‘’உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடை சுத்தம் செய்த பில் கேட்ஸ்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’அனைவரும் சமம்! உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடைக்குள் நுழைந்து தான் சுத்தம் செய்த வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலக கழிப்பறை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19 அன்று ஐ.நா. சார்பாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பில் கேட்ஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த நவம்பர் 19, 2023 அன்று ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதன் மேலே ‘I explored the hidden history of Brussels’ sewage system—and the role of wastewater in global health—for this year‘s #WorldToiletDay’என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, Brussels நகரில் உள்ள Sewer Museum என்ற இடத்திற்கு நேரில் சென்று, அங்கு செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை கட்டுமான அமைப்பை பில் கேட்ஸ் ஆய்வு செய்து, அந்த காட்சிகளையே பகிர்ந்துள்ளார் என்று தெரியவருகிறது. சாக்கடை எதுவும் அவர் சுத்தம் செய்யவில்லை.

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ…

Hindustan Times Link l News 18 Link l Financial Express

இந்த உண்மை தெரியாமல், அவர் சாக்கடை சுத்தம் செய்தார் என்று குறிப்பிட்டு தினமலர் ஊடகம் தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பில் கேட்ஸ் சாக்கடை சுத்தம் செய்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: Misleading