FactCheck: இந்த புகைப்படம் கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்டதில்லை!

சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

‘’கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம், சீட்டுக்குப் பதிலாக படுக்கைகள் நிறுவியுள்ளனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் கூட பலரும் இதனை உண்மை என நம்பி, கருத்து பகிர்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒரு தியேட்டரின் உள் புகைப்படம் என்று விவரம் கிடைத்தது.

இதன்படி, ஸ்விட்சர்லாந்தில் செயல்படும் Cinema Pathe` எனும் தியேட்டரில் படுக்கை வசதியுடன் சினிமா ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த புகைப்படத்தை எடுத்து, கோவையில் கலாச்சாரம் கெட்டுவிட்டதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. அதேசமயம், கோவையில் செயல்படும் கேஜி சினிமாஸ் வேறு ஒன்றாகும். 

Cinema Pathe` link 1

Cinema Pathe` Link 2

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:இந்த புகைப்படம் கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்டதில்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False