பாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்வதற்கு ரத்தன் டாட்டா மறுத்தாரா?

சமூகம் சார்ந்தவை I Social போலிச் செய்தி I Fake News

தவறானது என அறிவிக்கப்பட்ட ஆறு வருடங்கள் பழைய ஒரு செய்தி மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த போலி செய்தியின் தற்போதைய வடிவம் இனவாத சமூக பாகுபாடுகளை தூண்டிவிட மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாரசி இனித்தவரின் தேசப்பற்று பண்புகளை ஒப்பிட முயற்சி செய்கிறது .

இந்த செய்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முன்னாள் வணிக அமைச்சர், ஆனந்த ஷர்மா பாகிஸ்தானிய தொழிலதிபர்களின் திட்டத்தைக் கருதும்படி கோரிக்கை செய்திருந்தும் ரத்தன் டாடா பாகிஸ்தானுக்கு டாடா சுமோ கார்களை விற்பனை செய்வதற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறது. செய்தி : நீங்கள் வெட்கமற்றவராக இருக்கலாம் , நான் இல்லை”~ ரத்தன் டாடா. 26/11 நிகழ்விற்கு சில மாதங்களுக்கு பின் , டாடாக்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள் குழுமம்  , இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அவர்களுடைய ஹோட்டல்கள் அனைத்தையும் மாற்றியமைப்பதற்காக அவர்களுடைய மிகப்பெரிய டென்டரை (தொழில் ஒப்பந்தத கோரிக்கையை) வெளியிட்டிருந்தனர். சில பாகிஸ்தானிய நிறுவனங்கள் இந்த டென்டரைப் பெறுவதற்காக விண்ணப்பித்தனர். அவர்களுடைய ஏலத்தை பலமானதாக்குவதற்கு, பாகிஸ்தானிலிருந்து வந்த இரண்டு பெரிய தொழிலதிபர்கள் ரத்தன் டாடா அவர்களை சந்திப்பதற்கான நேரம் அளிக்காததால் , அப்பாயின்ட்மென்ட் பெறாமல் மும்பையில் உள்ள பாம்பே ஹவுசிற்கு (டாடா தலைமை அலுவலகத்திற்கு) வந்திருந்தனர் . அவர்கள் பாம்பே ஹவுசின் காத்திருப்பு அறையில் காத்திருக்க வைக்கப்பட்டனர் மற்றும் சில மணி நேரங்களுக்கு பின் ரத்தன் டாடா அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் யாரையும் சந்திக்க மாட்டார் என்ற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எரிச்சலடைந்த இந்த இரண்டு பாகிஸ்தானிய தொழிலதிபர்களும் அவர்களுடைய துதரகம் மூலமாக  ஒரு காங்கிரஸ் அமைச்சரைச் சந்தித்தனர். பின்னர் இந்த அமைச்சர், ஆனந்த் ஷர்மா உடனடியாக ரத்தன் டாடாவிற்கு ஃபோன் செய்து இரண்டு பாகிஸ்தானிய தொழிலதிபர்களையும் சந்திக்கும் படி கோரிக்கை செய்தார் மற்றும் அவர்களுடைய டென்டரை “ஆர்வத்துடன்” கருதும்படி கோரினார்.

ரத்தன் டாடா ”நீங்கள் வெட்கமற்றவராக இருக்கலாம், நான் அல்ல”  என பதிலளித்து ஃபோனை கீழே வைத்தார். சில மாதங்களுக்கு பின் , பாகிஸ்தானிய அரசு பாகிஸ்தானுக்கு டாடாசுமோக்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு ஆர்டர் அளித்த போது , ரத்தன் டாடா அந்த நாட்டுக்கு ஒரே ஒரு வாகனத்தைக் கூட அனுப்ப மறுத்துவிட்டார். இதுவே அவருடைய தாய்நாட்டிற்கு அவர் காண்பிக்கும் மரியாதை மற்றும் அன்பு. அவர் தேசத்தை பணம் மற்றும் தொழிலுக்கு மேல் மதிப்பவர். பெரும்பாலும் தங்களுடைய பாகிஸ்தானிய எஜமானர்களை மகிழ்ச்சியாக வைப்பதற்கு தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் மிகழ்விக்க முயற்சி செய்பவர்களாக அறியப்படும் கெஜ்ரிவாலும் அவரைப் போன்றவர்களும் டாடாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம், இந்திய துணை கண்டத்தில் உள்ள இரண்டு சோரஸ்ட்ரிய சமுதாயங்களில் ஒன்றை உள்ளடக்கிய பாரசி பின்னணியைக் கொண்டவர் ரத்தன் டாடா என்பதை

