ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்!

தரங்கம்பாடி அருகே நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 12 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், பொக்லைன் இயந்திரங்கள் ஒரு நெல்வயலில் இறங்கி, சேதம் செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக, தரங்கம்பாடி அருகே நடவு நட்ட […]

Continue Reading

ஜெயலலிதா பொறுக்கி எடுத்த விஞ்ஞானிகள்: தமிழக அமைச்சர்கள் பற்றிய ஃபேஸ்புக் பதிவு

‘’ஜெயலலிதாவால் பார்த்து பொறுக்கி எடுக்கப்பட்ட தரமான விஞ்ஞானிகள்,’’ என்று கூறி, தமிழக அமைச்சர்களை கேலி செய்து ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருந்த இப்பதிவில் உள்ள உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 7ம் தேதி இந்த பதிவு, வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைவரையும் கிண்டல் செய்து, அவர்கள் பேசியது மற்றும் அவர்கள் சமீபத்தில் செய்தது போன்ற செயல்களையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

இது உண்மையாக இருந்தால் நானும் பாஜகவை எதிர்ப்பேன்: ஃபேஸ்புக் பதிவின் உண்மை விவரம்!

‘’இது உண்மையாக இருந்தால் நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்,’’ என்று கூறி, ஃபேஸ்புக்கில் ஒருவர், விகடன் செய்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார். இதனைப் பலரும் ஷேர் செய்திருந்தார்கள். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த மே மாதம் இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியை இணைத்து, இதன் மேலே, ‘’இது உண்மையாக இருந்தால், நானும் பாஜக.,வை எதிர்ப்பேன்… எதைச் செய்தாலும், கண் மூடிக்கொண்டு ஆதரிக்கும் […]

Continue Reading

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றிய பதிவால் சர்ச்சை

‘’திருட்டுக் காவலாளிகள்,’’ என்ற தலைப்பில், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி பற்றி, விஷமத்தனமாக பதிவிடப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த தகவல்கள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Stalin Panimayam என்பவர் மேற்கண்ட பதிவை, கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், திருட்டுக் காவலாளிகள் எனக் குறிப்பிட்டு, அதன் கீழே, ஸ்மிருதி இரானி புகைப்படத்தை வைத்து, அவர் 2014ல் பி.காம். படித்ததாகச் சொன்னார் என்றும், 2019ல் பிளஸ் 2 […]

Continue Reading

காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தலைவர்!

இந்து மகாசபை தலைவர் பூஜா சகுண பாண்டே, காந்தி உருவபொம்மையை துப்பாக்கியால் சுடுவது போல, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த பெண் இந்து தீவிரவாதியா அல்லது கிறிஸ்தவரா, இஸ்லாமியரா எனக் கேட்டு, ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதால், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link மே 15ம் தேதி, Jaffar Ali Melur என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்து மதத்தைச் […]

Continue Reading

இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா கொண்டேபுடுவேன்: வைரல் பதிவால் சர்ச்சை

‘’இனி எவனும் நீட்டு காட்டுன்னு வந்தா, வக்காளி கொண்டேபுடுபேன்,’’ என எழுத்துப்பிழைகளுடன் கூடிய ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link தீ தமிழன் என்பவர் கடந்த மே மாதம் 3ம் தேதியன்று, இப்பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றி பேசியதாக ஒரு செய்தியையும், ராஜ்கிரண் புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளனர். அதில், ‘’உங்க […]

Continue Reading

நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதா?

‘’மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும்…!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link மக்கள் உரிமை குரல் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை, ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ளது. நித்யானந்தாவும், எச்.ராஜாவும் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’வெளியானது 2019 நாடாளுமன்ற தேர்தலின் […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை என்ன?

