மோடி மீது Covaxin தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டது, என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

Covaxin தடுப்பூசிதான் உலகிலேயே முதன்முதலாக தயாரிக்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி என்றும், அந்த ஊசி முதலில் மோடியை வைத்துத்தான் பரிசோதிக்கப்பட்டது என்றும் கூறி மிக நீண்ட ஒரு பதிவை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை போல ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
கடந்த 2019ல் தொடங்கி படிப்படியாக உலக நாடுகளை பெரிதும் அச்சப்படுத்தி, இயல்பு வாழ்க்கையை முடக்கி பொருளாதாரச் சுமையை ஏற்படுத்திய பெருந்தொற்று கோவிட் 19. மனித குல வரலாற்றில் இது ஒரு பேரிடர் என்றே உலக நாடுகளால் வர்ணிக்கப்படுகிறது. இந்த சூழலில், கோவிட் 19க்கு உலக நாடுகள் பலவும் 2020ல் இருந்து தீவிரமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளை தொடங்கின.

முதலில், சீனா, அதிகாரப்பூர்வமாக, மனிதர்களை வைத்து தடுப்பூசி பரிசோதனையை செய்ததாக அறிவித்தது.

sciencedaily.com link

இதே கால கட்டத்தில் அமெரிக்காவும் கோவிட் 19க்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொண்டது.

nih.gov link

ஆனால், ரஷ்யா சற்று விரைந்து 2020 ஆகஸ்ட் மாதத்தில் உலகின் முதல் கோவிட் 19 தடுப்பூசியை கண்டுபிடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளதாக, அறிவித்தது.

Livemint Article Link

இதைத்தொடர்ந்தே, மற்ற நாடுகளும் கோவிட் 19 தடுப்பூசியை அறிமுகம் செய்ய தொடங்கின. அதில், இந்தியாவைச் சேர்ந்த Bharat Bio Tech மேற்கத்திய நாடுகளின் ஃபார்முலாவை பின்பற்றி கோவிட் 19 தடுப்பூசியை தயாரித்தது.

ரஷ்யா 2020ல் ஸ்புட்னிக் தடுப்பூசியை அறிமுகம் செய்த நிலையில், 2020 ஜூலையில் இருந்துதான் பாரத் பயோடெக் Covaxin தடுப்பூசிக்கான பரிசோதனையை மனிதர்களிடம் இந்திய அளவில் தொடங்கியது.

bharat biotech press release link

இந்த பரிசோதனையை விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் முழுமையாக நடத்தி, அதில் சாதகமான முடிவுகள் கிடைத்த பிறகே, வர்த்தகப் பயன்பாட்டிற்காக, Covaxin தடுப்பூசியை கொண்டுவர பாரத் பயோடெக் முன்வந்தது.

PIB press release link I Europeanpharmaceuticalreview link

இது மட்டுமல்ல, 2021 ஜனவரி மாதம் கோவிட் 19 தடுப்பூசியை முதலில் சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு போடும் பணிகள் இந்திய அளவில் தொடங்கின. அதன் பிறகுதான், 2021 மார்ச் மாதம் பிரதமர் மோடி கோவிட் 19 தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

The Hindu Article Link

இதுபற்றி நாம் பாரத் பயோடெக் நிறுவனத்தினரிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மோடியை முதல் ஆளாக வைத்து Covaxin பரிசோதனை செய்யப்படவில்லை; உலகின் முதல் கோவிட் 19 தடுப்பூசி ஸ்புட்னிக் வி- Covaxin அல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:Covaxin தடுப்பூசி முதன் முதலாக மோடி மீது பரிசோதிக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False