டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ இதுவா?

‘’டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *டெல்லி பெண் முதலமைச்சரின் பழைய காணொளி**டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது.**இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர்**இனி எல்லாமே சரியாக இருக்கும்**பெண் குலத்தின் பெருமை போற்றும் பெண்மணி*’’ என்று எழுதப்பட்டுள்ளது.இதனுடன், […]

Continue Reading

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?

டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கழிப்பறை என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் ரூ.4000 கோடி செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறையின் நிலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வரிசையாகக் கழிப்பறை கோப்பைகள் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. எந்த மறைவும் இன்றி, வரிசையாக இந்த கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “4000 கோடி செலவில் உலகமே வியக்கும் பாத்ரூம் வசதியை கும்பமேளாவில் செய்த எங்கள் […]

Continue Reading

டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு […]

Continue Reading

கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி  பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற […]

Continue Reading

சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி சிகரெட் வாங்க ஆன பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேஜை முழுக்க நாணயங்கள், பணத்துடன் அடுக்கி வைத்தபடி ஒருவர் அதன் முன்பு இருந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த மனிதன் கடந்த 6 வருடமாகப் […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?

கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்…  சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க […]

Continue Reading

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?

ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சலூன் கடை முற்றுகை. பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். சீமான் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டு […]

Continue Reading

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு […]

Continue Reading

கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா […]

Continue Reading

ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா? 

‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 பலரும் […]

Continue Reading

புத்தாண்டையொட்டி அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் இலவசம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

‘’புத்தாண்டையொட்டி அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் முற்றிலும் இலவசம்’’, என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *🚩 NEW YEAR RECHARGE OFFER 🚩* புத்தாண்டையொட்டி, *M K Stalin* அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள […]

Continue Reading

‘எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எம்.எல்.ஏ மன்சூர் முகமது  திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்…இந்த வீடியோவை இந்தியா முழுவதும் காணும் வகையில் பகிரவும்.*’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்த புதிய முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் மற்றும் அவரது சீடர்கள் குலவை ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் புது வைரஸ் பரவுவதைத் தடுக்க…. முன்பு மணியடித்து […]

Continue Reading

திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது என்று ஓயோ அறிவித்ததா?

‘’திருமணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி கிடையாது,’’ என்று ஓயோ அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’OYO செக்-இன் விதிகள் மாற்றம். ’ திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி மறுப்பு..! திருமணமான உரிய ஆதாரங்களோடு  வருவோருக்கு மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக தகவல்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை கோஷமிட்டாரா?

‘’அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணாமலை ஒழிக என்று கூச்சலிடும் முன்னாள் பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் […]

Continue Reading

இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரு  இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்டதுGuess who is he,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இது ரீல்ஸ் இல்ல..போனை பேசிக்கொண்டேகட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறிப் போய் இருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் பங்க் […]

Continue Reading

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்தாரா?

‘’அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது,’’ என்று திருச்சி சிவா அதிருப்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. திமுகவிலேயே பலருக்கு உடன்பாடு இல்லை – மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ விலை ரூ.3 லட்சம் என்ற தகவல் உண்மையா?

‘’ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ விலை ரூ.3 லட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ராகுல் காந்தி அணியும் பூட்ஸ் விலை என்ன தெரியுமா❓ வெறும் ₹3 லட்சம் தான் 😟,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டதா?

‘’அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பாராளுமன்றம் முழுவதும் அம்பேத்கர் 🔥😎,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

‘’ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது,’’ என்று என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஐந்து ரூபாய் நாணயம் இனி செல்லாது.. RBI அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா? இந்தியாவில் தற்போது ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது இரண்டு […]

Continue Reading

தங்கம் மற்றும் வைரத்தால் செய்த 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை இதுவா?

‘’தங்கம் மற்றும் வைரத்தால் செய்த 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. […]

Continue Reading

இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் என்று ஓமன் இளவரசி எச்சரித்தாரா?

‘’இந்திய தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம்,’’ என்று ஓமன் இளவரசி எச்சரிக்கை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இதுபோன்ற சவுதி அரசாங்கமும் பெட்ரோலை நிறுத்துவோம் என்று கூறினால் இந்தியா பிச்சை எடுக்கும் நாடாக மாறிவிடும் வாய் திறக்குமா சவுதி அரசாங்கம்… எச்சரிக்கை! முஸ்லிம்களின் துண்புறுத்தலை இந்திய அரசு […]

Continue Reading

தேவேந்திர பட்னாவிஸ்க்கு தனது காலால் திலகமிட்ட மாற்றுத் திறனாளி பெண் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’தேவேந்திர பட்னாவிஸ்க்கு தனது காலால் திலகமிட்ட மாற்றுத் திறனாளி பெண்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ A physically handicapped girl took aarti for Devendra Fadnavis who was elected as the Chief Minister of Maharashtra* Both are greatஇதற்கெல்லாம் […]

Continue Reading

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள் என்ற தகவல் உண்மையா?

