‘’பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் கவரில் இருக்கும் சிறுமி இவர்தான்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Ravi Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி, ஜூலை 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பார்லே ஜி பிஸ்கட்டின் பாக்கெட்டை பகிர்ந்து, அதன் அருகே மற்றொரு பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’பார்லே ஜி பிஸ்கட்டில் இருக்கும் நீரூ தேஷ்பாண்டே இவர்தான். தற்போது, இவருக்கு 63 வயதாகிறது,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, பார்லே ஜி புகைப்படத்தில் இருக்கும் நீரு தேஷ்பாண்டே இந்த பெண்மணிதானா என்ற சந்தேகத்தில், இந்த படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

ஆம். மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் இன்ஃபோசிஸ் நிறுவன தலைவரான சுதா மூர்த்தி ஆவார். மேலும், நீரு தேஷ்பாண்டே என யாருமே கிடையாது.

இதுதவிர, பார்லே ஜி புகைப்படத்தில் இருக்கும் சிறுமி உண்மையானவர் அல்ல. அது, கடந்த 1960களில், Everest Creatives என்ற நிறுவனத்தால் கற்பனையாக, கிராஃபிக்ஸ் முறையில் சித்தரிக்கப்பட்டதாகும். யாரும் அந்த புகைப்படத்திற்கு மாடலாக நடிக்கவில்லை. இதுபற்றி பார்லே ஜி நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது.

Facebook Link I News Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி என உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் சிறுமி உண்மையான மாடல் கிடையாது, அது கற்பனையான கிராஃபிக்ஸ் உருவம் மட்டுமே.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் சிறுமி இவரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False