பிகினி உடையில் நடமாடும் கர்நாடகா மாணவி முஷ்கான்?- உண்மை இதோ!\

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’பிகினி உடையில் நடமாடும் கர்நாடகா மாணவி முஸ்கான்/ரூபி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இளம்பெண் ஒருவர் பிகினி உடையில் நடமாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அல்லாஹூ அக்பர் என கத்திக்கொண்டே வந்தவள். புர்கா அணியாமல் வெளியே வர மாட்டோம் என புரட்டு புரட்சி நடத்திய ரூபி . இன்று…… என்ன கொடுமை இது.. இவ்வளவு சீக்கிரம் காங்கிரஸ் திராவிட  Toolkit கதை கந்தலாகி போனதே… 🙄,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிரும் சூழலில் இதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

உண்மை அறிவோம்:
கர்நாடகா மாநிலத்தில் இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக, அல்லாஹூ அக்பர் என கோஷமிட்டதன் மூலமாக பிரபலமானவர் முஷ்கான்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு முஷ்கான் பற்றி ஏராளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அவற்றில் பலவும் வதந்திகள்தான். நாமும் அவை பற்றி ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2

இந்நிலையில்தான் மேற்கண்ட வகையில் வீடியோ ஒன்றை எடுத்து, முஷ்கானுடன் தொடர்புபடுத்தி ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், இந்த வீடியோவில் இருப்பவர் இந்தி நடிகை உர்ஃபி ஜாவித் ஆவார். அதன் முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, உர்ஃபி ஜாவித் வீடியோவை எடுத்து, இவர்தான் முஷ்கான் என்று கூறி சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பிகினி உடையில் நடமாடும் கர்நாடகா மாணவி முஷ்கான்?- உண்மை இதோ!\

Fact Check By: Pankaj Iyer 

Result: False