எம்ஜிஆர் அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி: ரஜினி பெயரில் போலி செய்தி!

“எம்.ஜி.ஆர் என்னை கட்டி வைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி” என்று ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் ஒரு சினிமா காட்சியை சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “எம்.ஜி.ஆர் என்னை கட்டிவைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி – ரஜினிகாந்த்” என்று இருந்தது. சினிமா காட்சிப் பகுதியில், “கருணாநிதி உன்னை காப்பாற்றினது […]

Continue Reading

அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்: உண்மை என்ன?

‘’அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Aanmikam News Link Archived Link ஆன்மீகம் என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் உள்ள மிக்கிபேசின் பாலைவனப்பகுதியில் 13.3 மைல் சதுர பரப்பளவில் இந்துக்களால் புனிதமாகக் […]

Continue Reading

முரசொலி ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினாரா?

முரசொலி நிலம் பிரச்னையில் ஆதாரம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ராமதாஸ் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை கொலாஜ் செய்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், டாக்டர் ராமதாஸ் படத்துக்கு மேல் “முரசொலி ஆதாரம் இல்லை, 2010ல் அதிமுக அறிக்கையில் இருந்ததால் சொன்னேன் – ராமதாஸ் அந்தர்பல்டி” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம் உண்மையா?

‘’ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதே செய்தியை Star Tamils என்ற இணையதளமும் பகிர்ந்திருந்தது.  Facebook Link  Archived Link  Star Tamils News Link Archived Link  உண்மை அறிவோம்: மேற்கு வங்கம் மாநிலம், ரானாகத் பகுதி ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வந்தவர் […]

Continue Reading

சீமான் கையில் ஆமை- புகைப்படம் உண்மையா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆமை ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரில், ஆமையை கையில் ஏந்தியபடி சீமான் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அனைவருக்கும் அமாவாசையின் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துக்கள். எங்கள் வீட்டில் ஆமை கறி உங்க வீட்டில்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, அமாவாச – Naga […]

Continue Reading

அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது: ஸ்டாலின் பெயரில் வதந்தி

‘’அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link அமாவாச – Naga Raja Chozhan MA எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாலிமர் தொலைக்காட்சி லோகாவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ‘’மானமுள்ள திமுகவினர் அதிமுக அரசின் பொங்கல் பரிசான […]

Continue Reading

ஃபேஸ்புக் வதந்தி: போரில் வெற்றி பெற நரபலி தவறில்லை என்றாரா அமித்ஷா?

போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்று சாணக்ய நீதி கூறுகிறது என்று அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “போரில் வெற்றி பெறுவதற்காக நம் வீரர்களையே நரபலி கொடுப்பதில் தவறில்லை என்கிறது சாணக்ய நீதி – அமித் […]

Continue Reading

மிக அரிதான மரபியல் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

அஸ்ஸாமில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் தாயின் குடலை கர்ப்பப்பையில் இருந்த சிசு சாப்பிட்டதால்தான் தாய் உயிரிழந்தார் என்று பரிதாபமான பச்சிளம் குழந்தை படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 15 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், மிகவும் பயங்கரமான தோற்றத்தில் பச்சிளம் குழந்தை […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதா?

‘’லஞ்சம் வாங்கிய பாஜக தலைவர்கள் பட்டியலை வெளியிடுவோம்,’’ என்று ஸ்டெர்லைட் நிறுவனம் மிரட்டியதாகக் கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Vyasar Lawrence என்பவர் பகிர்ந்துள்ள இந்த ஃபேஸ்புக் பதிவை, சுமார் 10,000 பேர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துள்ளனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பார்க்கும்போதே, இது தவறாக சித்தரிக்கப்பட்ட நியூஸ் கார்டு என […]

Continue Reading

300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்: உண்மை என்ன?

‘’300 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய சீனர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  இனி என்றும் அம்மாவின் நினைவில்   எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவனை சீன தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 300 அடி ஆழம் […]

Continue Reading

பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்று எச்.ராஜா கூறினாரா?

“பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்துள்ளது” என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அத்திவரதர் மற்றும் எச்.ராஜா படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு கீழ்தான் மற்ற இந்து அடிமைகள் என்பதை அத்திவரதர் வருகை நிரூபித்திருக்கிறது […]

Continue Reading

முரசொலி விசாரணையின்போது கழிவறை செல்வதாகக் கூறி தப்பினாரா பாஜக செயலாளர் சீனிவாசன்?

