திருப்பதி கோவில் பிரசாதம் தயாரிக்கும் நிறுவனத்தில் முஸ்லீம் ஊழியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லீம் ஊழியர்களின் பட்டியல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் போன்ற பல்வேறு மொழிகளிலும் இந்த தகவல் பகிரப்படுகிறது.
இந்த பதிவில் ‘’ திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற வர்களின் பெயர். இந்த பெயர்களை பார்க்கும் போது, அசைவப் பொருட்களை பிரசாதத்தில் கலந்து திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாப்பிடகொடுத்ததில் ஆச்சரியமில்லை.
இந்தியாவில் ஒரு வக்ஃப் வாரியத்தையோ அல்லது வேறு ஏதேனும் முஸ்லிம் அமைப்பையோ இந்துக்கள் நடத்த முடியுமா? நமக்குத் தேவையானது வக்ஃப் வாரியத்தில் உள்ளதுபோல் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் கோவில்கள் முழு இந்துக் கட்டுப்பாட்டில் விடவேண்டும்.
அப்போதுதான் கோவிலின் புனித தன்மை காக்கப்படும். புகைப்பட உபயம் பிரித்தி பட்டாச்சார்யா,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பதி லட்டு தயாரிப்பில் மாடு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்படுவதாக, சர்ச்சை வெடித்துள்ளது.
Dinamani Link l Times of India
இந்த சூழலில், திருப்பதி கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்றவர்களின் பெயர், என்று கூறி மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர்.
ஆனால், இதில் உண்மை இல்லை. ஏனெனில் இவர்கள் கூறும் A.R.Foods (Pvt) Limited என்பது பாகிஸ்தானில் செயல்படும் அரிசி மற்றும் மசாலா பொருட்களை விற்கும் ஒரு நிறுவனமாகும். இதற்கும் திருப்பதி லட்டு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
Rocketreach இணையதளம் சென்று தகவல் தேடும்போது இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பெயர், பதவி போன்றவையும் காண முடிகிறது. இதனை எடுத்தே மேற்கண்ட வகையில் தகவல் பரப்புகின்றனர். இதோ லிங்க்…
அடுத்தப்படியாக, திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் அடிபடும் நிறுவனத்தின் பெயர் AR Dairy Food Private Limited. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம். இதன் அதிகாரப்பூர்வ முகவரி இதோ https://raajmilk.com/contact/
AR Dairy Food Private Limited நிறுவனம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அந் நிறுவனம் தரப்பில் ஏற்கனவே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், AR Dairy Food Private Limited உரிமையாளர், இயக்குனர் உள்பட அனைவருமே இந்துக்கள்தான். இவர்களின் பெயருக்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பெயர்ப் பட்டியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் Ministry of Corporate Affairs இணையதளத்திலும் தகவல் சரிபார்த்து, உறுதி செய்துள்ளோம்.
எனவே, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்பான பட்டியலை எடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram