சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ காத்து வாக்குல வந்த செய்தி : ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ தொடர்பாக, நாம் தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2021ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, விவரம் கிடைத்தது.
இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தின் கோட்லி தாலுகாவிற்கு உட்பட்ட சர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக நிலத்தின் உரிமையாளருக்கும், மகிளா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இதன்பேரில் நாம் Kotli Chowki போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ‘’இது பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் கிடையாது. சாலை விரிவாக்கப் பணி ஒன்று தொடர்பாக நடைபெற்ற மோதல். அப்போதே, இரு தரப்பும் புகார் செய்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். உண்மை தெரியாமல், சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றி தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம்,’’ என்றார்.
எனவே, 2021ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை எடுத்து, ஹரியானாவில் பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் என்று கூறி வதந்தி பரப்புகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: False