முரசொலி நிலம் தொடர்பான விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருவதாக கூறி பின்வாசல் வழியாக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் சீனிவாசனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “முரசொலி விவகாரத்தில் விசாரணை நடைபெறும்போது கழிவறை சென்றுவருதாக கூறி பின் வாசல் வழியாக தப்பி ஓடிய […]

Continue Reading

இங்கிலாந்து அரசிக்கு அணிவகுப்பு மரியாதை அளித்த ஆர்.எஸ்.எஸ்?

இங்கிலாந்து அரசிக்கு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மரியாதை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் வரும்போது, அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தது போன்ற படம் ஒன்ற பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “இவர்களா தேச பக்தர்கள்? – விடுதலைப் போராட்ட போராளிகளை காட்டிக்கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு அணிவகுத்து மரியாதை செய்யும் ஆர்.எஸ்.எஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

ரத்த புற்றுநோய்க்கு அடையாறு கேன்சர் இஸ்டிடியூட்டில் இலவச சிகிச்சை தரப்படுகிறதா?

ரத்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த மருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இதுவரை கொடிய நோயாக இருந்த ரத்த புற்றுநோயை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், புற்றுநோய் மருத்துவமனையின் முகவரி, போன் நம்பர் கொடுத்துள்ளனர். பல பேர் பார்க்க […]

Continue Reading

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி விசாரணைக்கு பயந்து தப்பி ஓடிய உதயநிதி?

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நடந்த முரசொலி நிலம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் உதயநிதி ஸ்டாலின் பயந்து தப்பி ஓடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முரசொலி அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில், “மூல பத்திரத்தைக் காட்டு… இல்ல முரசொலிய பூட்டு” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முரசொலி விசாரணைக்கு பயந்து எஸ்சி எஸ்டி […]

Continue Reading

ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா: வைரல் வீடியோ உண்மையா?

‘’ஐந்து நட்சத்திர ஓட்டலில் சர்வர் வேலை செய்யும் ஒபாமா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Post Link Archived Link  தஞ்சை ராஜா என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை நவம்பர் 22, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உணவு பரிமாறுவதை காண முடிகிறது. வீடியோவின் மேலே, ‘’பதவி வெறி பிடித்து அலையும் நம்மூர் அரசியல்வாதிகளிடையே […]

Continue Reading

ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டாரா?

‘’ஓபிஎஸ் பிறப்பு சான்றிதழ் வெளியிட வேண்டும்,’’ என்று ராமதாஸ் கேட்டதைப் போல ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Post Link  Archived Link  Tamizha – தமிழா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராமதாஸின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர், ‘’தனது பிறப்பு சான்றிதழை வெளியிட்டு தமிழக மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே ஆம்பளை தானா என ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும்,’’ என்று […]

Continue Reading

கர்நாடகாவில் மசூதிக்குள் மறைக்கப்பட்ட பிரம்மாண்ட கோவில் இதுவா?

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் மசூதி ஒன்றுக்குள் மறைக்கப்பட்டிருந்த கோவில் என்று ஒரு பிரம்மாண்ட கோவில் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட குகைக் கோவில் சிலை படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “கர்நாடகா ரெய்ச்சூர் மசூதிக்குள் மறைக்கப்பட்ட கோவில். ரெய்ச்சூரில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளிவாசலை இடித்தபோது, மறைக்கப்பட்ட தேவி ஆலயம் வெளிவந்தது. வாழ்க இந்துக்களை வஞ்சிக்கும் […]

Continue Reading

யூ டியூப் சேனல்கள் PRESS, MEDIA என்று சொல்லக்கூடாது: மத்திய அரசு உத்தரவு உண்மையா?

‘’யூ டியூப் சேனல்கள் பிரஸ், மீடியா என சொல்லக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை நமது நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கோரினார். இதையேற்று, ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் யாரேனும் செய்தி வெளியிட்டுள்ளனரா என தகவல் தேடினோம். அப்போது, கடந்த 2 நாட்களாக, இந்த செய்தி […]

Continue Reading

நித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா?

