டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’ஏன்டா டூரிஸ்ட் கைடா இருந்த ஆளை பிரதமராக்குனா ஊரு சுத்தமா என்னய்யா செய்வான்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\modi 2.png

Archived Link

நீதியின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 15ம் தேதி பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பது மோடியா இல்லையா என்பதைவிட முதலில் நம் கண்ணில் பட்ட விசயம், அந்த புகைப்படத்தில் BCCL என்ற வாட்டர்மார்க் லோகோ உள்ளது. இது, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடக குழுமத்தின் லோகோவாகும். எனவே, ஊடகச் செய்தியில் வெளியான புகைப்படத்தை எடுத்து, இங்கே பகிர்ந்துள்ளனர் என தெளிவாகிறது.

இதையடுத்து, அதே புகைப்படத்தை பதிவேற்றி, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, அது உண்மையான புகைப்படம்தான் என தெரியவந்தது. மேலும், அதுதொடர்புடைய மற்ற விவரங்களும் கிடைத்தன.

C:\Users\parthiban\Desktop\modi 3.png

இதன்படி, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த தி எகனாமிக் டைம்ஸ் இணையதளம், மோடியின் வெளிநாட்டு சுற்றுலா தொடர்பான பழைய புகைப்படங்களை தொகுத்து, போட்டோகேலரியாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர், 2017ல் இந்த புகைப்பட கேலரி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதை எடுத்துத்தான், மோடி டூரிஸ்ட் கைடு வேலை செய்தார் என்று தவறாகச் சித்தரித்துள்ளனர். நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள புகைப்படத்திலும், இந்த உண்மையான புகைப்படத்திலும் BCCL என்ற லோகோ உள்ளதை நீங்கள் கவனிக்கலாம். எனவே, எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியே உண்மையானது என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

C:\Users\parthiban\Desktop\modi 4.png

மேற்கண்ட புகைப்படம் தொடர்பான, புகைப்பட கேலரியை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதுதவிர, டூரிஸ்ட் கைடா இருந்தவரை பிரதமராக்கினா, அவர் ஊர் சுற்றாமல் வேறென்ன செய்வார் என பரிகாசம் செய்துள்ளதன் மூலமாக, இது அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட பதிவு என உறுதியாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, உண்மையான புகைப்படத்தை வைத்து, தவறான தகவல்கள் பரப்புகின்றனர் என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

Fact Check By: Parthiban S 

Result: False