ஃபாக்ட்க்ரெசென்டோ

இந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன?

மே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்தர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டது. ஏறக்குறைய 1 லட்சம் பின் தொடர்வோரைக் கொண்ட ‘ஹரியானா கி பாத்’ (ஹரியானா விஷயங்கள்) என பெயரிடப்பட்ட மற்றொரு ஃபேஸ்புக் பக்கமும் இந்த படத்தை வெளியிட்டது.

“ராஜஸ்தானில் ஒரு விவசாயி ரூ 1,000 கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததற்கு கையிறால் கட்டி ,கைது செய்யப்பட்டு அடிக்கப்படுகிறார். எங்கே நீதி?” என்ற தலைப்புடன் இந்த போஸ்ட் ட்விட்டரிலும் பகிரப்பட்டு வருகிறது.

இங்கே இதன் ஒரு உதாரணத்தைப் பார்க்கவும்.

குளிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சின்படி, வைரலான இந்த படத்திற்கான நிகழ்வு ஏப்ரல் 10 2016 ல் நடந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கட்டுரையின் படி, ராஜ்கோட்டில் , சொந்த மருமகளைக் கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபரை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்துகிறார். நகர காவல்துறையினர் ‘சர்பாரா’ என்றழைக்கப்படும் பொது இடத்தில் அவமானப்படும் நடைமுறையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

பகிர்ந்து கொள்ளப்படும் படம் மற்றும் அதன் அடிப்படையிலான வெவ்வேறு பொய் கதைகள் / விளக்கங்கள் சோஷியல் மீடியாவில் பரப்பபட்டு வருகிறது.

ஹிந்துஸ்தான் டைமிசின் அலுவல் ரீதியிலான ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதையை வெளியிட்டது. இங்கே பார்க்கவும்….மேலும் இது ஒரு போலி செய்தியாக இருந்தது என்பதை உண்மையை பரிசோதிக்கும் வெவ்வேறு இணையதளங்களும் உறுதி செய்தது. தயவுசெய்து பார்க்கவும் :

ஆயுப் ஆல்ட்ந்யூஸ்

இந்த வைரல் (இன்டர்னெட்டில் வேகமாக பரவியிருக்கும்) படத்திற்கான இந்த நிகழ்வு, ஏப்ரல் 10 2016ல் நடந்தது மற்றும் சோஷியல் மீடியாவில் தவறான கதையை / விளக்கத்தை அளிப்பதற்கு வெவ்வேறு மக்களால் உபயோகிக்கப்பட்டு வருகிறது