நித்தியானந்தா நாட்டைவிட்டுத் தப்பி ஓட முயலும்போது அவரை அமித்ஷா பிடித்த தருணம் என்று நித்தியானந்தா காலில் அமித்ஷா விழுந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நித்தியானந்தா காலில் ஒருவர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்க அமித்ஷா போல தெரிகிறது. ஆனால், உடல்வாகு அமித்ஷா போலத் தெரியவில்லை. காலில் விழும் அவரை தூக்க நித்தியானந்தா கையை அவருடைய […]

Continue Reading

1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Eeram Magi எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை மே, 6, 2014 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அந்தக் கால மளிகைக் கடை ஒன்றின் முன்பாக சிலர் நிற்பதை காண முடிகிறது. அதில், ‘’இன்று தி.நகரையே தனதாக்கிகொண்டிருக்கும் […]

Continue Reading

சென்னை ஐஐடியில் மனுதர்ம சாஸ்திரம், தனித்தனி கை கழுவும் இடம் என்று பகிரப்படும் படங்கள் உண்மையா?

சென்னை ஐஐடி-யில் மனு தர்ம சாஸ்திரத்தில் அசைவ உணவு உட்கொள்வது பற்றி குறிப்பிட்டுள்ள கருத்து கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது போலவும், சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி கை கழுவும் இடம் உள்ளது போலவும் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூன்று படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. முதல் படத்தில், “நூறு வருஷ காலம் வருஷந்தோறும் அசுவமேத யாகம் செய்த பயனும், மாமிச போஜனம் […]

Continue Reading

புதைக்கப்பட்ட மனித உடலை தோண்டி தின்னும் விலங்கு இதுவா?

‘’சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மனித உடலை தோண்டி தின்னும் விலங்கு,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Video Link  Velumeenambal Velu என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், பேய் போல அலறும் சத்தத்துடன் கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆமை போன்ற விலங்கு ஒன்றை ஒருவர் கையில் பிடித்தபடி நிற்க, ‘இது சுடுகாட்டில் புதைக்கப்படும் […]

Continue Reading

சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது சகோதரர்கள் சிலை குப்பையில் வீசப்பட்டதா?

‘’மருது சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டது,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேவர் தலைமுறை எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது பாண்டிய சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர். பலரும் உண்மை என நம்பி இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

திருச்சி கோவிலில் மொபைல், விண்வெளி வீரர் சிற்பம்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

திருச்சியில் உள்ள பஞ்சவர்ணசாமி கோவிலில் சைக்கிள், விண்வெளி வீரர், செல்போன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு சைக்கிளில் பயணம் செய்பவர்கள் சிலை, தொடக்க கால மாடல் செல்போன் விண்வெளி வீரர் சிலை படங்கள் பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ஒரு மிதிவண்டியை,செல்லிடப்பேசியை கண்டுபிடித்தவர் யார்? சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் எந்த விண்வெளி வீரரும் […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்: உண்மை அறிவோம்!

‘’மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link MKS For CM எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை நவம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலக தயார். […]

Continue Reading

ராமதாஸ் ஆதாரம் தரவில்லை: பாஜக சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு!

பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை என்றும் வாய்தா வாங்கியுள்ளோம் என்றும் பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் சீனிவாசன் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பஞ்சமி நில விவகாரம். ராமதாஸ் ஆதாரம் தந்து […]

Continue Reading

அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வருவது வேதனை என்று எச்.ராஜா கூறினாரா?

“அர்ஜுன் சம்பத் வாயில் இருந்து வேதம் வெளிவரப்போவது வேதனை அளிக்கிறது” என்று எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா ட்வீட் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிரப்பட்டது போன்று பதிவு உள்ளது. அதில், “திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்க அர்ஜுன் சம்பத் யாகம் செய்வதாக அறிந்தேன். வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டிய […]

Continue Reading

பாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா?

‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இந்த தலைப்பில் உண்மையிலேயே வின் டிவி விவாத நிகழ்ச்சி நடத்தியதா என விவரம் அறிய முயற்சித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், வின் டிவி பெயரில் மதன் ரவிச்சந்திரன் நடத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்றின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளனர். அதில், ‘’மதன் […]

Continue Reading

கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

மு.கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஒருவர் பகிர்ந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட நாதஸ்வரம், தவில் வாசிக்கும் குழுவினரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒரு சிறுவன் மட்டும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளான். படத்தின் மீது, “கருணாநிதி பிறக்கும்போதே கோடீஸ்வரன் என்று தொரை முருகன் சொன்னதை நிரூபிக்கும் […]

Continue Reading

எச்.ராஜா மகள் திருமணத்தில் ஆபாச புகைப்படத்தை பரிசளித்தாரா அர்ஜூன் சம்பத்?