மறந்துவிடக்கூடாது. அவருடைய சமுதியாத்தினர் இந்தியாவில் மிகக் குறைந்தவர்களே ஆனாலும் அவர்களில் ஒவ்வொருவரும் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளனர். டாடா குடும்பம் முழுவதும் தேசப்பற்று நிறைந்தவர்கள் எனும் போது, இலவசப் பொருட்களுக்காக பிச்சையெடுப்பதில் அல்லது பாகிஸ்தான் குண்டுகள் வைப்பதில் முனைப்புடன் பணியாற்றும் சில சிறுபான்மையினரும் நம்மிடையே உள்ளனர். மற்றும் அவர்கள் கண்டுபிடிக்கப்படும் போது , அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கிறார்கள் மற்றும் தீவிரவாதிகளை தியாகிகள் ஆக்கிவிடுகின்றனர். இந்தியாவில் தங்கியிருந்து பாகிஸ்தானிய கைக்கூலிகளாக வேலை செய்யும் தகுதியற்ற தோல்வியாளர்கள் அனைவரிடமும் இது சென்றடையும் வகையில் இதனைப் பகிரவும் .

தற்போது, பல ஃபேஸ்புக் பேஜ்கள் மற்றும் அக்கவுன்டுகளால் இந்த தகவலின் வெவ்வேறு வடிவங்கள்  பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

மற்றொன்று:

“டாடா குழுமம் பாகிஸ்தானிய அரசுகளின் பல-கோடி மதிப்பிலான வணிகத் திட்டத்தை நிராகரித்தது. டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா “இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு நாட்டுடன் எந்த தொழிலும் செய்ய முடியாது.” எனக் கூறி நிராகரித்தார்.

தேசப்பற்று மிக்க இந்த செய்கைக்கு ரத்தன் டாடாவிற்கு ஒரு பெரிய வணக்கம்.

துரதிஷ்டவசமாக, பண ரீதியிலான லாபத்தை விட தேசப்பற்று மற்றும் தேசிய கண்ணியத்த்ற்கு இத்தகைய முக்கியத்துவம் அளிக்கும் இவரைப் போன்ற வெற்றிகரமான மக்கள் வெகு சிலரே இந்தியாவில் இருக்கிறார்கள்.

நாங்கள் உங்களை வணங்குகிறோம்!”

இந்த தகவல் முதலில் தோன்றிய இடம் அறியப்படவில்லை, ஆனால் ஆகஸ்ட் 8 2012 தேதியிடப்பட்ட பாரத் ஆட்டோஸ் வெப்சைட்டில் ஒரு செய்தி கட்டுரையில் வெளியிடப்பட்டது, இந்த செய்திக்கட்டுரை,  பாகிஸ்தான் காவல்துறை உபயோகிப்பதற்கு டாடா குழுமத்திலிருந்து டாடா சுமோ க்ரான்டே வாங்குவதற்கு பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்தது. இந்த செய்திகட்டுரைக்கு பின், இந்த தகவல் ஃபேஸ்புக் , மற்றும் வெவ்வேறு ராணுவ மற்றும் மோட்டார் வாகன மன்றங்கள் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ளாட்ஃபார்மில் /சமூக தொடர்பு மன்றங்களில் பரவத் தொடங்கியது . இருந்தாலும் , இந்த தகவல் உண்மையல்ல.

“நீங்கள் வெட்கமற்றவராக இருக்கலாம் ….. நான் அல்ல: பாக்கிஸ்தானியருக்கு டாடாவின் பதில் ‘ என தலைப்பிடப்பட்ட ஒரு யுட்யூப் வீடியோவை 6 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் மற்றும் 10000 ‘லைக்’ செய்திருக்கிறார்கள். கடந்த ஆறு வருடங்களாக பரப்பட்டு வரும் அதே கதையையே இது சொல்கிறது.

 

இந்த தலைப்பில் டாடா மோட்டார்சின் அலுவலக இணையதளத்தில் எந்த செய்தி வெளியீடுகளையும் எங்களால் காண முடியவில்லை. இருந்தாலும் , ஜூலை 16,2013 அன்று டாடா மோட்டார்சின் அலுவலக ட்விட்டர் அக்கவுன்டிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு குறுந்தகவல் இந்த செய்தி பொய் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் இந்த செய்தி தொடர்பாக டாடா மோட்டார்சின் செய்தி தொடர்பாளரிடமிருந்து வந்த அலுவல் ரீதியிலான ஒரு பதில் கீழே அளிக்கப்பட்டுள்ளது: “இந்த செய்தி தவறானது – கம்பெனி இத்தகைய எந்த ஆர்டரையும் பெறவில்லை, மற்றும் இந்தியாமோட்டார் வாகனங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வணிகம் வரையறுக்கப்பட்ட பட்டியலில் உள்ளது. அதனால், பாகிஸ்தான் டாடா மோடார்சில் எந்த ஆர்டரும் செய்திருப்பதற்கான கேள்வி எழவே இல்லை.”

@RNTata2000 வணக்கம் சார், வெகு காலத்திற்கு முன் பாகிஸ்தானுக்கு டாடா சுமோ சப்ளை செய்வதற்கு நீங்கள் மறுத்ததாக நான் வாசித்தேன், இது உண்மையா ?

@TheMayanks இது உண்மையல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான்  இடையே வணிகத்தை முடிவு செய்யும் தற்போதைய விதிகளின் படி, ஆட்டோமொபைல் கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளது.

ட்விட்டர் விளம்பரங்கள் தகவல் மற்றும் இரகசியம்/தனிமை காப்பது

டாடா மோட்டார்சின் மற்ற ட்வீட்டுகளைப் பார்க்கவும்

ட்விட்டர் விளம்பரங்கள் தகவல் மற்றும் இரகசியம்/தனிமை காப்பது

@RNTata2000 வணக்கம் சார், வெகு காலத்திற்கு முன் பாகிஸ்தானுக்கு டாடா சுமோ சப்ளை செய்வதற்கு நீங்கள் மறுத்ததாக நான் வாசித்தேன், இது உண்மையா ?

@TheMayanks அதனால், பாகிஸ்தான் மோட்டார் வாகனங்களுக்காக டாடா மோட்டார்சில் ஆர்டர் செய்த கேள்வியே எழும்பவில்லை.

ட்விட்டர் விளம்பரம் தகவல் மற்றும் தனிமைக்காப்பது

டாடா மோட்டார்சின் மற்ற ட்வீட்டுகளைப் பார்க்கவும்

ட்விட்டர் விளம்பரங்கள் தகவல் மற்றும் இரகசியம் காப்பது

அதனால் , இந்த தகவல் ஒரு போலி தகவல் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய தேவையில்லை. இத்தகைய தகவல்கள் நீண்ட காலமாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது மற்றும் வழக்கமான கால இடைவெளிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் , நம்முடைய இனவாத சமூக பாகுபாடுகளுக்கு பொருந்தும் அல்லது தூண்டும் எந்த தகவலையும் நாம் தெரிந்து கொண்டு ஃபார்வார்டு செய்வதை நிறுத்தினால் மட்டுமே இது நடக்கும்.