ஆவணக் காப்பகம்

FactCheck: பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

‘’பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்த்தார்,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண நேரிட்டது. Facebook Claim Link I Archived […]

Continue Reading

FACT CHECK: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பா?- அமைச்சர் பேட்டியை தவறாக பரப்பியதால் சர்ச்சை!

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் விரைவில் பாதியாகக் குறைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆன்லைன் மீடியா ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக அமைச்சர், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் விரைவில் பாதியாக குறைக்கப்டும் திமுக அமைச்சர் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க தலித் அணித் தலைவராக வன்னியரசு நியமனம் என பரவும் போலியான நியூஸ் கார்டு!

தி.மு.க-வின் தலித் அணித் தலைவராக வன்னியரசுவை மு.க.ஸ்டாலின் நியமித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்அணி தலைவர் வன்னியரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசுவை தி.மு.க கட்சியின் தலித்அணி தலைவராக நியமித்து கழகத் தலைவர் […]

Continue Reading

FACT CHECK: அயோத்தி ரயில் நிலையம் என்று பகிரப்படும் படம் உண்மையா?

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் நிலையம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிநவீன ரயில் நிலையத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தி ராமர் கோவில் ரயில் நிலையம். ஜெய் ஸ்ரீராம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sathish Bjp Kili Kili என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 18ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை?- தியாகராஜன் பெயரில் பரவும் வதந்தி!

கொழுந்தியாள் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால், டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? […]

Continue Reading

FACT CHECK: சமஸ்கிருத வரலாறே இந்தியாவின் வரலாறு என்று ஜே.பி.நட்டா கூறினாரா?

சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி, அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு என்று ஜே.பி.நட்டா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. அதில், “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த […]

Continue Reading

Rapid FactCheck: வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகிறதா?- வைரல் வதந்தியால் சர்ச்சை…

‘’வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:முக்கிய அறிவிப்பு..!!! ********* *********** வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்களுக்கு நாளை முதல் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது…!!! நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு கால்களும் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படும்…!!! வாட்ஸ் அப்,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,மற்றும் அனைத்து சமூக வளைதளங்களும் கண்காணிக்கப்படும்…!!! உங்களது செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல் தொடர்புடன் […]

Continue Reading

FactCheck: இந்திய நாடாளுமன்ற வளாகம் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானதா?

‘’இந்திய நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் அவை கூடும் இடம் தவிர மற்றவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், ‘’தற்போது நாடாளுமன்ற அவை கூடும் இடம் மட்டும் அரசுக்குச் சொந்தமானது, அதன் அருகில் உள்ள அமைச்சக பிரிவின் தனி அலுவலகம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியினருக்குச் […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று ஊடகவியலாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook ஊடகவியலாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்- செந்தில்வேல்! நீட் தேர்வுக்கு எதிராக ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சாகும் வரை உண்ணாவிரதம்! அறிவிப்பு திமுக […]

Continue Reading

FACT CHECK: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் காரில் இருந்த சைரனை அகற்றினாரா விஜய் ரூபானி?

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த உடனேயே, தன் காரில் இருந்த சைரனை அகற்றினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தன்னுடைய காரில் இருந்து சைரனை அகற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த விஜய் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று செந்தில்வேல் கூறியதாக பரவும் வதந்தி!

நீட் விவகாரத்தில் தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற அச்சம் எழுந்திருக்கிறது என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. தி.மு.க பொய் வாக்குறுதிகளை […]

Continue Reading

RAPID FACT CHECK: உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முத்துராமலிங்கத் தேவருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?

அமெரிக்கா வெளியிட்ட உலகின் 50 நேர்மையான தலைவர்கள் பட்டியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலிடம் பிடித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகைப்படத்துடன் போட்டோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஒரே நபர் அதுவும் முதல் இடத்தை பிடித்தவர் தெய்வத் திருமகனார் […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் பெயர் சூட்டப்பட்டதா?

தனியார் நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஓலா நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு சீமான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பவிஷ் அகர்வால் தகவல்” என்று இருந்தது. இந்த […]

Continue Reading

FACT CHECK: திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது தவறில்லை என்று சீமான் கூறினாரா?

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா? ஆரியமா? என்றால் நாம் […]

Continue Reading

FactCheck: தலைவி படத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகம் சரியாக எடுக்கப்படவில்லை என்று ஜெயக்குமார் கூறினாரா?

‘’தலைவி படத்தில் சட்டசபை சேலை கிழிப்பு நாடகத்தை இன்னமும் தத்ரூபமாக எடுத்திருக்கலாம் என்று ஜெயக்குமார் பேச்சு,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived […]

Continue Reading

FACT CHECK: நீட் விவகாரம்… 2017ல் நளினி சிதம்பரம் பேசியதை தற்போது பகிர்வதால் குழப்பம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் விலக்கு வழங்கக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வழக்கறிஞர் நளினி சிதம்பரம் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழக அரசின் […]

Continue Reading

FACT CHECK: கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று ஒரு நியூஸ் சார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கு […]

Continue Reading

FACT CHECK: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வை அகற்றினால்தான் இந்தியாவை தாக்க முடியும் என்று தாலிபான்கள் கூறினரா?

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி மிக உயர்வாக தாலிபான்கள் அமைப்பின் தலைமைச் செயலாளர் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆப்கானிஸ்தானியர் போன்று ஆடை அணிந்த ஒருவர் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவில் பிஜேபி இருக்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆகியவை இந்தியாவில் சக்திவாய்ந்தவை என்பதை […]

Continue Reading

FactCheck: தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி கைது?- முழு விவரம் இதோ!

‘’தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி, அரசு பங்களாவை கைது செய்ய மறுத்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர் என் ரவி வட இந்தியாவில் முன்னர் பணிபுரிந்தபோது, அரசு இல்லத்தை காலி செய்ய மறுத்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்ட வீடியோ, என்று […]

Continue Reading

FACT CHECK: கொரோனா தடுப்பூசி போட்டால்தான் ரேஷன் பொருள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றின் லோகோவோடு புகைப்பட […]

Continue Reading

FactCheck: தனுஷ் தற்கொலை விவகாரம்; எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ்7 தமிழ் இந்த செய்தியை வெளியிடவில்லை!

‘’தனுஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமியை உறவினர்கள் சூழ்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு +919049053770 அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை வைரலாக ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாட்டில் 74 சுங்கச்சாவடிகள் உள்ளதாக மீண்டும் பகிரப்படும் வதந்தி…

‘’கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக நாட்டிலேயே அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ‘’5,381 கிமீ தொலைவு நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 74 டோல்கேட்கள் உள்ளன. கேரளாவுடன் ஒப்பிடுகையில் 9 டோல்கேட்களும், மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் 15 டோல்கேட்களும் இருக்க வேண்டும்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook […]

Continue Reading

FACT CHECK: எனது நரம்புகளை முறுக்கேற்றிய கங்கனா என்று டி.ஜெயக்குமார் கூறினாரா?

தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படத்துடன் ஆனந்த விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜிஆர் […]

Continue Reading

FACT CHECK: உலக ஊழல் நாடுகள் பட்டியலில் 76ம் இடத்தில் இருந்த இந்தியா முதலிடம் பிடித்ததா?

உலக ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படம், தினத் தந்தியில் வெளியான “ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்” என்ற செய்தியின் புகைப்படம் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஆகியவற்றை சேர்த்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

FACT CHECK: விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் எடுத்துச் சென்றதா தி.மு.க அரசு?

தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தி.மு.க அரசுக் குப்பை லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விநாயகர் சிலைகள் குப்பை லாரியில் ஏற்றப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெஞ்சு துடிக்குது. அடேய் ஹிந்துக்களே நீங்கள் வழிபடும் விநாயகர் சிலைகள் குப்பைகளுக்கு சமமாக …குப்பை லாரிகளில்…. […]

Continue Reading

FACT CHECK: நரேந்திர மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் எழுதியதாக பரவும் வதந்தி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்களை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் என்பவர் கட்டுரை எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒரு பதிவை அனுப்பி. அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ” “👌😄*பிரதமர் மோடியைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பார்வையைப் பார்க்கவும்:* ஜோசப் ஹோப், நியூயார்க் டைம்ஸின் தலைமை […]

Continue Reading

FACT CHECK:ஆடை அலங்காரத்தில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார் என்று பரவும் வதந்தி!

உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் மோடி முதலிடம் பிடித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடி முதலிடம்! உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் மோடி முதலிடம். தாடி வளர்ப்பு, உடையலங்காரம் உள்ளிட்டவற்றை முன்னிட்டு மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் […]

Continue Reading

FactCheck: நயினார் நாகேந்திரன் பற்றி துரைமுருகன் கூறியதாகப் பரவும் செய்தி உண்மையா?

‘’நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக.,வினர் பற்றி துரைமுருகன் கேலிப் பேச்சு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனைப் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FactCheck: ஆற்றில் குளித்ததற்காக தலித் பெண்ணை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினரா?

‘’ஆற்றில் குளித்த காரணத்தால் தலித் பெண்ணை ஆடை அவிழ்த்து கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ் நபர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FACT CHECK: ராகவன் படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கும்படி அண்ணாமலை கூறியதாக பரவும் வதந்தி…

தமிழக பா.ஜ.க முன்னாள் பொதுச் செயலாளர் ராகவன் படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது போன்ற போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள்… வினாயகர் […]

Continue Reading

FACT CHECK: கேஸ் வாங்க முடியாதவர்கள் அடுப்பை பயன்படுத்தும்படி அண்ணாமலை கூறினாரா?

கேஸ் வாங்க முடியாதவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்துங்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு மற்றும் திரைப்பட காட்சியை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “நம்ம முன்னோர்கள் என்ன கேஸ் வச்சா சமைச்சாங்க.? […]

Continue Reading

FactCheck: சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு கூறவில்லை!

‘’சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு தகவல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த ஸ்கிரின்ஷாட்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும் என்று அண்ணாமலை கூறினாரா?

‘’விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை பலரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link Archived Link  அதில், சன் நியூஸ் லோகோவுடன், ‘’கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் […]

Continue Reading

FactCheck: தென்னிந்திய நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தியால் பரபரப்பு!

‘’நடிகர் சித்தார்த் இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை, +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பலரும் இந்த தகவலை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link  Archived Link  Twitter Claim Link Archived Link  உண்மை அறிவோம்:நடிகர் சித்தார்த், தமிழ், […]

Continue Reading

FACT CHECK: மோசஸ் காலத்தில் செங்கடலில் மூழ்கிய குதிரை வண்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டதா?

பைபிளில் இடம் பெற்ற மோசஸ் கதையில் வரும் எகிப்து மன்னனின் குதிரைப் படை வண்டி செங்கடலில் கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கடலில் சிதைந்து போன அந்தக் காலத்து குதிரை அல்லது மாட்டு வண்டி போன்று இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில், “மோசேயின் காலத்தில் செங்கடல் பிளந்து பாரோவனின் படைகளை கடலுக்குள் […]

Continue Reading

FACT CHECK: 2014-ம் ஆண்டில் இருந்து பரவும் புதிய ரூ.5000 நோட்டு வதந்தி!

புதிய 5000 ரூபாய் நோட்டு நாளை வெளியாகிறது என்று 2014ம் ஆண்டில் இருந்து வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது பற்றிய விவரம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி நினைவு நாணயங்கள் வெளியிடும் புகைப்படம் இருந்தது. மேலும் ரூ.5000ம் நோட்டு போன்று ஒரு […]

Continue Reading

FACT CHECK: பள்ளிக் கல்வித் துறைக்கு வெறும் ரூ.32 கோடி ஒதுக்கிவிட்டு, கருணாநிதி நினைவிடத்துக்கு ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டதா?

