குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது நபர் என்று பரவும் தகவல் உண்மையா?

Update: 2024-10-12 13:50 GMT

‘’குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தி டெம்ப்ளேட் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘’ *ம.பி.யில் 188 வயது முதியவர்.!!*
*மத்திய பிரதேசம் அருகே உள்ள குகையிலிருந்து வெளியே வந்த 188 வயது முதியவர் சியாராம் பாபா.*
*அவர் ராம பக்தராக இருந்ததாகவும், ம.பி.யில் உள்ள பத்யன் ஆசிரமத்தில் தங்கி 21 மணி நேரமும் ராமாயணம் படித்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்*
*இதற்கு முன் 10 வருடங்கள் காலில் கடும் தவம் செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். இதே தகவலை சிலர் ‘உத்தரப் பிரதேசம்’ என்றும், ‘கர்நாடகா’ என்றும் குறிப்பிட்டு பரப்புவதைக் காண முடிகிறது. 


உண்மை அறிவோம்:

இவர்கள் கூறுவது போன்று, சியாராம் பாபா குகையிலிருந்து தற்போதுதான் வெளியே வந்தாரா என்றால், இல்லை என்பதுதான் பதில். மேலும், இவர் கர்நாடகா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவரும் கிடையாது.

சியாராம் பாபா மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றங்கரையில் உள்ள Siyaram Baba Aashram Bhattyan என்ற மடத்தில் வசிக்கிறார். 

Full View

இளமைக்காலத்தில், இமயமலை சென்று வரம் பெற்று, யோகியாக மாறினார்; 10 ஆண்டுகள் ஒற்றை காலில் நின்று தவம் செய்தார்; 12 ஆண்டுகள் யாரிடமும் பேசாமல் இருந்தார், ஆஞ்சநேய பக்தர், ராம நாமம் ஜெபிப்பவர் என்பதெல்லாம் இவர் பற்றி உள்ளூர் மக்கள் சொல்லும் பெருமைகள்…

Full View

பாபா, மூக்குக் கண்ணாடி அணிய மாட்டார்; அவருக்கு 188 வயது என்று சொல்வதும் பொய். மூக்குக் கண்ணாடி அவ்வப்போது அணிவார். அவரது வயது 110 என்று சிலரும், 130 வயது என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால், 94 வயதுதான். 

ஏற்கனவே, நமது Fact Crescendo English குழு, இதுபற்றி ஃபேக்ட்செக் செய்து, கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ‘’ சியாராம் பாபாவுக்கு 188 வயது என்று கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறு. ஆதார் ஆவணத்தின்படி அவருக்கு 94 வயது,’’ என்று தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளனர்.

எளிமையாக வாழும் சியாராம் பாபா தனக்கு வரும் நன்கொடைகளை பொதுமக்களுக்கும், பொதுப் பணிகளுக்கும் செலவிடுவது வழக்கம்.

மேலும், சியாராம் பாபா தொடர்பான புகைப்படங்கள், வீடியோ மற்றும் அவரது அன்றாட செயல்பாடுகள் பற்றிய அப்டேட்களை Sant Siyaram Baba Ashram என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலில் முழு உண்மை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது நபர்- வைரல் வீடியோ!
Claimed By :  Social Media User
Fact Check :  MISSING CONTEXT
Tags:    

Similar News