ட்வீட் செய்யப்பட்ட குறுந்தகவல்:
“मोदी सरकार को चार साल पूरे हो गए हैं लेकिन जनता को इन चार साल में जो मिला उसका जनता स्थानीय BJP नेताओं को दे रही है। मोहल्ले में जब जनता के बीच BJP के नेता पहुंचे तो उसके बाद क्या हुआ, इस वीडियो में देखिए.”

மொழிபெயர்க்கப்பட்டது -
“மோடி அரசாங்கம் 4 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறதுஅ அனால் பொது மக்கள் இந்த நான் கு வருடங்களில் அவர்கள் பெற்றதை உள்ளூர் பி ஜே பி தலைவர்களுக்கு திரும்ப அளித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் பி ஜே பி தலைவர் உள்ளூர் சமுதாயத்தினரைச் சந்தித்த பின் என்ன நடந்தது என்பதைப் பார்பதற்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்.”

मोदी सरकार को चार साल पूरे हो गए हैं लेकिन जनता को इन चार साल में जो मिला उसका जवाब जनता स्थानीय BJP नेताओं को दे रही है।
मोहल्ले में जब जनता के बीच BJP के नेता पहुंचे तो उसके बाद क्या हुआ, इस वीडियो में देखिए

“மோடி அரசாங்கம் 4 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறதுஅ அனால் பொது மக்கள் இந்த நான் கு வருடங்களில் அவர்கள் பெற்றதை உள்ளூர் பி ஜே பி தலைவர்களுக்கு திரும்ப அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூர் பி ஜே பி தலைவர் உள்ளூர் சமுதாயத்தினரைச் சந்தித்த பின் என்ன நடந்தது என்பதைப்
பார்பதற்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்.”

எங்களுடைய புலனாய்வின் படி, குறிப்பிட்டபடி இந்த வீடியோ டெல்லியிருந்து அல்ல மற்றும் சமீபத்திய ஒரு வீடியோ அல்ல.

அக்டோபர் 5 , 2017 அன்று, டைம்ஸ் நௌ ந்யூஸ் சேனல் அவர்களுடைய வெப்சைட்டில் இந்த வீடியோவை பதிவேற்றம் (அப்லோட்) செய்தது.

பி ஜே பி-யின் மேற்கு வங்க தலைவர் திலிப் கோஷ் ஒரு கூட்டத்தை (மீட்டிங்கை) நடத்திக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞர்களால் டார்ஜிலிங்கில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

மற்றும், அக்டோபர் 5 2017 அன்று , டைம்ஸ் ஆஃப் இண்டியா வெளியிட்ட செய்தி-

“கொல்கத்தா: பி ஜே பி-யின் மேற்கு வங்க பிரிவு தலைவர் திலிப் கோஷ் , வெளியேற்றப்பட்ட கோர்கா ஜன்முக்தி மோர்சா (ஜி ஜே எம்) தலைவர் பினய் தமங் ஆதரவாளர்களால் கேலிக்கும் , தொல்லைக்கும் ஆளாக்கப்பட்டார். பினய் தமங் , அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இடையூறு செய்யாமல் டார்ஜ்லிங்கை விட்டுச் செல்வதற்கு காவி கட்சியின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஒரு தனி மாநிலம் கோரி ஏற்பட்ட அமைதியற்ற சூழலைத் தொடர்ந்து கோஷ் மூன்று-நாள் பயணமாக மலைப் பகுதிக்கு வந்த போது இந்த நிகழ்வு ஏற்பட்டது.

தமிங்கின் ஆதரவாளர்கள் கோஷ் டார்ஜிலிங் வந்து சேர்ந்த போது அவருக்கு எதிராக ஓரு போராட்டத்தை நடத்தினார்கள். இருந்தாலும் கோஷ் பிரச்சனையைத் தூண்டுவதற்காக மலைக்கு வந்திருப்பதாக சொல்லப்பட்ட கருத்தை மறுத்தார். கரக்பூர் எம் எல் ஏ தமங்கை ஒரு “துரோகி” என அழைத்தார்.

பினாய் தமங்கின் ஆதரவாளர்கள் , கோஷை ‘திரும்பிச் செல்’ ஸ்லோகன்கள் மற்றும் கருப்பு கொடிகளுடன் வரவேற்றனர். அவருடைய உதவியாளர்கள் உடல் ரீதியில் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. திலீப் அவராகவே சாக் பசார் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். பின்னர் கட்சி அவருடைய மூன்று-நாள் நிகழ்ச்சியை ரத்து செய்தது. கோஷ் இந்த நிகழ்விற்காக ஆளும் த்ரிணாமுல் காங்கிரசை குற்றம் சாட்டினார்.

சுருக்கமாக , இந்த வீடியோ பொது மக்களுக்கு தவறான ஒரு அபிப்ராயத்தை அளிப்பதற்கு மற்றும் ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான பாரபட்சமான தோற்றத்தை உருவாக்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது.