பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை மக்கள் வீசியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாதாள சாக்கடையில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “பொது ஒழுக்கம் கிடையாது! பொது சிந்தனை கிடையாது! குப்பைகளை ரோட்டில் வீசுவதற்கு வெட்கமே கிடையாது! ஆனால் மழை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால்: இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரவிய விஷமம்!

தனியார் கோதுமை மாவு பாக்கெட்டை எச்சில் துப்பிய கோதுமை மாவு என்றும் அதை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி பார்ப்போம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை இருப்பது வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆசிர்வாத் ஆட்டா கலால் முத்திரை போட்டு இருக்கு… இன்று முதல் எச்சில் துப்பிய இந்த […]

Continue Reading

‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்’ என்று ரோஹித் ஷர்மா மகள் கூறியதாகப் பரவும் வதந்தி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வியிலிருந்து மீள ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு மாதம் ஆகும் என்று அவரது மகள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I thirdeyetalkies.com I Archive 2 ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட செய்தியின் லிங்க் ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வசித்த வீடு என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வசித்த வீடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு பழைய வீட்டின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 26ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “P.M.மோடிஜி அவர்களின் தாயார் வசித்த வீடு. நம்ம தமிழ் நாட்டு கவுன்சிலர் கூட இந்த வீட்டில் வசிக்க மாட்டார். நம் பிரதமரை எண்ணி நாம் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் போலீஸ் – பொது மக்கள் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் போலீசும் பொது மக்களும் மோதிக்கொள்கின்றனர், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை மக்கள் சிலர் ஒன்று திரண்டு தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எங்க நடந்துச்சு ன்னு தெரியல… #விடியா_திமுகமாடல் அரசு ஆளும் தமிழ்நாடு தான் யாருக்குமே #பாதுகாப்பில்லாத_தமிழ்நாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ஆஸ்திரேலிய வீரர்கள் முன்பு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை ஜெய் ஶ்ரீராம் சொல்லி இந்திய ரசிகர்கள் வெறுப்பேற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 21ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிட்செல் மார்ஷ் கப்பு மேல […]

Continue Reading

‘மோடி பிரதமராக இருக்கக்கூடாது’ என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?

அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோடி பிரதமராக இருக்கக் கூடாது – ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் […]

Continue Reading

RAPID FACT CHECK: குஜராத் சாலை என்று பகிரப்படும் பெங்களூரு வீடியோ!

குஜராத்தில் உள்ள சாலையில் விண்வெளி வீரர் போல ஒருவர் உடை அணிந்து நடந்து சென்றதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் மேடும் பள்ளமுமாக இருப்பதைக் காட்ட விண்வெளி வீரர் போல ஒருவர் உடை அணிந்து நிலாவில் நடப்பது போன்று நடந்து காட்டிய வீடியோவை எடிட் செய்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். வீடியோவில், […]

Continue Reading

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்தபோது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு உடையில் வந்தனரா?

கடந்த 2020ம் ஆண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த போது நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் சென்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி-க்கள் கருப்பு உடையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.நிலைத் தகவலில், “ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே. 🤬🤬 ஆகஸ்ட் 5, 2020 […]

Continue Reading

காசா அல் ஷிபா மருத்துவமனையில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்த ஆயுத குவியல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அறை முழுக்க அதிநவீன ஆயுதங்கள் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அல் ஷிபா மருத்துவமனையி ல் உள்ள ஆயுதங்கள்- காசாவில் உள்ள அல் ஷிபா ஹாஸ்பிடலில் இருக்கும் ரகசிய அறைகளில் ஏகப்பட்ட […]

Continue Reading

சென்னை மழை நீரில் தெர்மாகோல் சவாரி செய்யும் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் பெய்த கன மழையில் சாலையில் தெர்மாகோல் படகு சவாரி செய்யும் நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஓடும் மழை வெள்ளத்தில் ஒருவர் ஒய்யாரமாக தெர்மாகோலில் படுத்தபடி படகு சவாரி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “4000 கோடியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு முடிக்கப்பட்டது சென்னை மேயர் […]

Continue Reading

மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரம்! மக்கள் வெள்ளத்தில் அகிலேஷ் யாதவ்ஜி!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது […]

Continue Reading

அயோத்தியில் விளக்கில் இருந்து எண்ணெய் சேகரித்த சிறுமி புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

