சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டதைச் சென்னை வந்த விமானத்திலிருந்து பயணி ஒருவர் ஒளிப்பதிவு செய்ததாக ஒரு வீடியோ செய்தி, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

'When you're on a plane and accidentally catch a rocket launch' என்று குறிப்பிட்டு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டாக்காவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து சந்திரயான் 3 ராக்கெட், ஏவப்பட்டதை ரசித்த பயணிகள் #Chandrayaan3" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை தினகரன் நாளிதழின் dinakaran daily newspaper என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூலை 17ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிலவை ஆராய இஸ்ரோ உருவாக்கிய சந்திரயான் 3 சமீபத்தில் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் விண்ணுக்கு செலுத்தப்பட்டதை விமானத்தில் சென்னைக்கு வந்த பயணி ஒருவர் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிட்டுப் பகிரப்பட்டுள்ளது.

ஶ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. இந்த வீடியோவிலும் இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. ஆனால், ஶ்ரீஹரிகோட்டாவில் இருப்பது போன்று மிகவும் நெருக்கமாக இல்லை. மேலும் அதன் அருகில் எந்த விமான ஓடுபாதையும் இல்லை. இவை எல்லாம் இந்த வீடியோ உண்மையானதாக இருக்காது என்று உறுதி செய்தன. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வை மேற்கொண்டோம்.

Archive

முதலில் வீடியோவில் உள்ள ஆங்கில வாசகத்தை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த வீடியோவை Massimo @Rainmaker1973 ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 23ம் தேதி பதிவிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. அதில், "ராக்கெட் விண்ணில் செலுத்தும் போது தற்செயலாக அந்த வழியாக வந்த விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ. டிசம்பர் 11 ஸ்பேஸ் எக்ஸ் HAKUTO-R மிஷனின் போது கேப் கனாவெரலில் (Cape Canaveral) எடுக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேப் கனாவெரல் என்பது அமெரிக்காவின் நாசா ராக்கெட் ஏவுதளம் ஆகும்.

Cape Canaveral Google Maps I Sriharikota Google Maps

இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய கேப் கனாவெரலின் ராக்கெட் ஏவு தளத்தின் கூகுள் மேப் படத்தை எடுத்தோம். இரண்டும் ஒன்று என்பது இந்த ஒப்பீட்டில் உறுதியானது. நம்முடைய ஆய்வில் 2023 பிப்ரவரியில் இந்திய ஊடகங்களில் இந்த வீடியோ பற்றிய செய்தி வெளியாகி இருப்பதையும் காண முடிந்தது.

Archive

மற்றொரு ட்வீட் பதிவில் இது ஸ்பேஸ் எக்ஸ் ஃபெல்கான் 9 ஏவப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ ஶ்ரீஹரிகோட்டாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்படுகிறது.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2022 டிசம்பரில் எடுக்கப்பட்டதாக பதிவுகள் கிடைத்துள்ளன. இந்த வீடியோ 2023 பிப்ரவரில் வைரல் ஆகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஶ்ரீஹரிகோட்டாவில் சந்திரயான் 3 திட்டத்தின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்காவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட வீடியோவை இந்தியாவில் சந்திரயான் 3 ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்டதாக தவறாக பகர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சந்திரயான் 3 ஏவப்பட்டதை விமானத்தில் இருந்து பதிவு செய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False