‘’வங்கதேசத்தில் இந்து மக்கள் நடத்தும் கடைகளுக்கு தீ வைத்த முஸ்லீம்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’

வங்கதேசத்தில் ஒரு இந்து தலித்தின் கடை பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது!

எரிப்பு அல்லது கொலைக்கு முன் ஜாதி,மொழி பகுதியைக் கேட்க மாட்டார்கள் நீ ஒரு இந்து இதுவே போதும்!

சாதி வாரியாக இந்துக்கள் பிரிந்திருக்கும் வரை ஒன்றுபட முடியாது நம்மையும் காத்துக் கொள்ள முடியாது!

#Bangladeshindus’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தபோது, இந்து – முஸ்லீம் பாகுபாட்டிற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.

ஆம், வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் 2024, ஜூலை 16ம் தேதி முதல் கலவரமாக மாறியது. இதில், ஆளுங்கட்சியான நவாமி லீக் நிர்வாகிகளுக்குச் சொந்தமான சொத்துகள் சூறையாடப்பட்டன. இதன் விளைவாக, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு, வெளியேறினார்.

Aljazeera Link l The Hindu Link l Money Control Link

இந்த சூழலில், அந்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இந்து மக்கள் தாக்கப்படுவதாக, தொடர்ச்சியாக வதந்தி பகிரப்படுகிறது.

நாமும் இதுபோன்ற வதந்திகள் பற்றி அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பதிவும்…

இது கடந்த 2024, ஜூல 11 அன்று வங்கதேசத்தின் Lakshmipur நகரில் அமைந்துள்ள Moju Chowdhury Hat - market பகுதியில் இருந்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான காட்சி. இதில், அங்கிருந்த 15 கடைகள் சேதமடைந்ததாக, வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

bd-bulletin l shomoysangbad

இதுதொடர்பான கூடுதல் வீடியோ ஆதாரமும் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, வங்கதேசத்தில் அரசியல் கலவரம் ஏற்படுவதற்கு முன்பாகவே, மேற்கண்ட தீ விபத்து நிகழ்ந்ததாக, தெரியவருகிறது. எனவே, இதற்கும், தற்போதைய வங்கதேச அரசியல் சூழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் இந்து மக்கள் நடத்தும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: Missing Context