இது முத்துலட்சுமி ரெட்டியின் புகைப்படமா?

சமூக ஊடகம் | Social மருத்துவம் I Medical

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் முத்துலட்சுமி ரெட்டி,’’ எனக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link I News Link I Archived Link 2

இதே செய்தியை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியும் பகிர்ந்துள்ளது. அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Facebook Link I Archived Link

இவ்விரு புகைப்படங்களிலும் இருப்பவர் முத்துலட்சுமி என்றே நினைத்து பலரும் ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற சந்தேகத்தில் கூகுளில் சென்று ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதில் இருப்பவர் முத்துலட்சுமி இல்லை என்றும், அவரது உண்மையான பெயர் வி.சாந்தா என தெரியவந்தது.

இதன்படி, வி.சாந்தா, முத்துலட்சுமியால் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக தற்போது செயல்பட்டு வருகிறார். முத்துலட்சுமியை போலவே, அவரது வழியில், பல வியத்தகு சாதனைகளை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் சாந்தா நிகழ்த்தியுள்ளார். அவரது தலைமையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சிறப்பான மருத்துவ சேவை வழங்கி வருகிறது.

அவரை பற்றிய வீடியோ செய்தி நமது ஆதாரத்திற்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பவர் முத்துலட்சுமி இல்லை, அவரது பெயர் வி.சாந்தா என தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இது முத்துலட்சுமி ரெட்டியின் புகைப்படமா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False