ஆந்திராவில் முழு மது விலக்கு அறிவித்தாரா ஜெகன் மோகன் ரெட்டி?

‘’ஆந்திராவில் முழு மது விலக்கு – ஜெகன் மோகன் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் […]

Continue Reading

அலிகார் 2 வயது சிறுமி கொலையை மறைத்த ஊடகங்கள்! – எல்லை மீறும் சமூக ஊடக வதந்தி!

அலிகாரில் 2 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் இதைப் பற்றிய செய்தியை  ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிவோம்… தகவலின் விவரம்: ஆசிபாவை பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் ஏன் இதை பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை..? #ஊடகங்களே_ஏன்_இந்த_பாரபட்சம்.  #please_maximum_share Archived link படத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் […]

Continue Reading

போலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]

Continue Reading

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்தியை மறைத்த ஊடகங்கள்- விஷம பதிவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி கைது செய்யப்பட்டதாகவும் அதை ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட அன்னை?? தெரசாவின் மிஷனரி ஆப் சாரிட்டியின் சிஸ்டர் கைது… வழக்கம் போல *** ஊடகங்கள் கள்ள மவுனம் Archived link கன்னியாஸ்திரி ஒருவர் தலையில் கை வைத்தபடி கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் […]

Continue Reading

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரைச் சூட்டிய மத்திய அரசு– நிஜமா?

மும்பை துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் குத்துவிளக்கேற்றுகிறார். அவர் அருகில் தேவேந்திர ஃபத்னாவீஸ் உள்ளிட்டவர்கள் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பின்னணியில், ராஜேந்திர சோழன் 1 என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் அருகில், ராஜேந்திர சோழன் சிலை மற்றும் கப்பலின் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் […]

Continue Reading

தேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா?

‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் முடிவுகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link இதில், கனிமொழி சிறு வயதில் தனது தந்தை கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ முப்தாண்டுகளுக்கு முன்பு 1989ல் சென்னை கடற்கரையில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் கலந்து கொண்ட தேசியமுன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்றைய துணை பிரதமர் […]

Continue Reading

எச். ராஜா மாரடைப்பால் மரணம்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

‘’பாஜக தேசிய செயலாளர் திரு. எச்ச ராஜா மாரடைப்பால் மரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link அரசியல் அதிரடி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் அரசியல் உள்நோக்கத்திற்காக, வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பாஜக தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா தனது சர்ச்சையான கருத்துகளால் அவ்வப்போது, பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்து […]

Continue Reading