‘’மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை,’’ எனக் குறிப்பிட்டு கலைஞர் செய்திகள் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இதேபோல, கலைஞர் செய்திகள் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றும் வேகமாகப் பரவி வருகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

Kalaignar Seithigal Tweet Link I Archived Link

இந்த நியூஸ் கார்டு மற்றும் வீடியோவை பலரும் உண்மை என ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதால், இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நம்மிடம் வாசகர்கள் பலரும் கேட்டுக் கொண்டதால், நாமும் ஆய்வை மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு கட்டாய மதமாற்றமே காரணம் என்று கூறி பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம் செய்தன. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், லாவண்யா தற்கொலை பற்றி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி, சில ஊடகங்களில் மார்ச் 03, 2022 அன்று காலை பிரேக்கிங் நியூஸ் வெளியிடப்பட்டது. அதில், மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, கலைஞர் செய்திகள், நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Dinamani Link I Archived Link

இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி, அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் அவசரகதியில் வதந்தி பரப்பாதீர்கள் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Archived Link

இதையேற்று, நியூஸ் 7 தமிழ் ஊடகம் உடனடியாக விளக்கம் ஒன்றை வெளியிட்டது. இதுபற்றி நம்மிடம் பேசிய நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா, ‘’ எங்களது முந்தைய செய்தியில் தவறான தகவல் உள்ளதாக, அண்ணாமலை போன்றோர் சுட்டிக்காட்டினர். இதையேற்று, ஃபாலோ அப் முறையில் விளக்கம் அளித்து மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறோம்,’’ என்றார்.

Archived Link

இந்த விவகாரம் சர்ச்சையானதாக மாறவே, PIB Tamil இதுபற்றி விளக்கம் அளித்து ட்வீட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

PIB FactCheck Tweet Link I Archived Link

‘’மாணவி லாவண்யா தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் சாட்சிகள் பற்றிய போலீஸ் விசாரணை ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு நியாயமானதாக இல்லை; தவிர, கட்டாய மதமாற்றம் இதற்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படவில்லை,’’ என்றுதான் NCPCR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

The Economic Times Link

எனினும், கலைஞர் செய்திகள் பழைய செய்தியை மாற்றாமல் அப்படியே தொடர்வதால், சமூக வலைதள பயனாளர்கள் அதனை உண்மை போல பகிர்ந்து, மற்றவர்களை குழப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:லாவண்யா தற்கொலை விவகாரம்: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியது என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: False