பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பெரியார் பற்றி சீமான் கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எனக்குத் தெரியாது, ஆய்வு செய்தால்தான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு வீடியோ நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த வீடியோவை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த நியூஸ் […]

Continue Reading

ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து பயணித்தவர் என்று பரவும் தகவல் உண்மையா?

ரயில் பெட்டிக்கு அடியில் ரயில் சக்கரங்களுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ தூரம் பயணித்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரங்களுக்கு மேல் இருந்து ஒருவர் இறங்கி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிக்கெட் எடுக்க பணமில்லாமல், ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ., பயணித்த […]

Continue Reading

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தப்படும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டப்பட்டுக் கிடக்கும் சாக்கு மூட்டையைத் திறக்கு கீழே கொட்ட, அதிலிருந்து சிறுவன் ஒருவன் உணர்வு அற்ற நிலையில் விழுகிறான். நிலைத் தகவலில், “குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம் புள்ள புடிக்கிறவன் சாக்கு முட்டையில போட்டு கொண்டு போயிடுவான் கேள்விப்பட்டிருப்போம் ஆனா அதை இப்ப நம்ம நேர்ல […]

Continue Reading

823 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி 2025ல் வருகிறது என்று பரவும் தகவல் உண்மையா?

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அரிய பிப்ரவரி இந்த 2025ம் ஆண்டு நிகழ்கிறது. இந்த பிப்ரவரியில் தான் எல்லா கிழமைகளுக்கும் சமமான நாட்கள் உள்ளன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2025 பிப்ரவரி மாத நாட்காட்டி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வரும் பிப்ரவரி என்பது இப்போது வாழும் எவரும் பார்க்கக்கூடிய […]

Continue Reading

ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை. ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை – […]

Continue Reading

தேசிய கீதம் பாட முடியாமல் திணறிய சங் பரிவார் நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

சங்கிகளுக்கு தேசப்பற்று இல்லை, தேசிய கீதம் கூட பாடத் தெரியாமல் திணறுகின்றனர் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவி நிற மேல் ஆடை அணிந்த ஒருவர் கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதத்தைத் தப்புத் தப்பாகப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் “தேசப்பற்று சங்கிகள்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சங்கி: உங்களுக்கு தேசபற்றே இல்ல தேசியகீதம் […]

Continue Reading

வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்த புதிய முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் மற்றும் அவரது சீடர்கள் குலவை ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் புது வைரஸ் பரவுவதைத் தடுக்க…. முன்பு மணியடித்து […]

Continue Reading

“மோடியை தொடுங்க” என்று கிறிஸ்தவ போதகர் ஜெபம் செய்ததை “கொல்லுங்க” என்று மாற்றி பரப்பிய விஷமிகள்!

மோடி, அமித்ஷா, மு.க.ஸ்டாலினை கொல்ல வேண்டும், அயோத்தியில் ராமர் கோவிலை இடிக்க வேண்டும் இயேசுவே என்று கிறிஸ்தவ மத போதகர் பிரார்த்தனை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் ஜெபம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரைக் கொல்லுங்க.. அமித்சாவைக் கொல்லுங்க… நிர்மலா சீத்தாராமனைக் கொல்லுங்க .. […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் இந்த சம்பவம் நடந்தது போன்று பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புகார் கொடுக்க வந்த பெண்.. கழிவறைக்கு அழைத்துச் சென்று […]

Continue Reading

புதுப்பேட்டை பாணியில் திருமணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

புதுப்பேட்டை திரைப்பட பாணியில் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archive மண மேடையில் மண மகளுக்கு தாலி கட்டாமல், அருகிலிருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் Behindwoods  லோகோ உள்ளது. வீடியோவின் மீது, “தாலியில் கவுந்த மாப்பிள்ளை” என்று […]

Continue Reading

மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

புல்டோசரில் நின்று பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் புல்டோசரின் பக்கெட் பகுதியில் நின்று பிரசாரம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி புல்டவுசரால் ரவுடிகளின் வீட்டை இடிப்பது தவறு -அதுகது யோகி: சின்ராசு எடுடா […]

Continue Reading

கிறிஸ்தவ பள்ளியின் மதவெறி என்று பரவும் வீடியோ உண்மையா?

