சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தாக்கி 70 வயது முதியவர் உயிரிழந்தாரா?

அரசியல் | Politics தமிழகம்

‘’சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தாக்கி 70 வயது முதியவர் உயிரிழந்தார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதே புகைப்படத்துடன் கூடிய செய்தியை மேலும் பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை காண முடிந்தது. 

உண்மை அறிவோம்:
சென்னை வண்ணாரப்பேட்டையில் பிப்ரவரி 14ம் தேதி இரவு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லீம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதன்போது வன்முறை ஏற்பட்டதால், அங்கிருந்தோரை போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர்.

இதன்போது போலீசார் தடியடி நடத்தியதாகவும், அதில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதை முன்வைத்தே மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவலால் தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பிப்ரவரி 14 நள்ளிரவு தொடங்கி, ஆங்காங்கே மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். 

Nakkheeran News LinkSamayam Tamil News Link 

ஆனால், இந்த புகைப்படம் பற்றிய தகவல் தவறானது என்று சென்னை போலீசார் ஏற்கனவே தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளனர். அதனை கீழே இணைத்துள்ளோம். 

Facebook Claim LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் இடம்பெற்றுள்ள புகைப்படம் பற்றிய தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது. இதற்கும், வண்ணாரப்பேட்டை குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று ஏற்கனவே சென்னை காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய பதற்றமான அரசியல் சூழலில் தாங்கள் பகிரும் தகவல் உண்மையானதா என்று ஒருமுறை சரிபார்த்துவிட்டு பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தாக்கி 70 வயது முதியவர் உயிரிழந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தாக்கி 70 வயது முதியவர் உயிரிழந்தாரா?

  1. செய்தி பொய்யாக இருக்கலாம். ஆனாலும் FactCheck என்பது காவல்துறை அறிக்கையையும் அதே சமூக வலைத்தள /முக நூல் பதிவுகளையும் மேற்கோள் காட்டி முடிவு செய்வதல்ல.சரியான ஆதாரங்களை மற்றைய பதிவு போல் காட்டி Fake/False என முடிவு செய்ய வேண்டும்.சாரி இது FactCheck அல்ல.

Comments are closed.