அயோத்தியில் சமீபத்தில் அகல் விளக்கேற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்ட நிகழ்வின் போது விளக்கிலிருந்து சமையலுக்கு எண்ணெய்யைச் சேகரித்த சிறுமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகல் விளக்கிலிருந்து எண்ணெய்யைச் சேகரிக்கும் சிறுமி ஒருவரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி ஆதித்யாநாத் அயோத்தியில் கின்னஸ் உலகசாதனைக்காக விளக்கேற்றும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். நாடகம் […]

Continue Reading

பெண்களுடன் நடனமாடிய நரேந்திர மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடி பெண்களுடன் நடனமாடுவது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி பெண்களுடன் சேர்ந்து நடனமாடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 9ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் வேலையை தவிர எல்லா வேலையும் செய்யுறிங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

அயோத்தி ரயில் நிலையத்தின் புதிய தோற்றம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அயோத்தியில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையத்தின் தோற்றம் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ரயில் நிலையம் என்று குறிப்பிட்டு மாதிரி புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “அயோத்தி ராமர் கோவில் ரயில் நிலையம் புதிய தோற்றம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவானது ஃபேஸ்புக்கில் நவம்பர் 4, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது. உண்மை […]

Continue Reading

இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் கொடூரமான மரணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் உடல் முழுக்க புழு வைத்து மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நோயாளி ஒருவருக்கு தலையில் போடப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் போது தலையில் புழுக்கள் நெளியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்ட […]

Continue Reading

‘ஓட்டு போட்ட மக்களுக்கு கிடைத்த ஒட்டு ரோடு’ என்று பரவும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுத்ததா?

ஓட்டு போட்ட மக்களுக்கு விடியல் அரசு அளித்த ஒட்டு போட்ட பழுதடைந்த தார் சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோசமான தார் சாலையின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போட்ட ரோடுதான்! அது தாரையும் ஜல்லியையும் ஒட்டி வைக்கும் ரோடுதான்! ஒட்டுவதில் கில்லாடிகள் அவர்கள், விடியல் […]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவிகள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் நாடகமாடியதா? 

இஸ்ரேல் போர்க் குற்றம் இழைப்பதாக பாலஸ்தீனியர்கள் போலியாகக் குற்றம் சாட்டுகின்றனர், உலக மக்களை ஏமாற்ற பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தது போல நடிக்க வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உயிரிழந்த உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் போர்க்குற்றம் இழைப்பதாக பாலஸ்தீன காசா […]

Continue Reading

‘சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிய எ.வ.வேலு’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதிக்கு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிய எ.வ.வேலு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலுவின் புகைப்படம் மற்றும் திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதியின் தேர்தல் பிரசார ரிக்‌ஷாவை ஒருவர் ஒட்டி வரும் புகைப்படத்தையும் சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எ.வ. வேலுவின் பரிணாம வளர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

ஹமாஸ் தாக்குதலுக்கு பயப்படும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் போராளிகளுக்குப் பயந்து காசாவுக்குள் நுழையத் தயங்கிய இஸ்ரேல் தரைப்படை வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில ராணுவ வீரர்கள் ஒரு சுற்றுக்கு அருகே பதுங்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சில ராணுவ வீரர்களை உயர் அதிகாரி தலையில் அடிக்கும் வகையில் அந்த வீடியோவில் […]

Continue Reading

உஜ்ஜயினியில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவர்களைக் கண்டித்த இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பியதைக் கண்டித்து பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் கூடி போராட்டம் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளி வாசல் முன்பு காவிக் கொடியுடன் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உஜ்ஜயினி நகரத்தில் […]

Continue Reading

ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்த திராவிட மாடல் அரசு என்று பரவும் செய்தி உண்மையா?

தீபாவளியையொட்டி திமுக அரசு ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினத் தந்தி நாளிதழில் வெளியான செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு” என்று தலைப்பிட்டு ஒரு செய்தியும், அதே பக்கத்தில் “கணவன் மது குடித்ததால் இளம்பெண் […]

Continue Reading

‘இஸ்ரேல் படையினரை வேட்டையாடும் ஹமாஸ்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் படையினரைத் தேடித் தேடி வேட்டையாடும் ஹமாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கை பாலஸ்தீன படையினர் தாக்கி கைப்பற்றுவது போன்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேல் படையினரை தேடி தேடி வேட்டையாடும் ஹமாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ 2023 அக்டோபர் 31ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

குஜராத் சாலை என்று பரவும் பல்கேரியா புகைப்படத்தால் சர்ச்சை!

