
தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் தந்துவிடலாம் என்று வைகோ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் வேண்டும்: வைகோ. இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடலாம்; இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பாராட்டத்தக்கது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ” என்று இருந்தது.
இந்த பதிவை Seethalakshmi Subramanian என்பவர் 2021 நவம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வைகோ இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திக்கு வைகோ ஆதரவு தெரிவிக்க வாய்ப்பே இல்லை என்ற சூழலில் விஷமத்தனமாக பதிவிட்டு வருவதை காண முடிகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
புதிய தலைமுறையில் வெளியான வைகோ நியூஸ் கார்டை அதன் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில், “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தரக் கூடாது: வைகோ. இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடக்கூடாது; தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது கண்டிக்கத்தக்கது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமாக தகவல் சேர்த்திருந்தனர்.
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வைகோ கூறியதை, இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கூறியதாக வார்த்தையை மட்டும் மாற்றி எடிட் செய்துள்ளனர். இந்திக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற வார்த்தையை இடம் கொடுக்க வேண்டும் என்று மாற்றியுள்ளனர்.

அசல் பதிவைக் காண: Facebook
இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனனுக்கு அனுப்பி விசாரித்தோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தர வேண்டும் என்று வைகோ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசை வாங்கக் கூடாது என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்திக்கு வைகோ ஆதரவா? – போலியான செய்தியால் குழப்பம்
Fact Check By: Chendur PandianResult: False
