‘நான் சூட்டிய ரத்தினம் என்ற பெயர்தான் ரத்தன் டாடா என மாறியது’ என்று சீமான் கூறினாரா?

Update: 2024-10-11 12:40 GMT

‘’ரத்தன் டாடா எங்க ஊர்தான்; அவருக்கு நான்தான் முதலில் ரத்தினம் என பெயர் வைத்தேன்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ எல்லாருமே தப்பா புரிஞ்சுக்கிறாங்க!!
அவரு பெயரு ரத்தான் டாடா இல்ல!!!
ரத்தினம் !!!!
எங்க ஊர்ல டால்டா கடை வச்சிருந்தாரு!!!
நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது என்னை துக்கி வச்சு சோறு ஊட்டுவாரு!!!!
நான் தான் அவரை முதல் முதலில் ரத்தினம் தத்தான்னு கூப்பிட்டேன்!!!!
என் நினைவாகத்தான் அவரு தனது பேருக்கு பின்னாடி ரத்தினம் தத்தா ன்னு போட்டாரு!!!!!
எனக்கு பிடிக்கதவாங்க அந்த பெயரை மாத்தி ரத்தான் டாடான்னு வச்சுட்டாங்க😆
1000 இருந்தாலும் நான் அவருக்கு பேரன் அவர் எனக்கு தத்தா,
தத்தா புகழ் ஓங்குக!!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதேபோன்று, சீமான் யார் என்றே எனக்குத் தெரியாது, என்று ரத்தன் டாடா சாகும் முன்பாக, கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும், ஒரு தகவல் பகிரப்படுகிறது. 


மேலும், ரத்தன் டாடாவுடன் சீமான் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் என்றும் ஒரு தகவல் பரவுவதை கண்டோம்.

Claim Link 1 I Claim Link 2 l Claim Link 3 l Claim Link 4

உண்மை அறிவோம்:

தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் காலமானார். இதையொட்டி சமூக வலைதளங்களில் பலவிதமான தகவல்கள் பகிரப்படுகின்றன.

இதில் ஒன்றுதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள சீமான், ரத்தன் டாடா தொடர்பான கடிதம், புகைப்படம் போன்றவையும். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தரப்பில் பேசியுள்ளோம்.


இந்த ரத்தினம் தாத்தா கதையை முதலில் மூக்கு நோண்டியும் முட்டாபயல்களும் என்ற ஃபேஸ்புக் ஐடி பதிவிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி, மற்றவர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.

அடுத்தப்படியாக, சீமான், ரத்தன் டாடா ஒன்றாக எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும்.

Full View

Generic Aadhaar என்ற நிறுவனத்தை நடத்தும் Arjun Deshpande முதலீடு பெறுவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன் ரத்தன் டாடாவை சந்தித்துப் பேசினார். அந்த படத்தை எடுத்து, சீமான் முகத்துடன் எடிட் செய்து, தற்போது வதந்தி பரப்புகிறார்கள். 


எனவே, சீமான் பெயரில் பரவும் ‘’ரத்தினம் தாத்தா கதை, ரத்தன் டாடா எழுதிய கடிதம் மற்றும் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம்’’ என அனைத்துமே வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  ரத்தன் டாடா எங்க ஊர்தான்; அவருக்கு நான்தான் பெயர் வைத்தேன்- சீமான் பேச்சு!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE
Tags:    

Similar News