‘’ Sorry என்ற படம் 5 நிமிடம் மட்டுமே ஓடும். ஆஸ்கர் விருது வென்றுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:



இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில் மோடி ‘’ SORRY என்று பெயரிடப்பட்ட இந்த படம் வெறும் 5 நிமிட படம் மட்டுமே, இது 30 நிமிடங்களில் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு * ஆஸ்கார் * விருது கிடைத்தது. எதையும் வெளிக்காட்டாமல் அன்பு காட்டும் தந்தை..

இதைப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள் ...

I am sure you will weep or your eyes will become wet after seeing this short film titled "Sorry". Very touching.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

Academy Awards என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வோரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த விருது, கலைத்துறையில் உயரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு கூட கடந்த மார்ச் மாதம் (2024) ஆஸ்கர் விருதுகள், வழங்கப்பட்டன. ஆனால், மேற்கண்ட வகையில் எதுவும் sorry என்ற படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கியதாக, தகவல் இல்லை. Academy Awards/Winners List (2024)

இதுபற்றி நாம் Academy Awards அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விவரம் தேடி உறுதி செய்தோம். மேலும், ஆஸ்கர் வென்ற குறும்படங்கள், ஆவணப்படங்கள் பட்டியலிலும், sorry என்ற பெயரில் நடப்பாண்டு எந்த விருதும் வழங்கப்படவில்லை என்று விவரம் கிடைத்தது.

எனவே, எதோ ஒரு மேடை நாடகம் தொடர்பான காட்சியை எடுத்து, ஆஸ்கர் விருது வென்ற குறும்படம் என்று குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   ஒரு மேடை நாடகம் தொடர்பான காட்சியை எடுத்து, ஆஸ்கர் விருது வென்ற 'Sorry' குறும்படம் என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர்.
Claimed By :  Social Media User