‘’பாகிஸ்தான் பிரதமரின் ஆசி பெற்ற வேட்பாளர் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு கடந்த ஏப்ரல் 10ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்கீழே, பாகிஸ்தான் […]

Continue Reading

கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் உள்ளார்: தி இந்து தமிழ் திசைக்கு வந்த குழப்பம்

‘’மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா,’’ என்று கூறி ஒரு செய்தியை தி இந்து தமிழ் திசை இணையதளம் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இந்து தமிழ் திசை பகிர்ந்துள்ளது. கல்ராஜ் மிஸ்ரா இன்னமும் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்கிறாரா என்ற கோணத்தில் இதுபற்றி நாம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: குடிமக்கள் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பாஜக உறுதி அளிக்கவில்லை: மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மறுப்பு Archived […]

Continue Reading

கோவை குடிநீர் கோவிந்தா: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’கோவை குடிநீர் கோவிந்தா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை, காண நேரிட்டது. இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: கோவை குடிநீர் கோவிந்தா….!!! கோவையை வச்சு செய்ய கங்கனம் கட்டிவிட்டார்கள் காவி கார்பரேட் கூட்டம்… இனி திராவிட தேசிய கட்சிகளை நம்பி வாக்களித்தால்…சர்வநாசம் நிச்சயம்…. Archived Link கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு வீடியோ […]

Continue Reading

இஸ்ரேலின் இன்னொரு கொடூர முகம்தான் ஐஎஸ்ஐஎஸ்: ஃபேஸ்புக் தகவலின் உண்மை என்ன?

‘’ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிடுவதே இஸ்ரேல் நாடுதான்,’’ என்கிற ரீதியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில், ஐஎஸ் தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு, உலகம் முழுக்க இஸ்லாம் என்றால் அது பயங்கரவாதம்தான் என பரப்புரை செய்து, இஸ்லாம் மதத்தை […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரம் உத்திரமேரூரில் உடைக்கப்பட்டதா?

‘’உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு, ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற பெயரிலான ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. உண்மை அறிவோம்:இந்த பதிவில், வாக்கு இயந்திரங்களை சிலர் சரிபார்ப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா?

‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’ என்று கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் முன்பு, சாட்சியம் அளித்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: #ஊழலின் பிதாமகன்… கட்டுமரம் Archived Link ஏப்ரல் 6ம் தேதி Mohan Raj என்பவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த பதிவை பார்க்கும்போதே இது […]

Continue Reading

மோடி கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

‘’மோடியின் கோரிக்கையை ஏற்று சவூதி அரசு 850 கைதிகளை விடுதலை செய்யவில்லை. சவூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பாக அவர்களை விடுதலை செய்துள்ளனர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரமளான் மாத பொது மன்னிப்பாக சௌதி அரேபிய அரசு சிறைக் கைதிகளை ஆண்டு தோறும் விடுதலை செய்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 850 இந்தியர்களையும் விடுதலை செய்துள்ளது. அதை தனது […]

Continue Reading

அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதற்கும், தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதற்கும் என்ன தொடர்பு?

‘’தமிழ்நாடு வேலை தமிழருக்கே போராட்டம் விளைவு,’’ என்று கூறி ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: #தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு…!#அனைத்து மாநிலங்களிலும் #மொழி #பிரிவினை பேச #ஆரம்பித்தால் நிலைமை நினைத்து பாருங்கள்..? மே 4ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கெஜ்ரிவால் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை இணைத்து, ‘’தமிழ் பிரிவினை போராட்டம் விளைவு, அனைத்து மாநிலங்களிலும் மொழி பிரிவினை பேச ஆரம்பித்தால் நிலைமை […]

Continue Reading

சிதம்பரத்தில் திமுக வன்னியர்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று திருமாவளவன் சொன்னாரா?

‘’சிதம்பரத்தில் திமுக வன்னியர்களின் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று திருமாவளவன் பேசியதால் பரபரப்பு,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதன் விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்:வன்னியர்கள் ஓட்டு எனக்கு தேவையில்லை திருமாவளவன் திட்டவட்டம்.பிரச்சாரம் செய்ய ஊருக்குள் அனுமதிக்காததால் திருமாவளவன் ஆத்திரம். Archived Link ஏப்ரல் 11ம் தேதியன்று, இந்த பதிவை கோபிநாத் தமிழன் என்பவர் பகிர்ந்துள்ளார். இதில், திருமாவளவனின் புகைப்படத்தை பகிர்ந்து,’’வன்னியர்கள் ஜாதி […]

Continue Reading

அன்புமணி ராமதாஸ் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?

‘’இந்தியா முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் உள்ள வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. ஆதாரத்திற்கு, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டையும் சேர்த்து பகிர்ந்துள்ளதால், இந்த பதிவில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Hemanathan Murugesan என்பவர் திமுக இணையதள அணி என்ற ஃபேஸ்புக் குழுவில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், தந்தி டிவி […]

Continue Reading

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்கிறாரா?

அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்வதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம். தகவலின் விவரம்: தரமான வடை ஜி 😂😂😂 Archived Link இந்த பதிவை ஏப்ரல் 24ம் தேதியன்று, அரசியல் உண்மைகள் 2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் வெளியான நியூஸ் கார்டை வைத்து, அதன் கீழே பதிவரின் […]

Continue Reading

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு மாநில அரசுகள் காரணமா?

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு, மாநில அரசுகள்தான் காரணம், என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட வீடியோ, வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:ஏன்�பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி.யில் வரவில்லை? | Petrol | Diesel price | GST #gst #petrol #diesel Archived Link ஏப்ரல் 4ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை போன்ற வார்த்தைகள் இருப்பதன் காரணமாக, பலரும் […]

Continue Reading

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?

சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: படத்தில் போலீஸ் தூக்கி கொண்டு வருவது சிவராஜ்சிங் சௌகான், பாஜக தலைவர்,.. மற்றொரு படம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி… Archived Link இந்த பதிவில், வெள்ள நீரில் சிவராஜ் சிங் சவுகானை போலீசார் தூக்கிக் கொண்டு வருவது போலவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Continue Reading

ஒடிசாவை பானி புயல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் கூறியது உண்மையா?

‘’ஒடிசாவில் பானி புயல் தாக்கியதற்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதைப் போன்ற ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்:…ஒடிசாவில் பானி புயல் தாக்குதல் காரணமாண தமிழக முதல்வர் எடிபாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்… Archived Link மே 5ம் தேதியன்று இந்த பதிவை தர்மபுரி […]

Continue Reading

கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி

‘’கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை‘’, என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலவே, அச்சு அசலாக வெளியிடப்பட்டுள்ள இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #அதிகம்_பகிரவும் இந்தா வந்துட்டான்டா என் தலைவேன்… 😍😍👌👌தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒப்பற்ற தலைவன்… நீங்க நல்லா இருக்கணும்… 🙏🙏🙏 Archived Link ரிடயர்டு ரவுடி 3.0 என்ற ஃபேஸ்புக் குழு, […]

Continue Reading

இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: …தமிழர் வேலை தமிழருக்கே !!! – இது டிரண்டிங் செய்தி இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி  தமிழக மக்கள் […]

Continue Reading

ராகுல் காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

ராகுல் காந்தி கொலம்பிய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: …விக்கிலீக்ஸ் செய்தியின் படி, ராகுல்காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மகன் NIYEK வயது 14 , மகள் MAINK வயது 10 , லண்டனில் உள்ளனர்… Archived Link மே 6ம் தேதி Guru Krishna என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் மோடியா?

‘’பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கு மோடி செய்த சதிதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா அல்லது வேண்டுமென்றே குசும்புத்தனம் உள்ளவர்கள் செய்த விஷமத்தனமா என்ற நோக்கில் ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: …. பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் …__________________________________ கீழே உள்ள படத்தில் இருப்பது காற்றாலை போல காட்சி தரலாம் ஆனால் இவை மிக வேகமாக சுழலக்கூட்டிய ராட்சத இஞ்சின்களை கொண்ட […]

Continue Reading

தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்ய தீர்மானித்தோம். முடிவுகள் இதோ… தகவலின் விவரம்: …தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?… Archived Link ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?,’’ எனக் கேட்டுள்ளனர். கீழே, மோடியின் புகைப்படம், தி இந்துவில் […]

Continue Reading

36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு மோடி காரணமா?

‘’மல்லையா, நிரவ் மோடி உள்பட 36 தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Linkஅரசியல் I Support Thirumurugan Gandhi என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த ஏப்ரல் 16ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, மல்லையா உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள், நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் […]

Continue Reading

ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால்: பாலிமர் செய்தி உண்மையா?