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழிச் சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் தண்டவாளம் போன்று இடைவெளிவிட்டு பட்டையாக இரண்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்து விபத்து நடந்து விடாமல் இருக்க மோடி கண்டுபிடித்து குஜராத்தில் செயல்படுத்தப் பட்ட இரண்டு வழிச்சாலை” என்று […]

Continue Reading

பிரான்சில் குரானை அவமரியாதை செய்த யூதர் என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரான்சில் யூதர் ஒருவர் கையில் இஸ்ரேல் கொடியை பிடித்துக்கொண்டு குரானை காலில் போட்டு மிதித்து அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் கொடியை கையில் பிடித்தபடி, குரானை மிதித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யூதன் ஒருவன் இஸ்ரேலிய கொடியை பிடித்து கொண்டு குர்ஆனை […]

Continue Reading

‘கட்சியின் பெயர் கூட தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி’ என்று செல்லூர் ராஜூ கூறினாரா?

கட்சியின் பெயர், கொள்கை கூட தெரியாத சாதாரணத் தொண்டன் கூட அதிமுக-வில் தலைவர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி உதாரணம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கட்சியின் பெயரோ கொள்கையோ […]

Continue Reading

‘அண்ணாமலை உண்மை பேசும் வரை’ என்று ஏதேனும் கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதா?

அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்று கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்றில் “அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது” என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2023 அக்டோபர் 25ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. உண்மை அறிவோம்: […]

Continue Reading

நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் தேர்வில் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.பி-யும் எம்.எல்.ஏ-வும் செருப்பால் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செருப்பால் அடித்துக்கொண்ட பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு பாஜக […]

Continue Reading

குழந்தையின் பசியைப் போக்க உணவு திருடிய தாய் மீது தாக்குதலா?

குழந்தையின் பசியைப் போக்க திருடிய தாயைக் கட்டி வைத்து அடித்ததாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பெண் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தினுள் “இதைவிட கெகாடுமை வறுமை கொடுக்குமா. பிள்ளைகள் பசியை எந்த தாய்தான் பொறுத்துக்கொள்வாள் இது திருட்டல்ல இந்த மண்ணில […]

Continue Reading

குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

காஸாவில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசி எரித்துக் கொன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகப்பெரிய டேங்கர்கள் மீது மேலே இருந்து குண்டு போடப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கீழே இருந்தவர்கள் தீப்பிடித்து சிதறி ஓடுகின்றனர். நிலைத் தகவலில், “இதை விட இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தனத்தை […]

Continue Reading

பயம் காரணமாக புதின் – கிம் ஜாங் உன் மது கோப்பையுடன் தடுமாறியதாக பரவும் வீடியோ உண்மையா?

மது கோப்பையில் விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில் புதினும் கிம் ஜாங் உன்னும் திகைத்து நின்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஷ்ய அதிபர் புதினும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கையில் மது கோப்பையை வைத்துக்கொண்டு யார் முதலில் அருந்துவது என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி திகைத்து நிற்பது […]

Continue Reading

RAPID FACT CHECK: பெங்களூருவில் குண்டு வைக்க வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் கைது செய்யப்பட்டாரா?

பெங்களூருவில் கோவிலில் குண்டு வைக்க வந்த ஆர்.எஸ்.எஸ் ஏவிவிட்ட தீவிரவாதி கைது செய்யப்பட்டான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண் போல் ஆடை அணிந்த ஆண் ஒருவாின் புகைப்படத்துடன் வெளியான எக்ஸ் (ட்வீட்) பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் […]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியை பயன்படுத்துகிறார்களா?

இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்கள் சிலர் இந்தியக் கொடியுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்கள்.. இது தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி […]

Continue Reading

தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி சந்தித்தது எப்போது என்று தெரியாமல் பரப்பப்படும் வதந்தி!

தருமபுர ஆதீனத்தை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வந்தேன் என்று கூறுவது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது போன்று கற்பனையான உரையாடல் எழுதப்பட்டுள்ளது. அதில், (தருமபுரம் ஆதீனம் கேட்பது போல்) “யோவ்…சனாதனப் போராளி நீ எங்கய்யா […]

Continue Reading

பாலஸ்தீன மக்களை தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்ததா எகிப்து?

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காரணமாக பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க எகிப்து 36 அடி உயர முள் வேலியை அமைதித்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான மதில் சுவரை தாண்டிக் குதிக்க ஆயிரக் கணக்கானோர் முயற்சி செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “100% முஸ்லீம் நாடான எகிப்து, […]

Continue Reading

RAPID FACT CHECK: மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மோதலா?

