ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கேலண்ட் கொல்லப்பட்டாரா?

Update: 2024-10-03 07:12 GMT

‘’ஈரான் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கேலண்ட்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ #Iran நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் கேலண்ட் செத்தொழிந்தான்.

போய் தொலைடா பும்டா மவனே.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.


உண்மை அறிவோம்:

மேற்கண்ட ட்வீட் பதிவு அக்டோபர் 02, 2024 அன்று 12.51 மணியளவில் பகிரப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய நிலவரப்படி, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து, யோவாவ் கேலன்ட் அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டதைக் கண்டோம்.


இது மட்டுமல்ல, இந்த ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிடப்படுவதற்கு, சில மணி நேரம் முன்பு கூட Yoav Gallant தனது X வலைதளத்தில் பதிவு பகிர்ந்துள்ளதைக் கண்டோம். 


ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கேலண்ட் கொல்லப்பட்டிருந்தால் அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் ஏதேனும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த நொடி வரையிலும் யோவாவ் சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும், ஈரான் தாக்குதல் பற்றி யோவாவ் உடன் ஆலோசனை செய்து வருவதாக, USA Secretary of Defense Lloyd J. Austin III அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். 


யோவாவ் தொடர்பாக, சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே இணைத்துள்ளோம். குறிப்பாக, ராய்ட்டர்ஸ் ஊடகம் யோவாவ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்துள்ளது.

Times of Israel l Reuters

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கேலண்ட் நலமுடன் உள்ளார். ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தனது அன்றாட செயல்பாடுகள் பற்றி அவ்வப்போது அவர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்தும் வருகிறார் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim :  இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கேலண்ட் ஈரான் தாக்குதலில் மரணம்!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE
Tags:    

Similar News