‘’எச்.ராஜா மகள் திருமணத்தில் புனித சிலையை பரிசளித்த அர்ஜூன் சம்பத்,’’ என்ற பெயரில் பரவி வரும் ஒரு அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், செக்ஸ் பொசிஷன் ஒன்றின் புகைப்படத்தை அர்ஜூன் சம்பத், எச். ராஜா மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பரிசளிப்பது போல பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை அகற்ற வேண்டும் என்று கனிமொழி கூறினாரா?

தமிழக கோவில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கனிமொழி படம் மற்றும் நியூஸ்7 தமிழ் நியூஸ்கார்டை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழக கோயில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ வேண்டும் […]

Continue Reading

வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்திய மோடி: புகைப்படம் உண்மையா?

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வ.உ.சிதம்பரனார் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். நிலைத் தகவலில், “செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு பாரத பிரதமர் அவர்களின் மலரஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Narayanan Vengat என்பவர் 2019 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்ட பெண் போலீஸ் இவரா?

‘’பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்ட பெண் போலீஸ் அதிகாரி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  சாரு லதா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மார்ச் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், காக்கி சீருடை அணிந்த பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேமேல, ‘’ பள்ளி மாணவியை கற்பழிக்க […]

Continue Reading

டாக்டர் ராமதாஸ் காயத்ரி ரகுராமுக்கு பதில் அளித்தாரா?

நடிகை காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதில் அளித்தது போன்ற ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ம.க நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் ட்வீட் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “காயத்திரி ரகுராம் வேண்டுமானால் எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ துணைக்கு அழைத்துகொள்ளட்டும். பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்க வன்னியர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. காலம் மலையேறிவிட்டது. எங்களுக்கும் புத்திவந்துவிட்டது என்று அவரிடம் […]

Continue Reading

சிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கப்பட்ட விவகாரத்தில் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பிபிசி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா படத்துடன் கூடிய பிபிசி தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பெண் பக்தரை தாக்கியதாக கூறப்படும் தீட்சிதர் அர்ச்சனை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் களைப்பாக கூட இருந்திருக்கலாம் […]

Continue Reading

சொத்தைப்பல்லை சரியாக்கும் வெங்காயம் – நல்லெண்ணெய்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சின்ன வெங்காயம் சாறு மற்றும் நல்லெண்ணெய்யை சமஅளவு எடுத்து  கலக்கி, சொத்தைப் பல் மீது வைத்தால் சிறிது நேரத்திலேயே சொத்தைப் பல் பூச்சி இறந்து, பல் வலியும் குணமாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்படத்துடன் பகிரப்பட்ட தகவலை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “சின்ன வெங்காயம் அரைத்து சாறு 3 ஸ்பூன் அளவு எடுத்து […]

Continue Reading

தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்: உண்மை என்ன?

‘’தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Post Link  Archived Link அஜித் குமார் என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஜூன் 1, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் காருடன் சேர்ந்து குழுவாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ‘’சூரிய […]

Continue Reading

நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை தாக்கிய இளைஞர்; ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

திருநெல்வேலியில் லஞ்சம் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இளைஞர் தாக்கியதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சப்-இன்ஸ்பெக்டரை இளைஞர் ஒருவர் தாக்குகிறார். அவரை அடிக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். எந்த இடம் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை புரட்டி எடுத்த வாலிபர்…. பாராட்ட நினைத்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே…, (அரசாங்க […]

Continue Reading

பட்டப்பகலில் மரத்தின் உச்சியில் பேய் நிற்கும் வீடியோ: உண்மை என்ன?

‘’பட்டப்பகலில் மரத்தின் உச்சியில் பேய் நிற்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Dhinesh Dhinesh என்பவர் ஓராண்டுக்கு முன்னர் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதில் மரத்தின் உச்சியில் பெண் போன்ற ஒருவர் நிற்க, அதனை கீழே நின்று நிறைய பேர் வேடிக்கை பார்க்கின்றனர். பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்திருக்கின்றனர்.  உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோ […]

Continue Reading

மனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி!