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ்காரர்கள் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இரண்டு தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#மத்திய_பிரதேசம் எ#காங்கிரசின் முதல் கட்ட #வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

மகளிர் உரிமைத் தொகை வாங்கி மது அருந்தும் பெண்கள் என்று பரவும் புகைப்படம் – வீடியோ உண்மையா?

தி.மு.க அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வாங்கி மது அருந்தும் பெண்கள் என்று ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்பட பதிவை அனுப்பியிருந்தார். வரிசையாக உட்கார்ந்து பெண்கள் மது அருந்தும் புகைப்படத்துடன் “மகளிர் […]

Continue Reading

இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டதா?

இஸ்ரேலில் உள்ள ஒரு தேவாலயத்தில் இஸ்ரேல் கொடியை இறக்கிவிட்டு பாலஸ்தீன கொடியைக் கிறிஸ்தவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடத்தின் உச்சியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக் கொடி கழற்றப்பட்டு பாலஸ்தீன கொடியை ஒருவர் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்தவர்கள்‌ இஸ்ரேல் கொடியை இறக்கி பாலஸ்தீனின் கொடியை ஏற்றிய […]

Continue Reading

ராஜஸ்தானில் பாஜக நிர்வாகிகள் அடித்துக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு பேர் காலணிகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் பாஜக தலைவர்களின் நிலை. குஜராத் லாபியின் டிக்கெட் விநியோகத்திற்குப் பிறகு, ராஜஸ்தானில் பாஜக அனைத்து மாவட்டங்களிலும் பெரும் கொந்தளிப்பைக் கண்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

அமர்தியா சென் காலமானார் என்று பரவும் வதந்தி!

பொருளாதார நிபுணர் அமர்தியா சென் காலமானார் என்று செய்தி ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் மரணம் என்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. NewsTamil 24×7 என்ற ஊடகம் 2023 அக்டோபர் 10ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  உண்மை அறிவோம்: பொருளாதார நிபுணர் அமர்தியா சென் மரணம் என்று தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி […]

Continue Reading

இஸ்ரேல் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஹமாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் ஹெலிகாப்டரை ஹமாஸ் அமைப்பினர் சுட்டு வீழ்த்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹமாஸ் முழு ஆயத்துடனேயே போரை ஆரம்பித்துள்ளது. இது இஸ்ரேலிய விமானம் சூட்டு வீழ்த்தும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Vidiyal என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ…

ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதலில் காசா பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நொறுக்கப்படும் காசா …ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை […]

Continue Reading

இஸ்ரேலுக்குள் இறங்கிய ஹமாஸ் படை என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாராஷூட்டில் வீரர்கள் தரையிறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “PUBGல வர்ற மாதிரி இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 […]

Continue Reading

ம.பி-யில் பாஜக வேட்பாளரை தாக்கிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்களை பொது மக்கள் தாக்கினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களை வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து கேட்கச் சென்றபோது மக்கள் தாக்கியுள்ளனர். எல்லா வாக்காளர்களும் நினைக்கிறார்கள். […]

Continue Reading

வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

வந்தே பாரத் ரயிலை இயக்கும் பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போன்று ஆடை அணிந்திருக்கும் இரண்டு பெண்கள் ஏறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “NaMoAgain2024 🌷 #BJP4IND வந்தே பாரத் ரயில் லோகோ பைலட் குழு! இந்த அற்புதமான காட்சியை நீங்கள் கற்பனை […]

Continue Reading

‘தேரை இழுத்துத் தெருவில் விட்ட அண்ணாமலை,’ என்று எச்.ராஜா கூறினாரா?

தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக பாஜக எனும் தேரை அண்ணாமலை முன்னோக்கி இழுத்துவருவார் என டெல்லி தலைமை எதிர்பார்த்தது; ஆனால், அவரோ தேரை […]

Continue Reading

தமிழகத்தின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த கட்சி அ.தி.மு.க-வா?

‘’அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் இவர்,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive 1 I Archive 2 அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஜெயசுதா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் […]

Continue Reading

பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அடித்து உடைத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அதை மக்கள் அடித்து உடைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பஸ் ஒன்றை இஸ்லாமியர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விழாக்கோலம்_பூண்டது எ#பெங்களூர் 😄😄😄😄…. இலவசம் எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதற்கான ஒரு உதாரணம் கர்நாடகாவில்..  #இலவச_பேருந்து நிறுத்தவில்லை என்ற […]

Continue Reading