‘’கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற செவிலியர் டிவியில் பேசிக் கொண்டிருந்தபோதே துடிதுடித்து இறந்துபோனார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Video Link

இதில், ‘’பெண் ஒருவருக்கு, கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக போடுகிறார்கள்; சிறிது நேரத்தில் அந்த பெண் பேசியபடியே மயங்கி விழுகிறார். அவர் இறந்துவிட்டார்,’’ என்று குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது உலக அளவில் மக்களை பீதியடையச் செய்வதாக உள்ளதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, வாசகர்கள் சிலர் அனுப்பியிருந்தனர்.

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில், சில நாடுகள் மருத்துவ பரிசோதனை வெற்றி பெற்றுவிட்டதாகவும் குறிப்பிடுகின்றன. சில நாடுகள், தங்களது கண்டுபிடிப்பை மக்களிடையே பரிசோதனை செய்யவும் தொடங்கியுள்ளன.

இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதில், ஏராளமானோர் உயிரிழந்துவிட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.

Reuters Link I Nationalgeographic Story Link

இதையொட்டி, நாம் ஆய்வு செய்யும் வீடியோ தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உண்மையில், இந்த சம்பவம் எங்கே நடந்தது, இதில் உள்ள பெண் இறந்துவிட்டாரா என நாமும் தகவல் தேடினோம்.

அப்போது, குறிப்பிட்ட பெண்ணின் பெயர் Tiffany Dover என்றும், அவர் அமெரிக்காவின் டென்னஸ் மாகாணத்தில் உள்ள Catholic Health Iniatives Memorail Hospital ஊழியர் என்றும் தெரியவந்தது.

அவர், 17.12.2020 அன்று அவரது மருத்துவமனை சார்பாக நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றார். தடுப்பூசி போடப்பட்ட நிலையில், திடீரென அவர் வலி காரணமாக, மயங்கிவிட்டார். அதற்குள், அந்த வீடியோவை பலரும் இறந்துவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர் என்று தெரிகிறது.

குறிப்பிட்ட பரிசோதனை காட்சியை நேரலையில், CHI மருத்துவமனை சார்பாக, ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளனர்.

இதற்கடுத்தப்படியாக, டிஃபானி உயிரிழந்துவிட்டதாக, வதந்தி பரவியதால், அவர் நலமுடன் உள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில், உடனடியாக, அவரை வைத்து மற்றொரு வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இந்த வீடியோவில், ‘’வலி தாங்காமல் அவ்வப்போது மயக்கமடைவது எனக்கு இயல்பான ஒன்றுதான், கொரோனா வைரஸ் பரிசோதனையால் எனக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை,’’ என்று அவர் கூறுவதைக் காணலாம்.

இதுபற்றி CHI மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளித்து, ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

CHI Hospital Tweet Link I Archived Link

எனவே, குறிப்பிட்ட செவிலியர் உயிருடன்தான் உள்ளார்; அவர் மயக்கமடைந்த காட்சியை எடுத்து, இறந்துவிட்டார், என்று கூறி வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதுபற்றி AP News ஊடகம் ஆய்வு செய்து, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

APNews Link I Archived Link

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் செவிலியர் உயிரிழந்தாரா?- உண்மை இதோ!

Fact Check By: Pankaj Iyer

Result: False