சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா?

Update: 2024-09-13 14:12 GMT

‘’சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில் ‘’BIG BREAKINGS NEWS !!! ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ND கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள TDP கட்சியின் இரு அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார். வெளியில் இருந்து பாஜக ஆட்சிக்கு ஆதரவு தரப்போவதாக தகவல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தெலுங்கு தேசம் கட்சி, 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இதன்படி, பெரும்பான்மை பெற்ற தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சியமைத்துள்ளது.


Full View

இதேபோன்று மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி கணிசமான இடங்களை வென்றது; பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

Full View

இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார், என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டிருந்தால், இந்திய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதுபோல எந்த செய்தியும் ஊடகங்களில் காண கிடைக்கவில்லை.


அதேசமயம், இது 2018ம் ஆண்டு வெளியான செய்தி என்று தகவல் கிடைத்தது. ஆனால், இதற்கும் தற்போதைய அரசியல் சூழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த செய்தி வெளியிடப்படும் நொடி வரையிலும், பாஜக கூட்டணியில்தான் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது.

Full View

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

NDTV Link l India Today Link

எனவே, 2018ம் ஆண்டு ABP ஊடகம் வெளியிட்ட செய்தியை எடுத்து, புதியது போன்று தற்போது சிலர் பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  ‘’சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
Claimed By :  Social Media User
Fact Check :  -
Tags:    

Similar News