FACT CHECK: பைசா நகர சாய்ந்த கோபுரத்தை விட உயரமான சாய்ந்த கோபுரம் காசியில் உள்ளதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட உயரமான, 9 டிகிரி சாய்ந்த கோபுரம் காசி ரத்னேஸ்வர் கோவிலில் உள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சாய்ந்த நிலையில் இருக்கும் கோபுரம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம் தானே..? ” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Chennai Chinna என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜூலை 23ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட பல மீட்டர் உயரமான, பல டிகிரி சாய்ந்த கோபுரம் இந்தியாவில் இருப்பதாகக் கூறியிருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், புகைப்படத்தில் கோவில் கோபுரத்தைப் பார்த்த போது 74 மீட்டர் உயரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த தகவலை ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, ரத்னேஸ்வர் கோவில் பற்றிய பல தகவல் நமக்கு கிடைத்தது. இந்த கோவில் 13.14 மீட்டர் உயரம் கொண்டது என்றும், 9 டிகிரி சாந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் 1825 முதல் 1830ல் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டதாகவும், 1857ல் கட்டப்பட்டது என்றும் சில குறிப்புகள் உள்ளதாக செய்தி கிடைத்தது. இதன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவில் உள்ளது என்றும், இந்த கோவிலின் உயரம் 74 மீட்டர் என்றும் பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: atlasobscura.com I Archive 1 I A amarujala.com I Archive 2

பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம் 1185ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. அதன் பிறகு கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமான நிபுணர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இப்படி பல நூற்றாண்டுகளாக கட்டுமானம் தொடர்ந்துள்ளது. 1990களில் இந்த கோபுரம் 5.5 டிகிரி வரை சாய்ந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக சாய்வு 3.97 டிகிரியாக குறைக்கப்பட்டது என்று பல தகவல் நமக்கு கிடைத்தன.

இதன் மூலம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட உயரமான, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் காசியில் உள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட உயரமான சாய்ந்த கோபுரம் காசியில் உள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பைசா நகர சாய்ந்த கோபுரத்தை விட உயரமான சாய்ந்த கோபுரம் காசியில் உள்ளதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False