‘’சீமானுக்கு ராகவா லாரன்ஸ் பகிரங்க சவால்,’’ என்ற தலைப்பில், பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:…ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால் #RaghavaLawrence #Seeman … Archived Link ஏப்ரல் 15ம் தேதி இந்த வீடியோ செய்தியை, பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது. இதில், சீமான் நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி விமர்சித்துப் பேசுகிறார். அதற்கு, ராகவா லாரன்ஸ் […]

Continue Reading

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் உண்மையில் ஒரு முஸ்லீம்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

‘’காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன், பிராமணர் வேஷத்தில் வாழும் ஒரு முஸ்லீம்; அவனது உண்மையான பெயர் தாவூத் நவுஷத் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:…”Dawood Naushad Khan who claimed himself as Brahmin” உண்மையை அறிய கடைசி வரை முழுவதுமாக படிக்கவும். அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் […]

Continue Reading

பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்:பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு #sunnews Archived Link மே 3ம் தேதி இந்த பதிவை, சன் நியூஸ் சேனல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் […]

Continue Reading

பத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி

‘’ 10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தி மற்றும் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்:10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை. சினிமா நடிகைகளுக்கு லைக் ,ஷேர் வரும் .இந்த சகோதரிக்கு ஒரு ஷேர் வருமா ?அப்பிடியே என்னோட Page ah லைக் பண்ணி Support […]

Continue Reading

ஃபானி புயல் ஒடிசாவை தாக்க பாஜக.,தான் காரணம் என்று ராகுல் காந்தி சொன்னாரா?

‘’பானி புயல் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களை தாக்குவதற்கு, பாஜக.,வின் சதிதான் காரணம்,’’ என்று ராகுல் காந்தி சொன்னதாகக் கூறி, பலரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து இங்கே பகிர்ந்துள்ளோம். Nagarajan Sai என்பவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு உண்மையா, பொய்யா என பரிசோதிக்கும்படி, நமது வாசகர் தரப்பில் இருந்து […]

Continue Reading

7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

‘’7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா எனக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம் நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் […]

Continue Reading

கோமதி மாரிமுத்துவின் ஷூ பற்றிய சர்ச்சை!

‘’கிழிந்த காலணிகளுடன் ஓடினேன்,’’; ‘’என்னிடம் நல்ல ஷூ வாங்கக்கூட வசதியில்லை,‘’; ‘’அதிர்ஷ்டக்கார ஷூ என்பதால் பழைய ஷூவுடனே ஓடினேன், அது 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது,’’ என கோமதி மாரிமுத்து பேட்டி அளித்ததாக, சமூக ஊடகங்களில் மாறி மாறி தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒரு நல்ல ஷூ கூட வாங்கித் தர முடியாத வக்கற்ற தமிழக அரசு, மத்திய அரசுகளை கண்டிக்கிறோம் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை விரிவாக ஆய்வு செய்ய […]

Continue Reading

ராமர் கோயில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன?

‘’எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே,’’ என்ற தலைப்பில் ஒரு மீம் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. உண்மை என நம்பி வைரலாகப் பகிரப்பட்டு வரும் இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மார்ச் 21ம் தேதி இந்த ஃபேஸ்புக் பதிவை, Vasanth Kumar என்பவர் வெளியிட்டுள்ளார். இதில், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’எத்தனை […]

Continue Reading

அப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்சா ஷேர் பண்னுங்க,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதில், ஒரு சிறுவன் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்கும்போதே இது மிகப் பழைய புகைப்படம் என தெரிகிறது. அப்துல் கலாமின் குடும்ப புகைப்படம் எனக் கூறியிருப்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். […]

Continue Reading

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி விஜய் பேசியது என்ன?

‘’மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய நடுத்தர மக்களே – நடிகர் விஜய்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோ செய்தி காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர மக்களே! – நடிகர் விஜய். Archived Link ஏப்ரல் 4ம் தேதி தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் குழு […]

Continue Reading

இலங்கை குண்டுவெடிப்பில் 7 பவுத்த தீவிரவாதிகள் கைது?- உண்மை அறிவோம்!

‘’இலங்கையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் கைது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவை Pakkerali Mdali என்பவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிட்டிருக்கிறார். இதில், மேல்சட்டை இல்லாத இளைஞர் ஒருவரை இலங்கை போலீசார் அழைத்துச் செல்கின்றனர். அதேன் மேலே, ‘’இலங்கை குண்டுவெடிப்புக்கு முஸ்லீம்கள் காரணம் […]

Continue Reading

திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு?

