சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் மொழி புறக்கணிப்பா?

அரசியல் | Politics தமிழ்நாடு | Tamilnadu

‘’சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதனை பலரும் உண்மை என நம்பி பலரும் மிக வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பலராலும் உண்மை என நம்பி ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், யதார்த்தம் என்னவெனில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பற்றிய புகைப்படத்தை தவறாகப் புரிந்துகொண்டு சிலர் தகவல் பரப்பியதால் வந்த குழப்பம்தான் இது.

ஆம், இதுபற்றி சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் பதிவுகளின் கீழேயே நிறைய வாசகர்கள் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். இதன்படி, சென்னை சென்ட்ரல் நிலையத்தின் முழு தோற்றத்தை வைத்து பார்த்தோம் எனில், குழப்பம் எளிதாக தீரும். 

அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முழு தோற்றம் பற்றிய புகைப்படத்தையும் வாசகர் ஒருவர் இணைத்துள்ளார். அதில், புதியதாக கட்டப்பட்டப்பட்ட கட்டிடத்தில் (இடது புறம்) தமிழ் மொழியிலும், நடுவில் இந்தியிலும், வலது புறம் ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதை நீங்களே தெளிவாகக் காண முடியும். 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி தென்னிந்திய ரயில்வே நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் (@GMSouthernRailway) விளக்கம் அளித்துள்ளது. 

Archived Link

இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Puthiyathalaimurai LinkDinakaran Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) சென்னை சென்ட்ரல் நிலையம் சற்று விரிவுபடுத்தி, கட்டப்பட்டுள்ளது. எனவே, அதன் புதிய பெயரான டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம் என்ற பெயரை, இடது புற கட்டிடத்தின் மீது தமிழிலும், நடுப்புற கட்டிடத்தின் மீது இந்தியிலும், வலது புற கட்டிடத்தின் மீது ஆங்கிலத்திலும் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

2) சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முழு கட்டிட தோற்றத்தையும் புகைப்படம் எடுக்காமல், ஒரு பகுதியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, தவறான தகவல் பரப்பியுள்ளனர்.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் மொழி புறக்கணிப்பா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False