ஐ லவ் யூ என்று வரும் ப்ளூ வேல் லிங்க்… சென்னை போலீஸ் உஷார் செய்ததா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu தொழில்நுட்பம்

ஐ லவ் யூ என்று லிங்க் ஒன்று மொபைல் போனுக்கு வருகிறது, இது ப்ளூ வேல் லிங்க் என்று சென்னை போலீஸ் எச்சரிக்கை செய்ததாக ஒரு தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2

நம்முடைய வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்-ல் ஒரு தகவல் வந்தது அது உண்மையா என்று ஆய்வு செய்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதில், “🐋Blue whale🐋    Coming on to  Whats App from tomorrow, the number by +60127275401🐋Don’t answer any calls from this number, If you answer by mistake 🐋Blue whale game🐋 Will Download in your phone. Please inform your friends by sharing.

உங்கள் பெயர் போட்டு  I Love You என்று Link அல்லது message வந்தால், அதை open / click செய்ய வேண்டாம். அது புளூ வேல் கேம் என்று கூறப்படுகிறது. நீங்கள் Ok, click அல்லது Link செய்தால் நமது போனில் உள்ள எல்லா Data வும் Hack செய்யப்பட்டு விடும். தங்களால் இயன்ற அளவு Forward பன்னுங்க. 

By.isaac

Chennai Police Press +919962901564″ என்று இருந்தது.

இந்த தகவலை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. திருவந்திபுரம் விக்ரம் ஜி என்பவர் 2017ம் ஆண்டு இதே பதிவை வெளியிட்டிருந்தார். தற்போது, 2020 ஆகஸ்ட் 6ம் தேதி Mahin Ibrahim என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இதே தகவலை பகிர்ந்துள்ளார். 

உண்மை அறிவோம்:

கடந்த 2017ம் ஆண்டு உலகத்தையே உலுக்கியது ப்ளூ வேல் விளையாட்டு. நம்முடைய செல்போனுக்கு மெசேஜ் வரும். அந்த லிங்கை கிளிக் செய்தால் நம்முடைய முழு தகவலும் இந்த விளையாட்டை நடத்துபவர்கள் கைக்கு போய்விடும். அவர்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் நம்மைப் பற்றிய தனிப்பட்ட ரகசியத்தை எல்லாம் அவர்கள் வெளியிட்டுவிடுவார்கள் என்று பிளாக் மெயில் விளையாட்டு பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது இருந்து நம்முடைய மொபைல் போனுக்கு ப்ளூ வேல் விளையாட்டு லிங்க் வரும் என்ற தகவல் பரப்பப்பட்டுதான் வருகிறது.

இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் அந்த மொபைல் போனில் உள்ள நம்பரைத் தொடர்புகொண்டு பேச முயன்றோம். ஆனால், அவர் நம்முடைய அழைப்பை எடுக்கவில்லை. நாம் ஆய்வுக்காக போன் செய்கிறோம் என்று மெசேஜ் அனுப்பியும் நம்முடைய அழைப்பை அவர் ஏற்கவில்லை.

சென்னை போலீசைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ப்ளூ வேல் விளையாட்டு பற்றி எந்த ஒரு எச்சரிக்கையையும் சென்னை போலீஸ் வெளியிடவில்லை என்றனர். மேலும் விரிவான தகவலை பெற சென்னை பெருநகர காவல்துறை சிசிபி இணை ஆணையர் நாகஜோதியை தொடர்புகொண்டு பேச முயன்றோம். நம்முடைய அழைப்பை அவர் ஏற்கவில்லை. புளுவேல் பற்றி பரவும் தகவல் பற்றி அவருக்கு வாட்ஸ் அப்-ல் மெசேஜ் அனுப்பியுள்ளோம். அவர் பதில் அளித்தால் அதை வெளியிட தயாராக உள்ளோம்.

samayam.comArchived Link 1
timesofindia.indiatimes.comArchived Link 2

கூடுதலாக வேறு தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது, 2018ம் ஆண்டு இந்த வாட்ஸ் அப் மெசேஜ் தொடர்பாக தமிழ் சமயம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், இந்த செல்போன் எண் சென்னையில் ஹார்ட்வேர் கடை வைத்திருக்கும் சையத் என்பவருக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டிருந்தனர். உண்மையில் ப்ளூ வேல் என்பது ஒரு செயலியோ, டவுன்லோட் ஆகும் விளையாட்டு ஆப்போ இல்லை. எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஐ லவ் யூ என்று வரும் ப்ளூ வேல் லிங்க்… சென்னை போலீஸ் உஷார் செய்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False