
“காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வணங்கும் அமித்ஷா” என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா புகைப்படம் ஒன்றை வணங்கும் படம் பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “காந்திஜி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்ஸேவை வணங்கி. மகாத்மாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை துவேசம் செய்ய தயார் ஆகும் சீடன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Sheik Ibrahim என்பவர் 2020 ஜனவரி 8ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காந்தியடிகள் கொலை வழக்கில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தைப் பார்க்கும்போது சாவர்க்கர் படத்துக்கு மரியாதை செய்வது போல உள்ளது. சாவர்க்கர் என்று குறிப்பிடுவதற்கு பதில் கோட்சே என்று குறிப்பிட்டது போல தெரிந்தது.
அமித்ஷா வணங்கும் நபர் யார், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம்.

Search Link | amitshah.co.in | Archived Link |
அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இணையதளத்தில் இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அதில், 2016ம் ஆண்டு மே 28ம் தேதி அந்தமான் செல்லுலார் சிறைக்கு சென்று சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தியபோது என்று வரிசையாக பல படங்களை பகிர்ந்திருந்தனர். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படமும் இருந்தது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் மத்திய உள்துறை அமைச்சர் இல்லை. பா.ஜ.க தேசிய தலைவராக மட்டுமே இருந்தார்.

financialexpress.com | Archived Link 1 |
pib.gov.in | Archived Link 2 |
pib.gov.in | Archived Link 3 |
தொடர்ந்து தேடியபோது, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பல காலகட்டங்களில் அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்திய படங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் படத்தில் உள்ளவர் சாவர்க்கர்தான் என்பதை உறுதி செய்தன.

கோட்சே படத்தை ஆய்வுக்காக எடுத்து அமித்ஷா படத்தில் உள்ள படத்துடன் ஒப்பிட்டோம். இதன் மூலம் இரண்டும் வெவ்வேறான படம் என்பது உறுதி செய்யப்பட்டது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