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்துக்கு 39 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் பதிவு ஒன்று போட்டோஷாப் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்திலுள்ள மொத்த பள்ளிக் கல்வித்துறைக்கு […]

Continue Reading

FACT CHECK: பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்க விட்டனரா தாலிபான்கள்?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தாலிபான்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஹெலிகாப்டரில் ஒருவர் தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தலிபான்கள்.! ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள்” […]

Continue Reading

FactCheck: பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்?

‘’பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடிப் பிடித்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. Tweet Link I Archived […]

Continue Reading

FACT CHECK: சுகன்யா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தினால் ரூ.6 லட்சம் கிடைக்குமா?

எஸ்.பி.ஐ வங்கியில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் கணக்கு தொடங்கி ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம், 14 ஆண்டுகள் செலுத்தினால் 21 வயதாகும் போது ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “Thanks to […]

Continue Reading

FACT CHECK: பாலில் இருமல் மருந்தை கலந்தால் விஷமாக மாறுமா?- விபரீதமான பதிவு

பாலில் இருமல் மருந்தை கலந்ததால் நான்கு குழந்தைகள் மரணமடைந்துவிட்டார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போஸ்டர் போல ஒட்டப்பட்ட ஒரு தகவலை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “எச்சரிக்கை! எச்சரிக்கை!! சென்னை அருகே ஒரு கணவன் மனைவிக்கு நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். ஒரு நாள் குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருந்து […]

Continue Reading

FactCheck: துக்ளக் பத்திரிகை பிராமணர்கள் தவிர்த்த மற்ற சாதியினரை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’துக்ளக் பத்திரிகை பிராமணர் இல்லாதவர்களை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை சிலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FACT CHECK: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் வீடியோ!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனமாடிக் கொண்டாடினார்கள் என்று ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தாலிபான்கள் போன்று தோற்றம் அளிக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழ் பாட்டுக்கு ஆடுவது போல ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான் தீவிரவாதிகள் தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்” என்று […]

Continue Reading

FactCheck: மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி கூறினாரா?

‘’மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மதன் ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ச்சியாக […]

Continue Reading

FACT CHECK: அமித் ஷாவுக்கு முத்தமிட்ட மோடி? – விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி முத்தமிட்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பொது இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதட்டோடு உதடு பிரதமர் மோடி முத்தமிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gays அமுதன் இளமாறன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Unofficial:பிஜேபி தொண்டர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 13ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பி.வி.சிந்து- ஹிமாதாஸ் தவறான ஒப்பீடு!

வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பல கோடி ரொக்க பரிசு மற்றும் சப்-கலெக்டர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தங்கப் பதக்கம் வென்ற ஹிமாதாசுக்கு வெறும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தடகள வீராங்கனை ஹிமாதாஸ் உணவு உட்கொள்ளும் புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றின் படத்தை […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் குடிபோதையில் பிடிபட்ட ராகுல் காந்தி?- பெயர் குழப்பத்தால் சர்ச்சை…

‘’குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடிபோதையில் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். இவர்கள் அனைவருமே கதிர் செய்தி இணையதளம் வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக […]

Continue Reading

FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

‘’கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நகைச்சுவைக்காக பகிரப்பட்டுள்ள இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆபாசமாக வீடியோ கால் செய்த விவகாரம் காரணமாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அவரது பதவியை ராஜினாமா செய்தார். […]

Continue Reading

FACT CHECK: அர்ச்சகர் நியமனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் இடைக்கால தடை விதித்தாரா?

தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் புகைப்படம் மற்றும் நீதிமன்ற உத்தரவு இணைய பிரதி ஆகியவற்றை இணைத்துப் பதிவிட்டுள்ளனர்.  நிலைத் தகவலில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு அரசு புதிதாக நியமித்த அர்ச்சகர் மது குடித்தாரா?

தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர் ஒருவரை புதிதாக இந்து கோவில் அர்ச்சகராக நியமித்ததாகவும், அவர் மது அருந்தியதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கோவில் குருக்கள் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பணி நியமனம் செய்த விடியல் பார்ட்டி க்கு நன்றி.. துரசிங்க பேட்டை சிவன் கோவில் அர்ச்சகர் […]

Continue Reading