் கூறி ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம். அதில், 2015 என தேதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடமும், உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் என்று உறுதியாகிறது.

HindustanTimes Link

இதேபோல, மற்றொரு இணையதளத்தில் வெளியான செய்தியையும் கீழே இணைத்துள்ளோம்.

Dailymail.co.uk Link

எனவே, 2015ல் உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை, Getty Images இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளனர். அந்த புகைப்படத்தை எடுத்து, தற்போதைய கொரோனா வைரஸ் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி ஷேர் செய்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கங்கை நதியில் கொரோனா நோயாளிகளின் சடலம்; நாய்கள், காகங்கள் உண்கிறதா?- இது பழைய புகைப்படம்!

Fact Check By: Pankaj Iyer

Result: Missing Context