‘’கேரளாவில் இந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Muslim molested a Hindu girl in Kerala. Immediately all the girls there ganged up on him and […]

Continue Reading

பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பங்களாதேஷில் மதவெறி பிடித்த ஜாம்பிகளால் நடத்தப்பட்ட கொடூரம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டதா?

‘’ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுள்ளது; சந்திரபாபு நாயுடு அதிரடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ andhra govt abolished waqf board.. இந்தியாவிற்கே முன்னோடியாக ஆந்திர பிரதேசதில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டது🔥பொது சொத்துக்களையும் மக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க சனாதனிகள் எடுத்த துணிச்சலான முடிவு🙏…’’ என்று […]

Continue Reading

ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர் என்ற தகவல் உண்மையா?

‘’ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காவல்துறை உதவியுடன் ரயில் புறப்பட்டதும் செல்போனை பிடுங்கும் வட இந்திய திருட்டு நாய் வட இந்தியாவில் பல இடங்களில் இது தொடர்வது ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியாதா?,’’ என்று […]

Continue Reading

முகுந்த் வரதராஜன் தாய், தந்தை ‘அமரன்’ படத்தில் நடித்தனரா?

‘’அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் பெற்றோராக நடித்த முகுந்த் வரதராஜனின் தாய், தந்தை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அமரன்!படத்தில்!முகுந்தனின்!அப்பா!அம்மாவாக!நடித்தவர்கள்!உண்மையான! மேஜர்!முகுந்தனின்! அப்பா!அம்மா! தான் என்பது!நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 😡😡😡😡😡😥😥😥😥😥வேதனையின் உச்சம்அவமானம் வீழ்ச்சி..உலக பட்டினி நாடுகளில் இந்தியா 3வது இடம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதா?

‘’மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில், தனது ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியிருப்பது முக்கியமான ஒரு முடிவாக இருக்கிறது. இந்த […]

Continue Reading

“மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் டெல்லி பாலம்” என்று பரவும் வீடியோ – உண்மையா?

டெல்லியில் நரேந்திர மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் பாலம் ஒன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook  I Archive பாலம் ஒன்று மேலே உயர்ந்து இறங்கித் தள்ளாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று முன்பு நாடாளுமன்றத்தில் மோடி பேசியதன் ஆடியோ எடிட் செய்து வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில், […]

Continue Reading

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்று கூறினாரா டொனால்ட் டிரம்ப்?

‘’ராகுல் காந்தியை தேசத்துரோகி’’ என்று கூறிய டொனால்ட் டிரம்ப் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Savage reply 😅🤣 ராகூலுக்கு செருப்படி கொடுத்த டிரம்ப் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய போது “மோடி” கோஷம் எழுப்பப்பட்டதா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிரம்ப் உரையாற்றிய போது அவரது கட்சியினர் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பேசும் போது சிலர் கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க தேர்தல் வெற்றி விழா..முதல் உரையில் டிரம்ப் பேசும் […]

Continue Reading

ஒடிஷாவில் தீபாவளி கொண்டாட்டத்தைத் தடுத்த இஸ்லாமியர்களை விரட்டிய இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஒடிஷாவில் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுத்ததாகவும், அவர்களை பட்டாசு வெடிகளை வைத்து இந்துக்கள் விரட்டி அடித்தார்கள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஷாட் வகை ராக்கெட் பட்டாசை இளைஞர் ஒருவர் கையில் வைத்து எதிரில் இருப்பவர்களை தாக்குவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் நடந்த சம்பவம். தீபாவளி கொண்டாடி […]

Continue Reading

பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின் போது மல்லிகார்ஜுன கார்கேவை அனுமதிக்கவில்லையா?

வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி சென்ற போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கதவுக்கு அருகே நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோவ் கதவ திறயா..! […]

Continue Reading

அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடிய வங்கதேச முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அஸ்ஸாம் மாநிலத்தில் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்திய வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பேரணியாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அசாமில், வங்காளதேச மியான் முஸ்லிம்கள் குழு ஒன்று தனி நாடு கோரி பேரணியில் ஈடுபட்டது. […]

Continue Reading

உத்தரப்பிரதேச கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடு இடிக்கப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் தொடர்புடையவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை பார்க்கும் போது சிறுபான்மையினர் போல உள்ளனர். நிலைத் தகவலில், “உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச், மஹராஜ்கஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சிக்கிய பாஜக பணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

மகாராஷ்டிரா மாநில பாஜக-வின் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜகவிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? கடவுளே மகாராஷ்டிரா: சரத் பவார் குழு தலைவர் ரோஹித் பவார் பண வீடியோ டுவிட்… ◆ ரோஹித் சொன்னார், “தேர்தலின் முதல் தவணையாக […]

Continue Reading

கிரிக்கெட் பேட்டால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற சிறுவன் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற சிறுவன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவன் தனது தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் தலைப்பில், ‘’தெலுங்கானாவில் பள்ளி சிறுவன் மொபைலுக்காக தனது தாய […]

Continue Reading

2024 தீபாவளி பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதா?

‘’2024 தீபாவளி பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தி டெம்ப்ளேட் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘’மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு […]

Continue Reading