அய்யப்ப மாலை அணிந்து வந்த மாணவனைப் பள்ளிக்குள் அனுமதிக்காமல் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் அத்துமீறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive கிறிஸ்தவ பள்ளிக்குள் அய்யப்ப மாலை அணிந்து வந்த மாணவன் ஒருவனை வெள்ளை சேலை அணிந்த இரண்டு பெண்கள் அனுமதிக்க மறுப்பது போலவும், பொது மக்கள் திரண்டு அவர்களுக்கு எதிராக போராடியது போலவும், கடைசியில் போலீஸ் வந்து […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டியதாக பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை கொடூரமாக வெட்டும் வீடியோ எக்ஸ் போஸ்ட் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதும். கண்டபின் என்னைக் குறை கூறக் கூடாது 😫😫😫 […]

Continue Reading

ஈபிள் டவர் பற்றி எரிவது போன்று பரவும் புகைப்படம் உண்மையா?

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் தீப்பிடித்து எரிந்தது போன்று ஒரு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஈபிள் டவரில் தீப்பற்றியது! பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் 12 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு […]

Continue Reading

1921-ல் மதுரை விமானநிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1921ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலையத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archived 1940 – 50களில் எடுக்கப்பட்ட விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சொக்கநாதர் ஏர்போர்ட் மதுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “1921 இல் மதுரை ஏர்போர்ட்டின் அழகிய தோற்றம்! அப்போது […]

Continue Reading

காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?

நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு […]

Continue Reading

வங்கதேச எல்லை நகரைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?

வங்கதேச எல்லை நகரான மாங்டாவ் என்ற ஊரை மியான்மர் ராணுவம் கைப்பற்றி, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை சிறைபிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் ஏராளமான இளைஞர்களை அரை நிர்வாணமாக கைகளை கட்டி அழைத்துச் செல்வது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பர்மா புத்தமத ராணுவம் பங்களாதேஷ் […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டிய பாலம் என்று தென்னாப்பிரிக்கா படத்தை பரப்பும் விஷமிகள்!

தென்னாப்பிரிக்காவில் கட்டப்பட்ட சிறிய பாலம் ஒன்றின் புகைப்படத்தைத் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கட்டியது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறிய அளவிலான தரைப்பாலம் ஒன்றின் இரண்டு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பாலம் கட்டிட்ட.. வாய்க்கால் எங்கயா? கமிசன் போக கொடுத்த காசுல பாலம் மட்டும் தான் கட்ட முடிஞ்சுது… திமுக தான்டா வெத்துவேட்டு Dmkfails” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து மாணவர்கள் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்து மாணவரை இஸ்லாமிய மாணவர் தாக்குகிறார் என்றும் அதனால் பாஜக-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவர் ஒருவரை ஏராளமான மாணவர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷ் இந்து மாணவரின் நிலையை பாருங்கள் இந்த நிலை தமிழகத்தில் எப்போது வேனாலும் வரலாம் நாம் பாதுகாப்பாக […]

Continue Reading

“வங்கதேச இந்துக்கள் பற்றி கவலையில்லை” என்று கைப்பை கொண்டு வந்தாரா பிரியங்கா காந்தி?

“வங்கதேச இந்துக்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட கைப் பை ஒன்றை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கொண்டு வந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரியங்கா காந்தியின் கைப் பையில் “I dont care about Bangladeshi Hindus” என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

குலசை கடற்கரையில் உருவான புயல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடி மாவட்டம் குலசை கடற்கரையில் புயல் உருவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive கடற்கரை அருகே சூறாவளி காற்று சுழன்று சுற்றும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “குலசை கடற்கரையில் புயல் உருவாகிய காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: சில வெளிநாடுகளில் […]

Continue Reading

மாட்டுக்கறி சாப்பிடுவேன்… சாப்பிட மாட்டேன் என்று மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?

மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஒரு இடத்திலும், மாட்டுக்கறியை சாப்பிட்டதே இல்லை என்று மற்றொரு இடத்தில் இடத்திற்கு ஏற்ப, மாற்றிப் பேசிய திருமாவளவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திருமாவளவனின் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அதுவும் திருமா, இதுவும் திருமா. ஒரு முட்டெலும்புவது கடித்தால்தான் வெறியே அடங்கும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மன்னார்குடி, புதுக்கோட்டை விமானநிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சிலர் மன்னார்குடி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு அங்குள்ள விமான நிலையம் என்று ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு வருகின்றனர். இது எந்த ஊரின் விமானநிலையம் என்பதை அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கழுகு பார்வையில் மன்னார்குடி விமான நிலையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே புகைப்படத்தை சிலர் “கழுகு பார்வையில் புதுக்கோட்டை மாநகராட்சி […]

Continue Reading

நேரு குடும்பத்தை கீழ்த்தரமாக விமர்சித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

ஜவகர்லால் நேரு மோதிலால் நேருவின் மகன் இல்லை என்றும், மோதிலால் நேருவுக்கு பிறந்தவர்கள்தான் முகமது அலி ஜின்னா மற்றும் ஷேக் அப்துல்லா என்றும் குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், முபாரக் அலி என்பஎவரின் வேலையாள் மோதிலால் நேரு என்றும் […]

Continue Reading

“திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆன திராவிட மாடல் பாலத்தில் விரிசல்” என்று பரவும் வீடியோ உண்மையா?

திராவிட மாடல் ஆட்சியில் புதிதாக ரூ.72 கோடியில் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பாலத்தில் பள்ளங்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட ஆரியபாளையம் மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று […]

Continue Reading

“தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி” என்ற பாடலை கேட்டபடி பயணித்தாரா திருமாவளவன்?

தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி என்ற பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரில் கேட்டுக்கொண்டே பயணம் செய்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “‘தலைமைக்கு தகுதியான மனிதன் உதயநிதி’.. ஆதவ் அர்ஜூனாவை நீக்கிய பின் திருமாவளவன் கேட்டு மகிழ்ந்த பாடல்!” என்று இருந்தது. […]

Continue Reading

ராயப்பேட்டை திருவிக சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1910ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்னை ராயப்பேட்டை திருவிக சாலையின் புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தென்னந்தோப்பு நடுவே சாலை இருப்பது போன்று புகைப்படத்தை வைத்து பதிவு ஒன்றை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “கட்டிடங்கள் முளைக்காத பழைய ராயப்பேட்டை திருவிக சாலை! 1910ம் ஆண்டில் தென்னை மரங்கள் சூழ எழில்மிகு சென்னையின் மற்றொரு […]

Continue Reading

ஒடிஷா வீடியோவை எடுத்து தர்மபுரியில் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதாக பரப்பும் விஷமிகள்!

காட்டுப்பன்றி விவசாயி ஒருவரைத் தாக்கும் வீடியோவை எடுத்து தர்மபுரியில் நடந்தது என்று சிலரும் விருதுநகரில் நடந்தது சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காட்டுப் பன்றி மனிதர் ஒருவரை தாக்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி ஊரில் நெடுஞ்சாலையில் காட்டுப்பன்றி மனித மோதல் விவசாயிகள் ???” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: Facebook  மற்றொரு பதிவில், […]

Continue Reading

பங்களாதேஷில் இந்துக்களின் நிலம், கோவில் அடித்து நொறுக்கப்படுகிறது என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்துக்களின் நிலம், கடைகள் அடித்து உடைக்கப்பட்டு, கால்நடைகள் திருடப்படுவதாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்று, கட்டிடம் ஒன்றை அடித்து உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் இந்துக்களின் நிலம் கடைகள் கால்நடைகள அனைத்து அடித்து நொறுக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  உண்மைப் பதிவைக் காண: Facebook  இந்துக்களின் கோவிலை இஸ்லாமியர்கள் […]

Continue Reading

ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்தாமல் மருத்துவம் பார்த்த அன்புமணி என்று பரவும் புகைப்படம்; – நடந்தது என்ன?

ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்தாமல் சிறுவன் ஒருவனுக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவம் பார்த்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெதாஸ்கோப் கருவியை காதில் பொருத்தாமலேயே சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பய்யன் – எனக்கு இஸ்க்கு இஸ்க்கு என்று கேட்கிறது. டாக்டர் – எனக்கும் […]

Continue Reading

2018ம் ஆண்டு விஜய் போஸ்டரை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் திமுக-வினர்!

நடிகர் விஜய் போஸ்டரை எடிட் செய்து, உதயநிதி தலையை வைத்து தி.மு.க-வினர் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி நடிகர் விஜய்யை தன் தோள்பட்டை மீது தூக்கி வைத்திருக்கும் விகடன் வெளியிட்டது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இது தான் நடக்க போகுது 2026…ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் […]

Continue Reading

புனேவில் எடுத்த வீடியோவை சென்னை மெரினாவில் வெள்ளம் என்று பரவும் நெட்டிசன்கள்!

சென்னை மெரினா சாலையில் மழை நீர் வெள்ளத்தில் ஒருவர் தண்ணீர் ஸ்கேட்டிங் செய்தார் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை நீரில் ஒருவர் சருக்கிக்கொண்டு செல்லும் வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஸ்டாலின் தான் வராறு என்று திமுக பிரசார பாடல் ஒலிக்கிறது. அந்த வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவுக்கு, “ஸ்டாலின் […]

Continue Reading

அம்பேத்கர் நூல் வௌியீட்டு விழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்தாரா?

அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் தவெக தொண்டர்களை நடிகர் விஜய் அழைத்தது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் மற்றும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் என இரண்டையும் ஒன்றாக்கி புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவெக தொண்டர்களுக்கு அழைப்பு! […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்களின் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடத்தை ஏராளமானோர் இடித்து அழிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் மைனாரிட்டி இந்து கோவில் மீது தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: வங்கதேசத்தில் இந்துக்களின் கோவிலை […]

Continue Reading

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோசாலையில் பசுக்கள் தாக்கப்பட்டதா?

வங்கதேசம் இஸ்கான் அமைப்பு நடத்தும் பசுக்கள் பாதுகாப்பு அமைப்பான கோ சாலையில் உள்ள பசுக்களை சிலர் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive பசுக்களை சிலர் கொடூரமாக தாக்கும் வீடியோ எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வங்காளதேசம் இஸ்கான் கோவில் கோசாலாவின் நிலைமை😱 வாயில்லா ஜீவன்களை இப்படி நடத்துபவர், சாமானியர்களை […]

Continue Reading

வங்கதேசத்தில் காளி சிலை உடைக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு காளி சிலை உடைக்கப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட காளி சிலை மீது ஏறி அதன் தலையை உடைத்து எடுக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#SaveBangladeshiHindus ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது. இந்துக்கள் நாடோடிகளாக விரட்டப்படுகிறார்கள். உணர்வுள்ள […]

Continue Reading

தி.மு.க-வுக்கு வாக்களித்ததால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டதால் தான் தமிழகத்தில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தமிழகத்தைச் சார்ந்ததா என்று மட்டும் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் டிராக்டர் வண்டியில் மீட்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் வரும் போது வீடுகள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காண முடிகிறது. பின்னணியில் “கடலின் நடுவே பயணம் போனால்” என்று பழைய […]

Continue Reading

இவிஎம் முறைக்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் திரண்ட மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு நிற்கும் விடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை:EVM-க்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள் பாபா ஆதவ்வுடன் சரத் பவார் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

வங்கதேசத்தில் இஸ்கான் சாமியாருக்காக வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டாரா?

