லெபனானை நோக்கி வரும் துருக்கி போர்க் கப்பல்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Update: 2024-10-11 13:41 GMT

லெபனானை நோக்கி துருக்கி நாட்டுப் போர் கப்பல்கள் வரத் தொடங்கியுள்ளது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook

ஏராளமான போர் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லெபனான் நோக்கி துருக்கி போா் கப்பல்கள் சூழும் போர் மேகம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தின. இந்த நிலையில் துருக்கி நாடும் லெபனான் நாட்டுக்கு தன்னுடைய கடற்படையை அனுப்பியதாக வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்க போர் கப்பல்கள் அணிவகுப்பு அல்லது போர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ போல் உள்ளது. எனவே, இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2023ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது 2023ம் ஆண்டில் துருக்கி கடற்படையின் பிரம்மாண்ட போர் கப்பல் அணிவகுப்பு மற்றும் ஏர் ஷோ-வில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக துருக்கி அரசின் தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியும் கூட நமக்குக் கிடைத்தது.


உண்மைப் பதிவைக் காண: dailysabah.com I Archive I iletisim.gov.tr I Archive

சரி, லெபனானுக்கு ஆதரவாக போரில் ஈடுபட துருக்கி நாடு தன்னுடைய கடற்படையை அனுப்பியுள்ளதா, அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். லெபனானில் உள்ள தன்னுடைய 2000க்கும் மேற்பட்ட குடிமக்களை அழைத்து வர கடற்படை கப்பலை அனுப்பியதாக செய்தி கிடைத்தது. மற்றபடி இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட போர் கப்பல்களை அனுப்பியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

Full View

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ 2023ம் ஆண்டு துருக்கியில் நடந்த கப்பல் அணிவகுப்பின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

துருக்கியில் 2023ம் ஆண்டு நடந்த போர் கப்பல் அணிவகுப்பை லெபனானுக்கு ஆதரவாக வரும் துருக்கி கப்பல்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim :  லெபனானுக்கு ஆதரவாக கடற்படையை அனுப்பியதா துருக்கி?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News