‘‘சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு – நாதக நிர்வாகி கைது. எம்.ஜி.ஆர் சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமரியாதை செய்த, வண்ணாரப்பேட்டை நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாளர் லியோனார்ட் என்பவரை கைது செய்தது காவல்துறை. குறுகிய நேரத்திலேயே அதிரடி காட்டிய சென்னை போலீஸ்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில நாட்கள் முன்பாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் காளிங்கராயன் தெருவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, சிலையின் மீது ஊற்றப்பட்ட பெயிண்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுத்தம் செய்து அதற்குப் பால் அபிஷேகம் செய்தார்.

Dailythanthi link l indianexpress link

இந்நிலையில், இவ்வாறு பெயிண்ட் ஊற்றிய நபரை போலீசார் கைது செய்துவிட்டதாகவும், அவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறி சிலர் மேற்கண்ட வகையில் தந்தி டிவி லோகோவுடன் செய்தி பரப்புகின்றனர். ஆனால், இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை’’ என்று தந்தி டிவி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்றும் சென்னை போலீஸ் தரப்பில் ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

Kamadenu link l etvbharat link

குறிப்பிட்ட நபர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:FactCheck: எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?

Written By: Fact Crescendo Team

Result: False