வங்கதேசத்தில் இஸ்கான் சாமியார் சின்மாய் பிரபுதாஸை ஜாமீனில் விடுவிக்க வாதாடிய இஸ்லாமிய வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிப்பப்ளிக் ஊடகம் வௌியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அண்டை நாடான பங்களாதேஷில் ஹிந்துக்களின் உரிமைக்காக போராடி வந்த இஸ்கான் துறவி சின்மாய் பிரபு தாஸ் அவர்களை டாக்கா விமான […]

Continue Reading

28 நாட்கள் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் வளையம் என்ற புகைப்படம் உண்மையா?

நிலவை ஒரே நேரத்தில், ஒரே இடத்திலிருந்து தொடர்ந்து 28 நாட்களுக்கு புகைப்படம் எடுத்து அதை அழகிய நிலவு வளையம் என்று ஒரே புகைப்படமாகத் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமாவாசை. முழுநிலவு வரையிலான நாட்களில் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து நிலவை புகைப்படங்கள் எடுத்து அதை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக உருவாக்கி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

டீ, சமோசா தரவில்லை என்று திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்களா?

தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என்று கூறி திருப்பூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கிற்கு வரும் தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என கூறி […]

Continue Reading

“நர்மதா நதியில் இயற்கையாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நர்மதா நதியில் பாறைக்கு மேல் கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக இயற்கையாக, அறிவியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றங்கரையில் யாரோ பாறைகள் மீது சிறு கற்களை அடுக்கி வைத்து எடுத்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*”இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) […]

Continue Reading

5 பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டியது தி.மு.க எம்.பி மகன் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐந்து பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டி வந்த தி.மு.க எம்.பி-யை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய போலீஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், “மாமல்லபுரம் பகுதியில் சாலையில் சென்றவர்கள். இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடியே சென்ற கார் செங்கல்பட்டு நகர பகுதியில் இளைஞர்கள் […]

Continue Reading

மோகினி டே இசைக்கருவியை வாசிக்கும் அழகை ரசித்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோகினி டே பாஸ் வாசிக்கும் அழகை ரசித்துச் சிரித்து மகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவில் பணியாற்றிய மோகினி டே என்பவர் பாஸ் இசைக் கருவியை இசைக்கும் அழகை ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவில் பார்த்து ரசிப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மியூசிக் கேட்டு […]

Continue Reading

இஸ்ரேல் நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் டெல்அவில் உள்ளிட்ட நகரங்கள் மீது சில மணி நேரங்களில் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மீண்டும் ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல். இஸ்ரேலின் நகரங்கள் பற்றி எரிகிறது சில மணிநேரங்களில் 150 ராக்கெட்டுகளை […]

Continue Reading

குழந்தைகளை சமைத்துச் சாப்பிட்ட ஹமாஸ் பயங்கரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இஸ்ரேல் குழந்தைகளை வெட்டி சமைத்துச் சாப்பிட்ட ஹமாஸ் பயங்கரவாதியின் கைகளை இஸ்ரேல் ராணுவம் வெட்டியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கைகள் இரண்டும் துண்டான நிலையில் உடலில் ஆங்காங்கே கட்டுகள் போட்டபடி உள்ள இளைஞர் ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஹமாஸ், காஸா, பாலஸ்தீனத்தின் மேற்குறிப்பிட்ட துருக்கிய பயங்கரவாதியின் பெயர் முகமது மஹ்ரூப்! […]

Continue Reading

பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தாரா மைக் டைசன்?

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் கொடியை பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போர்த்தியிருக்கும் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். Lion is Always Lion! குத்துச்சண்டை போட்டயில் மைக் டைசன் 6 பாயிண்ட் […]

Continue Reading

7 மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தம் என்று பரவும் தகவல் உண்மையா?

கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்யம் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம். நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Continue Reading