பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Women 2.png
Facebook LinkArchived Link

பெண்களின் உள்ளாடையை அணிந்த ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை, விஸ்வாமித்திரர் என்பவர் 2019 டிசம்பர் 16ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அஸ்ஸாம், டெல்லியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த நிலையில், இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் உண்மையும் உள்ளது போலிகளும் உள்ளது. வைரலாக பகிரப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மையை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ்ப்பிரிவு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டு வருகிறது.

இந்த வகையில், போராட்டத்தில் பெண் வேடம் அணிந்து பங்கேற்ற ஆண் என்று பல்வேறு பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதே படத்தைப் போராட்டத்தை சீர் குலைக்க சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெண் உடையில் பங்கேற்றார்கள் என்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரும், பெண் வேடத்தில் பங்கேற்று கலவத்தில் ஈடுபடுகிறார்கள் என்று போராட்டத்துக்கு எதிர் தரப்பினரும் மாறி மாறி பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

Facebook LinkArchived Link

டெல்லி அல்லது அஸ்ஸாம் அல்லது இந்தியாவின் வேறு எந்த பகுதிகளிலாவது போராட்டத்தில் பெண் வேடம் அணிந்த ஆண் கைது என்று செய்தி வெளியாகி உள்ளதா என்று முதலில் கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் படமும் கிடைக்கவில்லை. 

Search Link 1Search Link 2

இதனால், ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் சோமாலியா ஊடகங்களில் வெளியானது தெரியவந்தது. hadalsame.com என்ற சோமாலியா ஊடகம் 2019 செப்டம்பர் 17ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியை மொழிமாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். அதில், ஓமனிலிருந்து தன்னுடைய காதலியைத் தேடி பெண் வேடம் அணிந்து

hadalsame.comArchived Link 1
marqaannews.netArchived Link 2

அந்த செய்தியில், ஓமனிலிருந்து சோமாலியாவில் உள்ள காதலியைத் தேடி இந்த நபர் வந்துள்ளார். பெண் வேடம் அணிந்து காதலியின் வீட்டுக்கே சென்றுள்ளார் அவர். இவரது நடவடிக்கையைப் பார்த்து சந்தேகம் அடைந்த பெண்ணின் தந்தை, போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்” என்று இருந்தது. 

தொடர்ந்து தேடியபோது இந்த படத்தை 2017ம் ஆண்டு எகிப்து ஊடகம் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், குழந்தை, பெண்களை கடத்த திட்டமிட்ட வாலிபர் கைது என்று குறிப்பிட்டிருந்தனர். எகிப்தில் கைது செய்யப்பட்டதுதான் உண்மையா, அல்லது அதற்கு முன்பும் கூட இந்த படம் செய்திகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினம் நம்முடைய ஆய்வு அதைச் சார்ந்தது இல்லை. இந்த நபர் இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதை இந்த செய்திகள் நமக்கு தெரிவித்தன.

marrakech7.comArchived Link

நம்முடைய ஆய்வில், குடியுரிமை போராட்டத்துக்கு எதிராக பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்றார்கள் என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

படத்தில் உள்ள நபர் சோமாலியாவில் கைது செய்யப்பட்ட காதலர்  என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி உள்ளது தெரியவந்துள்ளது.

இதே படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தைச் சேர்ந்த ஊடகம் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் பரவி வரும் ஒன்றாகும். இது இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், போராட்டத்தில் பெண் வேடமிட்டுப் பங்கேற்ற ஆண் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

  1. இனி எந்த ஒரு தகவலையும் உண்மை என தெரிந்தால் மட்டுமே நான் சேர் செய்வேன்

    ..

  2. Hello fact team one request நம் நாட்டு இராணுவ வீரர்களை பற்றி தவறான பதிவு ஒன்று இந்த ஐடியில் பகிரபடுகிறது TNM MEDIA என்ற ஐடி.. நீங்கள் இந்த ஐடியை தடை செய்யுங்கள்… இதில் பல வன்முறை.. மற்றும் தேச விரோத செயலில் பொய் செய்தி பகிரபடுகிறது

Comments are closed.