Rapid FactCheck: போரில் பாதித்த ராணுவ வீரர்களுக்கு உதவ, ஆயுதங்கள் வாங்க இந்த வங்கிக் கணக்கு உதவுகிறதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ, ஆயுதங்கள் வாங்க இந்த வங்கிக் கணக்கில் ஒவ்வொரு இந்தியரும் ரூ.1 செலுத்துங்கள்,’’ என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

மேற்கண்ட செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) என்ற எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடினோம்.

உண்மை அறிவோம்:
ராணுவ வீரர்கள் சண்டையில் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் வங்கிக் கணக்கு ஒன்றை இந்திய ராணுவம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது.

இதுபற்றி அப்போது இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பை கீழே இணைத்துள்ளோம்.

ஆனால், அந்த வங்கிக் கணக்கு சிண்டிகேட் வங்கியை சேர்ந்ததாகும்.

இந்த தகவலை பலரும் 2016ம் ஆண்டு முதலே ஷேர் செய்து வருகின்றனர். அந்த தகவலை சற்று எடிட் செய்து, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில், சிண்டிகேட் வங்கிக்கு பதிலாக, கனரா வங்கி எனக் குறிப்பிட்டு, அந்த வங்கிப் பெயர், IFCN உள்ளிட்ட விவரங்களில் மட்டும் மாறுதல் செய்துள்ளனர். ஆனால், வங்கிக் கணக்கு எண் அப்படியே உள்ளது.

அதை மாற்றாமல், வங்கிப் பெயரை மட்டும் மாற்றி, புதிய தகவல் போல வதந்தி பரப்பி வருகின்றனர்.

‘’90552010165915‘’ என்ற இந்த வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் மாற்றாமல், வங்கிப் பெயரை சிண்டிகேட் என்பதற்கு பதிலாக, கனரா வங்கி என மாற்றி, வதந்தி பரப்புகிறார்கள் என சந்தேகமின்றி தெளிவாகிறது.   
இதுதொடர்பாக, நமது மலையாள மொழிப் பிரிவினர் ஏற்கனவே நடத்திய ஆய்வு மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் வெளியிட்ட செய்தி ஆகியவற்றை கீழே இணைத்துள்ளோம்.

Malayalam Fact Crescendo Link I TOI Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:போரில் பாதித்த ராணுவ வீரர்களுக்கு உதவ, ஆயுதங்கள் வாங்க இந்த வங்கிக் கணக்கு உதவுகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False