திமுக பவள விழாவில் கருணாநிதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது ஏன்?

Update: 2024-10-17 08:16 GMT

‘’திமுக பவள விழாவில் கருணாநிதிக்கு ‘காலி’ சீட் ஒதுக்கப்பட்ட அவலம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link 1 l Claim Link 2

இதில், ’’எனக்கு அதிபுருஷ் படத்துக்கு அனுமானுக்கு சீட் போட்டு வச்சது நியாபகம் வருது 😂😭#DMK ‘’, என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன் வீடியோ ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் மற்றும் இதர திமுக நிர்வாகிகள் காணப்படுகின்றனர். மு.க.ஸ்டாலின் அமர்ந்துள்ள சீட் அருகே, கருணாநிதியின் படம் ஒன்றை வைத்து, அந்த இருக்கை காலியாக விடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, உயிருடன் இல்லாத நபருக்கு, மரியாதை காரணமாக, சீட் ஒதுக்கப்பட்டது போன்று இருப்பதாகக் கூறி பலரும் விமர்சிக்கின்றனர்.


பலரும் இதனை உண்மை என நம்பி, எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கடந்த செப்டம்பர் 17ம் தேதியன்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயரில் விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Full View

Hindu Tamil Link l Maalaimalar Link 

இதுதவிர, இந்த விழாவில் AI தொழில்நுட்பம் மூலமாக, கருணாநிதி பேசுவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

News 18 Tamil Link l Dinasuvadu Link l ETV Bharat

இதற்காக, மு.க.ஸ்டாலினுக்கு அருகே ஒரு இருக்கையில் கருணாநிதி புகைப்படம் வைத்து சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.


இதுதொடர்பான காட்சிகளை எடுத்து, ‘’உயிருடன் இல்லாத நபரின் புகைப்படத்திற்கு, சீட் ஒதுக்கி திமுக மரியாதை செலுத்துகிறது; அதிபுருஷ் படத்துக்கு அனுமானுக்கு சீட் போட்டது போல இது உள்ளது,’’ என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், இவ்வாறு சீட் ஒதுக்கியதன் மூலமாகவே, அந்த இடத்தில் கருணாநிதி அமர்ந்துள்ளது போன்ற தோற்றம் AI உதவியுடன் கொண்டுவரப்பட்டது. 


இதுதொடர்பாக, திமுக செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் முழு உண்மை இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  திமுக பவள விழாவில் கருணாநிதிக்கு ‘காலி’ சீட் ஒதுக்கப்பட்ட அவலம்.
Claimed By :  Social Media User
Fact Check :  MISSING CONTEXT
Tags:    

Similar News