44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’26 வயதில் எம்பி, 44 வயதில் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

Prabu என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’26 வயதில் பாராளுமன்ற உறுப்பினர், 44 வயதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதில் கூறப்பட்டுள்ளதன் படி, யோகி ஆதித்யநாத்தின் தனிப்பட்ட விவரங்களை ஆய்வு செய்தோம்.

C:\Users\parthiban\Desktop\yogi 2.png

அதில், அவர் கடந்த 1972 ஜூன் 5ம் தேதி பிறந்துள்ளார் என, தெரியவந்தது. இதன்படி, ஆண்டுதோறும் ஜூன் 4,5ம் தேதிகளில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது உண்மைதான்.

இதுதவிர, 26 வயதில் யோகி ஆதித்யநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுவும் உண்மைதான். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மக்களவை தொகுதியின் எம்பியாக, கடந்த 1998 முதல், யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை தேர்வு செய்யப்பட்டு, சாதனை படைத்திருக்கிறார். முதன்முதலில், 26 வயதில் அவர் எம்பி ஆகியுள்ளார்.

C:\Users\parthiban\Desktop\yogi 3.png

இதுதவிர, 44வது வயதில் முதல்வரானார் எனக் கூறியுள்ளனர். இது உண்மையான தகவல்தான். 2017 மார்ச் 19ம் தேதியன்று உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட தகவல் உண்மையான ஒன்றுதான் என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான தகவல்தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான தகவல் என்பதால்தான் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள் என்பதை உணர முடிகிறது.

Avatar

Title:44 வயதில் முதல்வரான யோகி ஆதித்யநாத்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: True