முஸ்லிம் முதியவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Update: 2024-09-25 11:45 GMT

மோடியின் இந்தியாவில் முஸ்லிம் என்பதற்காக முதியவர் ஒருவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

இஸ்லாமிய முதியவர் ஒருவரை நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தாக்கும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மோடியின் இந்தியாவில் முஸ்லீமாக இருப்பது சாபமாகிவிட்டது - இந்த இந்துத்துவா குண்டர் ஒரு முஸ்லீம் என்பதற்காக கண்ணாடியை உடைத்து ஒரு வயதான முஸ்லிமை அறைந்தார்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. தாக்கிய நபரைப் பார்க்கும் போது தாடியுடன் இஸ்லாமியர் போல உள்ளார். வீடியோவில் வங்க மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. எனவே, இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.

https://youtu.be/F5eVpJNTeB8

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அப்போது இந்த வீடியோ செப்டம்பர் மாதம் 2வது வாரத்திலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்று அந்த வீடியோ மற்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.


உண்மைப் பதிவைக் காண: voice7news.tv I Archive 1 I dhakatribune.com I Archive 2

தாக்கப்பட்ட முதியவர் பெயர் அப்துல் ரஷீத் மியா என்றும் அவர் வங்கதேசத்தின் பர்குனா (Barguna) என்ற மாவட்டத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னாள் தளபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் வேறு ஒரு கட்சித் தலைவரை அவதூறாகப் பேசியதாகவும், சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியலில் தன்னுடைய தந்தையின் பெயரை சேர்க்கப் பணம் பெற்றார் என்றும் கூறி பிங்க் நிற சட்டை அணிந்த ஷவோன் மொல்லா (Shawon Molla) என்ற நபர் தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Full View

நம்முடைய ஆய்வில் இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது இல்லை. இஸ்லாமிய முதியவரை இந்துத்துவா குண்டர் தாக்கவில்லை. இந்த சம்பவம் நடந்தது வங்கதேசத்தில் என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முஸ்லிம் முதியவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

முஸ்லிம் முதியவரை தாக்கும் இந்துத்துவா குண்டர் என்று பரவும் வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim :  மோடியின் இந்தியாவில் முஸ்லிம் என்பதற்காக முதியவர் ஒருவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று பரவும் வீடியோ!
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News