மு.க.ஸ்டாலின் பற்றி தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தியது உண்மையா?

அரசியல் | Politics தமிழகம்

‘’மு.க.ஸ்டாலின் பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘மு.க.ஸ்டாலின் இந்துக்களை எதிர்க்கிறாரா?,’ என்ற தலைப்பில் தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதில், 68% பேர் ஆம் என பதில் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தந்தி டிவியின் நியூஸ் கார்டு உண்மையானதல்ல. ஆம், அதனை உற்று பார்த்தாலே தெரியும், எழுத்துப் பிழையுடன், பழைய தந்தி டிவி நியூஸ் கார்டை புதிதுபோல சித்தரித்துள்ளதைக் காண முடிகிறது. 

இந்த நியூஸ் கார்டை Fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி விவரம் சரிபார்த்தோம். அதில், இது போலியாகச் சித்தரிக்கப்பட்டது என தெளிவானது.

fotoforensics Link

இதுதவிர தந்தி டிவி உண்மையில் இத்தகைய நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, இதுபோல எந்த செய்தியும் வெளியாகவில்லை என தெரியவந்தது. மேலும், தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பார்வையிட்டோம்.

அப்போது, இந்த செய்தி பல தரப்பிலும் வைரலாக பகிரப்பட்டதை தொடர்ந்து, கடந்த நவம்பர் 28ம் தேதி, தந்தி டிவி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்ததைக் காண முடிந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. 

Thanthi TV News Link Archived Link 

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:மு.க.ஸ்டாலின் பற்றி தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தியது உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False