
‘’ஆட்டோவில் குழந்தையை விட்டுவிட்டு ஃபோன் பேசிச் செல்லும் பெண்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link 1 I Archived Link 2
Chandra Sekaran என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 25, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவில், பெண் ஒருவர் ஃபோன் பேசியபடி, குழந்தையை ஆட்டோவில் மறந்துவிட்டு போவதைப் போலவும், அவரது குழந்தையை ஆட்டோ டிரைவர் மீட்டு அவரிடம் ஒப்படைப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’ குழந்தையை மறந்து ஆட்டோவில் விட்டுவிட்டு போகும் அளவுக்கு அம்மணிக்கு செல்போனில் சுவாரசியம்,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கீழே கமெண்ட் பிரிவில் பலரும் இது பொய்யான தகவல் என்றும், மொபைல் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை தயாரிக்கப்பட்ட வீடியோ ஒன்றின் படப்பிடிப்பு காட்சி இது என்றும் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்ந்துள்ளனர். ஆனாலும், நமது பதிவர் அதனை டெலிட் செய்யாமல் வைத்துள்ளார். இது மற்றவர்களை குழப்பும் விதமாக உள்ளது.
இதையடுத்து, இந்த வீடியோ பற்றிய உண்மையான தகவல் விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதுபற்றி தவறாக பதிவிட்டிருந்ததை காண நேரிட்டது.
இதுபற்றி நீண்ட நேரம் தகவல் தேடினோம். அப்போது, சன் டிவியின் செய்தி ஆசிரியர் Umashankar என்பவர் இதுதொடர்பாக விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டதை காண நேர்ந்தது. அதனை பார்த்தபோது, நாம் ஆய்வு செய்யும் வீடியோவும், அதுவும் ஒன்றாக இருந்தது. அதில், ஆட்டோ டிரைவர் குழந்தையை எடுத்துக் கொண்டு செல்வது போல ஷூட்டிங் நடத்துவதைக் காண முடிகிறது. இதை வைத்துப் பார்த்தால், இது ஒரு விழிப்புணர்வு வீடியோவிற்கான ஷூட்டிங் காட்சி என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரோ எடுத்த வீடியோவை பகிர்ந்து, அதனை உண்மைச் சம்பவம் போல சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் தெளிவாகிறது.
Facebook Link I Archived Link
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து, தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆட்டோவில் குழந்தையை விட்டுச் சென்ற பெண்: வைரல் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