‘’திருக்குறளை அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் பாடத்திட்டமாக கட்டாயம் சேர்க்க மத்திய அரசு உத்தரவு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த பதிவை, உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். வேலைக்காரன் சினிமா படக் காட்சியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டத்தில் […]

Continue Reading

இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்: ஜெயலலிதா பற்றி பரவும் ஃபோட்டோஷாப் பதிவு

‘’நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட வேண்டாம்,’’ என மறைந்த ஜெயலலிதா சொல்வது போல ஒரு ஃபோட்டோஷாப் புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பரவி வருகிறது. இதை பார்க்கும்போதே, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதுதான் என தெளிவாக தெரிந்தாலும், ஆயிரக்கணக்கானோர் அதிகம் ஷேர் செய்வதால் இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம். தகவலின் விவரம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதன் ஸ்கிரின்ஷாட்டை இங்கே இணைத்துள்ளோம். Archived Link இந்த பதிவை Muthu Raj […]

Continue Reading

பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி?

பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி என்ற பெயரில், சில வைரல் ஃபேஸ்புக் செய்திகளை காண நேரிட்டது. ஒரே செய்தியை, இரு வேறு புகைப்படங்களை வைத்து பகிர்ந்திருந்தனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன. தகவலின் விவரம்:பிஹாரில் 8 வயது சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் மூவரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி.மனம் இருந்தால் லைக் & ஷேர் பண்ணி […]

Continue Reading

ராகுல் காந்தி இத்தாலியில் வாங்கிய அடுக்கு மாடி கட்டிடம்: செய்தி உண்மையா?

‘’ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள்,’’ என்ற தலைப்பில் வைரல் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்தியாவில் கொள்ளையடித்து ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களை பாருங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் இவர்கள் உண்மையான கொள்ளைக்கூட்டங்கள் மக்களே உணர்ந்து கொள்ள வேண்டும் Archived Link ஏப்ரல் 29ம் தேதி […]

Continue Reading

ராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது?

‘’ராணுவத் தேர்வு கேள்வித்தாள் திருடிய 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது‘’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்திப் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’இந்திய இராணுவத் தேர்விலும் ஊழல்! இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மராட்டியம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர […]

Continue Reading

பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்: ஃபேஸ்புக் வைரல் செய்தி

‘’மத்தியப் பிரதேச பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பேட்டி தர, வீடியோவில் பாஜக பிரமுகர் ஒருவரையும், ஆயுதங்கள் பலவற்றையும் காட்டுகிறார்கள். இதுவரை 19 ஆயிரம் பேர் […]

Continue Reading

இலங்கை மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ?- உண்மை அறிவோம்

‘’இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்’ – இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ#SriLankaAttacks #SuicideBombers #ViralVideo ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிலர் துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு, தங்களது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருக்க, உணர்ச்சிவசமாகப் பேசுகிறார்கள். […]

Continue Reading

ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டும்: உண்மை என்ன?

‘’ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டப்படி, அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அரசு வழங்க வேண்டும்,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 28ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு நல்ல செய்தி பகிரலாமே எனக் கூறி, ஒருவர் விபத்தில் இறந்தால்… அவர் தொடர்ந்து […]

Continue Reading

சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘’சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது,’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிச்சாமிஇது உலக மகா நடிப்புடா சாமி.. Archived Link Political Press Attitude என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரையிலும் 1.64 லட்சம் பேர் ஷேர் […]

Continue Reading

வெவ்வேறு ஷூ அணிந்து ஓடினாரா கோமதி மாரிமுத்து?

‘’2 வெவ்வேறு காலணிகளை அணிந்து ஓடிய கோமதி,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், கோமதி மாரிமுத்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வீடியோவையும் ஆதாரமாக இணைத்து தமிழ் தேசியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதே செய்தியை வைத்து […]

Continue Reading

தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள்: வைரல் செய்தியால் பரபரப்பு

‘’தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தியில் கல்வெட்டு பதிக்கிறார்கள்,’’ என்று கூறி, ஒரு வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. உண்மையில் அப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதைக் கண்டும் காணாது இருக்கும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகமும்,தமிழக அரசும் . இனியும் தமிழன் அமைதி காத்தால் உன் பெருமைமிகு வரலாறும் கல்வெட்டும் காற்றோடு கரைந்து போகும். […]

Continue Reading

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்: மும்பை பங்குச்சந்தை செய்தி உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் என, மும்பை பங்குச்சந்தை வாரியம் கூறியதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மும்பை பங்குச்சந்தை வாரியமான BSE, பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, டிராக்கர் ஓட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, புகைப்படம் […]

Continue Reading