மகரஜோதிக்கு மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் படத்துடன் கூடிய நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பியூஸ் மனுஷ் அதிரடி. மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் – சமூக […]

Continue Reading

எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று அவரது மாப்பிள்ளை சொன்னாரா?

‘’எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று கூறி அவரது மாப்பிள்ளை தகராறு,’’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தமிழ்நாட்டு சங்கி என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை நவம்பர் 15 அன்று பகிர்ந்திருக்கிறார். இது ஃபேக் ஐடியாக இருந்தாலும், பதிவு என்னமோ உண்மை போலவே இருப்பதால், பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் […]

Continue Reading

திருப்பதி கோவிலுக்கு பால் தரும் புங்கனூர் பசுவின் விலை ரூ.12 கோடியா?

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அபிஷேகத்துக்கு பால் தரும் பசு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுவின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “இந்த பசுவின் விலை ரூ.12 கோடி.ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான்.இது புங்கநூரு ஜாதி பசு.ஒரு நாளைக்கு100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் பற்றி அழகிரி எதுவும் சொன்னாரா?

‘’மு.க.ஸ்டாலின் பற்றி அழகிரி சொன்ன உண்மை,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  இந்த பதிவில் புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யவில்லை. எதற்காக கைது செய்யப்பட்டார் என வெளிப்படையாகச் சொல்ல முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்கின்றனர்.  உண்மை […]

Continue Reading

இந்தியா கொடுத்த ரூ.3000 கோடியில் சீனா கட்டிய பாலம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

படேல் சிலையை அமைக்க ரூ.3000 கோடியை பிரதமர் மோடி சீனாவுக்கு வழங்கியதாகவும், அந்த பணத்தைக் கொண்டு சீனா கடலில் மிகநீண்ட மேம்பாலம் கட்டிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் பாலம் ஒன்றின் புகைப்படம் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது. Tp Jayaraman என்பவர் வெளியிட்டிருந்த பதிவை […]

Continue Reading

நக்கீரன் மூடப்படுகிறதா? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் வதந்தி!

நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நக்கீரன் கோபால் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “பொய் செய்திகளை வெளியிட்டு வந்த இந்துக்கள் புறக்கணித்த நக்கீரன் வார இதழ் நஷ்டத்தால் மூடப்படுகிறது..மிக்க மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Govind Palaniguru என்பவர் 2019 […]

Continue Reading

மாசா குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது: ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி

‘’மாசா குளிர்பானத்தில் எச்ஐவி ரத்தம் கலந்துள்ளது,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Post Link  Archived Link  Hari Ram என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த 2015, ஆகஸ்ட் 19 அன்று வெளியிட்டுள்ளது. இதுபோலவே பலரும் இச்செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்துள்ளனர்.  உண்மை அறிவோம்: ஏற்கனவே பொவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி வைரஸ் கலந்துள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

கோமாதா சங்கு காட்டினால் மாடு தானாகப் பால் சுரக்குமா?

‘’கோமாதா சங்கு காட்டினால் போதும், மாடு தானாகப் பால் சுரக்கும்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  இதனை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.  உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்தால் ஒரு விசயம் புரியும். ஆம், கோமாதா சங்கை காட்டாதபோதும் மாட்டின் காம்புகளில் இருந்து […]

Continue Reading

ஸ்டாலினின் அப்பா அன்பழகன்; அநாகரீகமான ஃபேஸ்புக் பதிவு!

ஸ்டாலினின் அப்பா அன்பழகன்தான் என்று தயாளுஅம்மாள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தயாளுஅம்மாள் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அன்பழகன்தான் ஸ்டாலினின் தந்தை. – தயாளு அம்மாள் பகீர் தகவல்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “நாங்க சொன்னா காவி வெறியன்னு சொல்றீங்க. இப்போ என்ன சொல்ல போறீங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பாடும் சீனப் பெண்: உண்மை அறிவோம்!

‘’ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பாடும் சீனப் பெண்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link  Archived Video Link Angel Media எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பாடும் வீடியோவை பகிர்ந்து, அதன் மேலே, சீன பெண் தமிழில் பாடும் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், […]

Continue Reading