தமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா? – ஃபேஸ்புக் வதந்தி

தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆஸ்திரேலியா வரைபடத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா! இச்செய்தியை பெருமையுடன் அனைவருக்கும் பகிர்வோம்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை, Dinesh Babu என்பவர் 100% சிரிப்பு இலவசம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார்.  உண்மை […]

Continue Reading

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

இந்தியா முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியா முழுவதும் மதம் மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா” என்று உள்ளது. நிலைத் தகவலில், “அமித்ஷாவின் […]

Continue Reading

முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல; ராமதாஸ் என்று பாஜக சீனிவாசன் கூறினாரா?

“முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராமதாஸ்தான்” என்று பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ராமதாஸ் மற்றும் தமிழக பா.ஜ.க செயலாளர் சீனிவாசன் படங்கள் உள்ளன. மேலும், “முரசொலி விவகாரம் கிளப்பியது நானல்ல ராம்தாஸ்தான். சட்டப்படி அவருக்குத்தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் – சீனிவாசன் […]

Continue Reading