லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லாவை அழிக்கும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Update: 2024-10-18 06:57 GMT

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தெற்கு லெபனானில் மறைந்திருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று அழித்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook

ராணுவ வீரர்கள் வாசலில் நின்றுகொண்டு வீட்டுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவது, வீட்டுக்குள் குண்டு வீசி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தெற்கு லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லாக்களைத் தேடித் தேடி அழித்தொழிக்கும் வேலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீடுவீடாகச் சென்று ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்தவர்களை தாக்கி வருவதாக வீடியோ ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Full View

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அதில், வடக்கு காஸாவின் ஜபாலியா (Jabalia) என்ற பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்திய காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

மேலும், இந்த வீடியோவுடன் 2023 டிசம்பரில் இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளும் நமக்குக் கிடைத்தன. அவற்றிலும் ஜபாலியா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்ட காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் வீடியோ இல்லை என்பதை உறுதி செய்தன.


உண்மைப் பதிவைக் காண: israelhayom.co.il I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 டிசம்பரில் வடக்கு காஸாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் காட்சி என்பதைத் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை இஸ்ரேல் படையினர் வீடுவீடாக சென்று அழித்த காட்சி என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய பழைய வீடியோவை எடுத்து லெபனானில் நடத்திய தாக்குதல் என்று தவறான தகவலை பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel
Claim :  தெற்கு லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை அழித்து வரும் இஸ்ரேல் ராணுவம்!
Claimed By :  Social Media Users
Fact Check :  PARTLY FALSE
Tags:    

Similar News