
‘’மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Seen Mani
என்பவர் 2015, டிசம்பர் 28 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையா என தகவல் தேடினோம். அப்போது, பிளாக்ஸ்பாட் ஒன்றில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, இது மாலைமலரில் வெளியிடப்பட்ட செய்தி எனக் கூறியதைக் காண முடிந்தது. இதனை மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதே புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதன் உண்மைப் படம் கிடைத்தது. கடந்த 2008ம் ஆண்டு Taking the time to look at clouds என்ற தலைப்பில் ஒருவர் அமெரிக்காவின் St.Louis நகருக்கு மேலே பறக்கும்போது புகைப்படம் பிடித்து, அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அதுதான் மேற்கண்ட புகைப்படம்.
எனவே, மேற்கண்ட புகைப்படத்தை எடுத்து, தங்களது வசதிக்கேற்ப சிலர் ஃபோட்டோஷாப் செய்து ஐயப்பன் உட்கார்ந்திருக்கிறார் என தகவல் பகிர, இதனை உண்மை பரிசோதனை எதுவும் செய்யாமல் மாலைமலர் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. இது தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த புகைப்படம் தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
