முஸ்லீம்களை குறிவைத்து விற்கப்படும் கேக்: ஃபேஸ்புக் புகைப்பட பதிவு உண்மையா?

சமூக ஊடகம் | Social

‘’முஸ்லீம்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை கலந்த கேக், பிஸ்கட்’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Abdul Kader

என்பவர் இந்த பதிவை கடந்த ஜனவரி 12, 2020 அன்று பகிர்ந்துள்ளார். இதில், முஸ்லீம் மக்களை குறிவைத்து கேக், பிஸ்கட் போன்றவற்றில் மாத்திரை கலந்து விற்கப்படுவதாகக் கூறியுள்ளனர். ஆனால், இது எங்கே விற்கப்படுகிறது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தெளிவான விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனாலும், இதனை உண்மை என நினைத்து பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். இதன்படி, முதலில் பிஸ்கட்டில் மாத்திரை கலந்துள்ளதாகக் கூறப்படும் புகைப்படம் ஈரான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களால் அதிகம் பகிரப்படும் ஒன்றாக தெரியவருகிறது. 

Twitter LinkArchived Link
News LinkArchived Link

இதேபோல, மற்ற தொடர்புடைய புகைப்படங்களையும் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்ததில், அவையும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் ஒன்று என தெரியவருகிறது. 

2019ம் ஆண்டில் பாகிஸ்தான், ஈரானை மையமாக வைத்து பகிரப்பட்ட மேற்கண்ட புகைப்படங்கள், பின்னர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இதில் ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவும்.

இதுபோன்ற கேக் வதந்திகள் ஏற்கனவே பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதுபற்றி Fact Crescendo உள்ளிட்ட ஃபேக்ட் செக் ஊடகங்களால் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Fact Crescendo LinkFactly LinkObservers France 24 Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இத்தகைய கேக்குகள், பிஸ்கட்கள் எங்கே, யாரால் விற்கப்படுகிறது என்று குறிப்பிடவில்லை.
2) இந்த புகைப்படங்கள் ஈரான், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் முதலில் அதிகம் பகிரப்பட்டிருக்கின்றன. பின்னர்தான் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
3) இதுபோன்ற வதந்திகள் பற்றி ஏற்கனவே பலர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர்.
4) உறுதியான ஆதாரம் ஏதும் இல்லாமல் பகிரப்படும் இத்தகைய வதந்திகளை உண்மை என நம்பி யாரும் பகிர வேண்டாம்.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முஸ்லீம்களை குறிவைத்து விற்கப்படும் கேக்: ஃபேஸ்புக் புகைப்பட பதிவு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False