இந்த சிறுமியை நேற்று முதல் காணவில்லை: பல மாதங்களாக பகிரப்படும் புகைப்படம்!

சமூக ஊடகம் தமிழ் செய்திகள்

‘’இலங்கையை சேர்ந்த இந்த சிறுமியை நேற்று முதல் காணவில்லை,’’ என்று கூறி பகிரப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

ஆளப்போறான் தமிழன் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவின் கமெண்ட் பகுதியிலேயே, இது மிக பழைய மற்றும் தவறான தகவல் என்று கூறி ஒருவர் கமெண்ட் பகிர்ந்துள்ளார். எனினும், இந்த பதிவை நீக்காமல் சம்பந்தப்பட்ட நபர் அப்படியே வைத்துள்ளார். 

எனவே, இதனை பகிர்ந்துள்ள நபரே, ஒரு குழப்பத்தில்தான் ஃபேஸ்புக்கில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று அவரே ஒப்புக் கொள்கிறார். அத்துடன், ஒரு வாட்ஸ்ஆப் எண்ணையும் தொடர்புக்காக அவர் இணைத்துள்ளார். அந்த எண் இலங்கையை சேர்ந்ததா என விவரம் தேடினோம். அப்போது, அது இலங்கை எண்தான் என தெரியவந்ததோடு, சம்பந்தப்பட்ட நபரின் விவரமும் கிடைத்தது.

அவரிடம் நமது குழுவினர் பேசியபோது, ‘இது இலங்கை சிறுமி அல்ல, இந்தியாவைச் சேர்ந்தவர்தான். வாட்ஸ்ஆப்பில் வந்த ஃபார்வேர்ட் மெசேஜை உண்மை என நம்பி மற்றவர்களுக்கும் நான் பகிர்ந்தேன். ஆனால், இது உண்மையல்ல‘ என்று எடுத்த எடுப்பிலேயே உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டார்.

மேலே குறிப்பிடப்படும் சிறுமியின் புகைப்படம், பல்வேறு வதந்திகளுடன் பல மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அவர் யாரென தெரியவில்லை. இதுபோல நிறைய சிறுமிகள், பெண்கள் சமூக ஊடகங்களில் தங்களது புகைப்படங்களை பகிரும்போது, அவற்றை சில விஷமிகள் டவுன்லோடு செய்து, தவறான தகவல்களை இணைத்து பரப்பி விடுகின்றனர். அப்படி பரப்பப்பட்ட வதந்திதான் மேலே உள்ள தகவலும்.

சம்பந்தப்பட்ட புகைப்படத்தில் உள்ள சிறுமியை வைத்து யூ டியுப்பில் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வெளியிடப்பட்ட சில விஷமத்தனமான வீடியோக்களையும் இங்கே இணைத்துள்ளோம். 

மற்றொரு வீடியோவும் கீழே தரப்பட்டுள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை நமது வாசகர்கள் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்த சிறுமியை நேற்று முதல் காணவில்லை: பல மாதங்களாக பகிரப்படும் புகைப்படம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •