கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை பார்த்ததில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் வதந்தி

“கிறிஸ்தவர்களைப் போல நேர்மையான மக்களை நான் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டை யாரோ ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல பதிவு உள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் ட்வீட் பகுதியில், “ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து […]

Continue Reading

அன்புமணி ராமதாஸ் பற்றி பரவும் வதந்தி!

‘’கூட்டணி தர்மத்துக்காக விளக்கு பிடிக்கவும் தயங்க மாட்டோம்,’’ என்று அன்புமணி ராமதாஸ் கூறியதைப் போல, ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவியதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  MKS For CM என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அன்புமணி ராமதாஸ் கையில் ‘கூட்டணி தர்மத்துக்காக விளக்கு பிடிக்கவும் தயங்க மாட்டோம்‘ என ஒரு பேனர் பிடித்தபடி நிற்பதுபோல உள்ளது. இதனை […]

Continue Reading

பேரணியில் செய்தியாளர்களின் ஷூவைத் திருடிய திமுக-வினர்?- ஃபேஸ்புக் வில்லங்கம்

சென்னையில் தி.மு.க நடத்திய பேரணியில் செய்தியாளரின் காலணியை தி.மு.க-வினர் திருடியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊடகத்தின் பெயர் இல்லாத பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், கையில் கேமரா வைத்துள்ள ஒருவர் ஒரு காலில் ஷூ இல்லாமல் இருக்கும் படம் வைக்கப்பட்டு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “ஷூ திருட்டில் திமுக. பேரணியில் செய்தியாளர்களின் ஷூக்களை திருடி திமுகவினர் […]

Continue Reading

எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா?

‘’எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link MKS For CM எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்கின்றனர். இதேபோல, மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் இதே புகைப்பட பதிவை பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.  Facebook […]

Continue Reading

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சி வெளியிட்டது என்று இல்லாமல் பொதுவான நியூஸ் கார்டாக இருந்தது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த […]

Continue Reading

மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு […]

Continue Reading